-
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 5
ரிச்சர்ட் பர்டன் பீடர் ஒடூல் நடிப்பில் தி பெக்கட் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலே இந்தியில் ராஜேஷ்கன்னா அமிதாப் நடிப்பில் நமக் ஹராம் (உப்புத்துரோகம்) என்று வெளிவந்து அதன் தழுவலாக ஜெமினி சிவாஜி இணைவில் உனக்காக நான் ஆனது!!
https://www.youtube.com/watch?v=D3Dfj-Zi_0U
https://www.youtube.com/watch?v=DJNoWuLfxhc
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
-
நண்பர்களே
நமது அன்பிற்கினிய நெய்வேலி வாசு சாரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் இணைப்புக் கிடைக்கவில்லை அல்லது இணைப்புக் கிடைத்தாலும் ரெஸ்பான்ஸ் இல்லை. யாரேனும் தொடர்பு கொள்ள முடிந்ததா, அவர்கள் பகுதி எப்படி உள்ளது, விவரம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
-
Courtesy: Tamil Hindu
சாவித்திரி 10
‘நடிகையர் திலகம்’ என போற்றப்பட்டவர்
புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளரான சாவித்திரி (Savitri) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அன்றைய மதராஸ் மாகாணத் தின் குண்டூர் மாவட்டம் சிறாவூ ரில் (தற்போது ஆந்திரப் பிரதேசத் தில் உள்ளது) 1935-ல் பிறந்தார். 6 மாதக் குழந்தையாக இருந்த போது தந்தையை இழந்தார். உள்ளூரில் உள்ள கஸ்தூரிபா உயர்நிலைப் பள்ளியில் பயின் றார்.
l சிஸ்தா பூர்ணய்யா சாஸ்திரிகளிடம் இசை, நடனம் பயின்றார். குழந்தை நட்சத்திரமாக விஜயவாடாவில் மேடைகளில் தோன்றி நடித்தார். என்.டி.ராமாராவ் நடத்திய நாடக கம்பெனியில் நடித்தார். பின்னர் சொந்தமாக ‘நவபாரத நாட்டிய மண்டலி’ என்ற நாடக கம்பெனியை தொடங்கினார். இவரது ‘ஆத்ம வஞ்சனா’ நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.
l 1949-ல் ‘அக்னி பரீட்சா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அப்போது இவருக்கு வயது 14. முதிர்ச்சியான அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று கூறி, நிராகரிக்கப்பட்டார். பிறகு, ‘சம்சாரம்’ என்ற படத்துக்கு தேர்வானார். அதிக ரீடேக் வாங்கியதால், முக்கிய வேடத்தில் இருந்து நீக்கப்பட்டு, துணை வேடம் கொடுக்கப்பட்டது.
l ‘பாதாள பைரவி’ திரைப்படத்தில் 1951-ல் நடனமாடினார். ‘பெல்லி சேசி சூடு’ திரைப்படத்தில் 2-வது நாயகியாக இவர் நடித்தது, முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் இவரது நடிப்பும் நடன பாவங்களும் பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தது.
l ‘தேவதாசு’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். தொடர்ந்து ‘சந்திரஹாரம்’, ‘அர்தாங்கை’, ‘மிஸ்ஸம்மா’, ‘டோங்கா ராமுடு’, ‘மாயாபஜார்’, ‘ஆராதனா’, ‘ரக்த திலகம்’, ‘பூஜாபலன்’ என ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தார்.
l ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார். ‘மனம் போல் மாங்கல்யம்’ திரைப்படத்தில் நடித்தபோது, ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார்.
l 1950-களின் மத்தியிலும் 60-களிலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒருசில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
l களத்தூர் கண்ணம்மா, மிஸியம்மா, திருவிளையாடல், கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பரிசு, பாசமலர், பாவ மன்னிப்பு, கைகொடுத்த தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தன.
l தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டார். ‘சிவராக்கு கிலேடி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவர் விருதை 1960-ல் பெற்றார். தயாரிப்பாளர், இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘தென்னிந்திய மீனாகுமாரி’ என்று அழைக்கப்பட்டார்.
l அன்பு, பாசம், நேசம், காதல், கோபம், ஆவேசம், வீரம், நகைச்சுவை என எந்த வகையான உணர்ச்சியாக இருந்தாலும் இயல்பாகவும், தனித்துவம் வாய்ந்த திறனுடனும் வெளிப்படுத்தினார். பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், தனது அபார நடிப்புத் திறனால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த வருமான சாவித்திரி 46-வது வயதில் (1981) மறைந்தார்.
