'இன்று நேற்று நாளை' 2-ம் பாகம்
விரைவில் உருவாகிறது 'இன்று நேற்று நாளை' 2-ம் பாகம்- Tamil HINDU
http://tamil.thehindu.com/multimedia...u_2456805f.jpg
'இன்று நேற்று நாளை' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கின்றன.
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க, புதுமுக இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்தார்கள்.
ஜூன் 26ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெளியான 3 நாட்களில் சுமார் 3 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும், திரையரங்குகளும் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
'இன்று நேற்று நாளை' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தில் கதை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இன்னும் சில தினங்களில் 'இன்று நேற்று நாளை-2' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.