-
http://www.indya101.com/gallery/Sing...01(dot)com.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வளமாக வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவருடைய இசை வெள்ளத்தில் நம்மை இன்னும் இன்னும் நீந்த வைக்க இறைவன் அவருக்கு நூறாண்டுகளுக்கு மேல் ஆயுள் தரவேண்டும்.
அவர் பாடிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று...
சித்ரா பௌர்ணமி படத்திலிருந்து...
மெல்லிசை மன்னரின் இசையில்..
https://www.youtube.com/watch?v=fA0o1I2lflo
-
Fantastic Song from Raja Nagam
https://youtu.be/spMEpLVlan8
-
-
Cika is fine. he is not in mood to post due to flood in chennai. he is fine in muscat
-
-
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை என்னும் பூங்காற்று வீசும் பொழுது காதல் என்னும் மழை கொட்டுவது மனித உணர்வின் இயற்கையான நிகழ்வாக அமைந்துள்ளது. அப்பொழுது ‘சமா’ என்று இந்திக் கவிஞர்கள் அழைக்கும் சுற்றுச்சூழல் அழகாக ஆகிவிடுகிறது. இளமையின் ஆட்சியில் காதல் அரங்கேறும் சூழலை இரு விதமான பார்வைகளில் அணுகும் பாடல்களைப் பார்ப்போம்.
இந்த இரண்டு பாடல்களும் மிகச் சிறந்த இசையமைப்பு, நெஞ்சத்தை அள்ளும் பாடகரின் குரல், வளம் செறிந்த கவி வரிகள் ஆகியவற்றால் மட்டுமின்றி மோசமான பாடல் காட்சியாக்கம் என்ற வகையிலும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன.
இந்திப் பாடல்:
படம்: கர் கர் கீ கஹானி (ஒவ்வொரு வீட்டின் கதை)
பாடலாசிரியர்: ஹஸ்ட்த் ஜெய்ப்பூரி
பாடியவர்: கிஷோர் குமார்
இசை: கல்யானஜி ஆன்ந்த்ஜி
சமா ஹை சுஹானா சுஹானா
நஷே மே ஜஹான் ஹை
கிஸி கோ கிஸி கீ கபர் ஹீ கஹான் ஹை
ஹர் தில் மே தேக்கோ முஹபத் ஜவான் ஹை
பொருள்:
சுற்றுச்சூழல் உள்ளது சுகமாக
பற்றியுள்ளது (கள்ளின்) மயக்கத்தை
யாருக்கும் மற்றவருடைய நினைவு (இல்லை)
யாருடைய இதயத்தில் காதல் இளமை உள்ளதோ
அங்கே பார்வைகள் பார்வையால் பாடுகின்றன
எவர் உள்ளம் கவர்ந்தாரோ அவர் அறிமுகம் நேர்கிறது
உள்ளத்தின் இந்த அதிசயக் கதையை உற்றுநோக்கி
உரைக்கின்றன விழிகள் நெஞ்சம் ஊமையாயிற்று
உள்ளங்கள் சங்கமித்து அழகாக ஆயின
அவரவர் காதலர் மேல் பைத்தியம் ஆனது
காதலர் வாழும் இடமே காதலும் வாழும்
காதல் எதுவோ காணும் தர்மமும் அதுவே
இப்பாடலைவிட மிக அழுத்தமான பொருள் உடைய கண்ணதாசன் கவி வரிகளும், இந்திப் பட நாயகியாக நடித்த பாரதியைவிட அழகும் கவர்ச்சியும் மிகுந்த தேவியின் தோற்றமும் அதைவிட அழகான நடிப்பும் தமிழ்ப் பாடலை ஒப்பிட இயலாத உயரத்திற்கு இட்டுச் செல்கிறது.
தமிழ்ப் பாடல்:
படம்: பகலில் ஓர் இரவு
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம்
அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்…
தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு…
மண்ணில் அணையா?
அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய்த் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ?
மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ?
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு…
-
Courtesy: Tamil HIndu
காற்றில் கலந்த இசை 33: மூங்கில் வனம் இசைக்கும் கீதம்
திரைப்படங்களுக்கான இசையமைப்பு என்பது ஏனைய கலைகள்போலவே பல்வேறு வாழ்வியல் கூறுகளை உள்வாங்கும் திறனின் அடிப்படையில் அமைந்தது. ஒரு பாடலைக் கேட்கும்போதே இது சிறு நகரத்தில் நடக்கும் கதை, இது வயல்வெளி சார்ந்த கிராமத்தில் நடக்கும் கதை, இது மலையடிவார கிராமத்தின் கதை என்று பிரித்தறிய முடிகிறது என்றால், அந்தப் பாடல் இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து பிறந்தது என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் திரைப்பாடல்களில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட இசைப் பின்னல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். மோகன், நளினி நடிப்பில் 1984-ல் வெளியான ‘மகுடி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதற்கான உதாரணங்களில் அடங்குபவை. (படத்தின் மற்ற இரண்டு பாடல்கள் சுமாரானவை!)
அப்பாவித் தோற்றம், நன்கு முடியப்பட்ட குடுமி என்று நாட்டுப்புறப் பாடகன் வேடம் மோகனுக்கு. வேடம் சற்றும் பொருந்தவில்லை. எனினும், இளையராஜாவின் அருட்கடாட்சம் நிரம்பப் பெற்றதால், புகழ்பெற்ற பாடல்களுடன் தொடர்புடைய நடிகராகத் திகழும் மோகனுக்கு இப்படத்திலும் அழகான பாடல்கள் கிடைத்தன.
காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வழியும் கிராமிய இசைக் கலைஞனின் திறமையை ஒழுங்குபடுத்தும் பெண், கர்நாடக இசையை அவனுக்குக் கற்றுக்கொடுப்பாள். மெல்ல மெல்ல அவன் மீதான பரிவு காதலாக மலரும் காட்சியமைப்பு. ‘நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்’ எனும் பாடலை அந்தக் காட்சிக்குத் தந்தார் இளையராஜா. எஸ்பிபி, ஜானகி பாடிய இந்தப் பாடல் பாமர ரசிகனுக்குக் கர்நாடக இசையின் சுவையைப் பகிர்ந்தளித்த படைப்பு. திரைப்பாடல்களில் அபூர்வமாய்ப் பயன்படுத்தப்படும் ரசிகரஞ்சனி ராகத்தின் சாயலில் அமைந்த பாடல் இது.
நீளமான பல்லவியை நாயகி பாட, அதைப் பிரதியெடுத்து நாயகன் பாட என்று பாடல் நீண்டுகொண்டே செல்லும். நிரவல் இசையில் வீணைக்கும், ஒற்றை வயலினுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். தொடர்ந்து புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையில் இசைப் பரிமாற்றம். அதைத் தொடர்ந்து, பரந்த நிலப்பரப்பாக விரியும் வயலின் இசைக்கோவை என்று அற்புதங்களை நிரப்பியிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், நதியின் மேற்பரப்பில் நழுவிச் செல்லும் மெல்லிய நீர்ப்படலத்தைப் போன்ற ஒற்றை வயலின் இசையை ஒலிக்கவிடுவார்.
பின்னாட்களில் இளையராஜா வெளியிட்ட ‘ஹவ் டு நேம் இட்’ எனும் ஆல்பத்தின் சில கூறுகளை இப்பாடலில் உணர முடியும்.
இளையராஜா பாடிய ‘கரட்டோரம் மூங்கில் காடு’ பாடல், புல்வெளிகள், ஓடைகள், ஊசியிலைக் காடுகள் நிறைந்த மலைக் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல். கிராமிய இசைக் கலைஞனின் புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் எளிய, இனிய இசையுடன் பாடல் தொடங்கும். பச்சைப் புல்வெளிகளால் போர்த்தப்பட்ட குன்றுகளில் பட்டு எதிரொலித்து, அந்த நாட்டுப்புறப் பாடகனிடமே வந்து சேரும் கணத்தில், ‘கரட்டோரம் மூங்கில் காடு…’ என்று அவன் பாடத் தொடங்குவான். இயற்கையை நேசித்துக்கொண்டே வழிப்போக்கனைப் போல் அலைந்து திரியும் அந்த கிராமிய இசைக் கலைஞன், கண்ணில் படும் எல்லா விஷயங்களையும் வியந்து பாடுவதுபோன்ற காட்சியமைப்பு. எளிய, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.
இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் என்றாலே, ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பின்னியெடுக்கும் இளையராஜா இப்பாடலில் மிகக் குறைவான இசைக் கருவிகளையே பயன்படுத்தியிருப்பார். எனினும், நகர வாசனையின் தீண்டலுக்கு அப்பாற்பட்ட தொலைதூர கிராமத்தின் அழகை வர்ணிக்கும் பாடல் வரிகளும், இளையராஜாவின் குரலும் பாடலை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்லும்.
நிரவல் இசையில் பூச்செடிகளை அசைத்தபடி பரவிச் செல்லும் காற்றைப் போன்ற புல்லாங்குழல் இசையை ஒலிக்கவிடுவார். தடைகளற்ற வெளியில் காற்று அலைந்து திரியும் பகுதியில் அமைக்கப்பட்ட மின்சார ட்ரான்ஸ்பார்மரிலிருந்து வரும் மெல்லிய ரீங்காரம் ஒலிக்கும். அந்த ரீங்காரத்தை ஸ்வீகரித்துக்கொண்டு பாடலைத் தொடர்வான் கிராமத்துக் கலைஞன். ‘தொட்டாப் புடிக்கும் அந்த/ துடிக்காரன் போட்ட கம்பி/ சீமையிலே சேதி சொன்னா… இங்க வந்து பேசுதில்லே’ எனும் வரிகள் ஒரு கிராமத்தானின் வியப்பை இயல்பாகப் பதிவுசெய்யும்.
‘காட்டச் சுத்தி வண்டு பறக்குது…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பாடலுக்குள் மூழ்கித் திளைக்கும் களிப்பில் ‘உய்யாரா உய்யாரா உய்யார உய்யா’ எனும் வெற்று வார்த்தைகளைப் பாடுவான் பாடகன். வரப்பில் நடந்து செல்லும் பெண்கள் அந்த வார்த்தைகளைப் பாடியபடி கடந்து செல்வதைப் போன்ற பெண் குரல்களின் கோரஸ் ஒன்றை ஒலிக்கவிடுவார் ராஜா. அதைத் தொடர்ந்து எங்கோ குழந்தை அழும் சத்தமும், அதை அதட்டும் அதன் தாயின் குரலும் ஒலிக்கும்.
குழந்தையைத் திட்ட வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒரு சிறு தாலாட்டு பாடுவான் நாயகன். ‘… அத்தை அடிச்சா அம்மா இருக்கா, அழுவாதே… அந்த அம்மாவே அடிச்சிப்புட்டான்னு அழுவுறியா… கவலப் படாதடா’ எனும் ஆறுதல் வார்த்தைகளுக்குப் பின்னர், ‘என் பாட்டு இருக்கு அழுவாதே அதக் கேட்டு ஒறங்கு பொழுதோடே’ என்று பாடும்போது இளையராஜாவின் குரலில் இருக்கும் வெம்மை அத்தனை கதகதப்பைத் தரும். அந்தத் தாலாட்டில் மயங்கி உறக்கத்தைத் தழுவுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல, நாமும்தான்.