-
Polla Vinayen Nin perum Cheer Pugazumaru Ondrariyen...WOW what an opening verse..why this birth and suffering..
IR's voice was divine. The main part here is that you have to really understand the bhakthi portion of thiruvasagam and sing it. No other singer could have done it. Spiritual and philosophical levels of Thiruvasagam are higher. Thats why its called Thiruvasagam ennum Then..and also the verses..
Take this example: How could some one imagine if X Y Z sang enge sellum from sethu....IR did it and it fitted..there have been cases..where it has gone wrong..
How do u expect A B C to sing...Naanar en ullam ar...Sing it urself and also ask the so called competent people whom think can sing it...i am sure they can parallel the genius of IR in rendering those verses...
IR is not ordinary person when it comes to religion..He was written a book on Vivekcudamani which is high in the advaita philosophy...
-
If we go back in this thread, some foreign reviewer wrote that IR's voice was good (for the oriental portions or polla vinayaen) while the english voice for the same passage sounded unimpressive. For an album like TiS it is the emotion and emotional understanding of the song that counts and not the "quality" of the singer. And as humans anyone can feel and understand the emotion associated and empathize with it.
-
இசைப் புலமையும், அறிவுக்கூர்மையும் உடையவரான இளையராஜவுக்கே நிச்சயமாக தன்னுடைய திருவாசக இசைக் கோலம் சாதாரணமானது என்பது தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. திருவாசகத்தை இசைக்க ஒரு சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா தேவையில்லை. சென்னையில் சினிமாவுக்கு வாசிக்கும் திறமையான இசைக் கலைஞர்களே போதும் என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் ஹங்கேரியின் சிம்பனி ஆர்க்கெஸ்ட்டிராவைப் பயன்படுத்தி ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து இப்படி ஒரு சாதாரண விஷயத்தை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
அவருடைய ஈகோதான். சினிமா இசைத்துறை தன்னைக் கடந்து போய்விட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதில் அவர் கோலோச்சிய காலத்திலும் அவரது ஈகோ மற்ற திறமையாளர்களை அங்கீகரித்ததில்லை. ஹவ் டு நேம் இட் ஆல்பத்தில் அவருடைய அருமையான இசைக் கோர்வையை பல மடங்கு சிறப்பாக்கியதில் அதை வயலினில் வாசித்த வி.எஸ்.நரசிம்மனின் பங்கு முக்கியமானது. ஆனால் நரசிம்மனை அவர் பகிரங்கமாக அதற்காக பாராட்டிப் பேசியதில்லை. புன்னகை மன்னன் படத்தில் காதல் தீம் இசையை இளையராஜா இயற்ற அதை கம்ப்யூட்டர் சீக்வென்ஸர் முறையை முதன் முதலாக பயன்படுத்தி வாசித்த கலைஞர் திலீப் என்கிற ஏ.ஆர். ரஹ்மான் என்று செய்திகள் வெளியானபோதும் ராஜா அதை மறுத்ததும் இல்லை. ஏற்றதும் இல்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி அவர் பொது வெளியில் பேசுவதில்லை.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பாளரானதும் முதல் பட கேசட் உறையிலேயே கோரஸ் பாடகர்கள் பெயர் முதல், புல்லாங்குழல், டிரம்ஸ், கிடார் என்று முக்கிய கருவிக் கலைஞர்கள் பெயர்கள் வரை வெளியிட தொடங்கினார். பல ஆண்டுகள் கழித்துதான் ராஜாவின் கேசட் உறையில் வேறு வழியில்லாமல் இந்த மாற்றம் வந்தது. ஏராளமான புகழ் வந்த பிறகும் ஈகோவை கை விட முடியாமல் இருக்கும் மன நிலைதான் சாமியார் இமேஜை உருவாக்கி, ஆன்மீகம் என்ற பெயரில் தத்துவ உளறல்களைப் புத்தகமாக்கி, ராஜாவைப் புதுப் புது உத்திகளை நோக்கி அலைய வைக்கிறது. சினிமா இசையில் ராமநாதனை விஸ்வநாதனும், விஸ்வநாதனை இளையராஜாவும், இளையராஜாவை ரஹ்மானும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பது சரித்திர உண்மை. கால ஓட்டத்தில் இது இயல்பானது என்பதை விஸ்வநாதன் உணர்ந்து ஏற்றதுபோல ராஜாவால் முடியவில்லை என்பதற்கு தொடர்ந்து பல அடையாளங்கள் இருக்கின்றன.
மீடியா இப்போதும் கேட்க மறந்த, தயங்குகிற கேள்வி இங்கே முக்கியமானது. இளையராஜாவுக்கு மேஸ்ட்ரோ பட்டம் வரக் காரணமாயிருந்த அவர் இயற்றிய சிம்பனி இசை பத்தாண்டுகளுக்கு மேலாகியும் ஏன் இன்னமும் வெளியிடப்படாமலே இருக்கிறது? நிஜமாகவே அது இந்த திருவாசகத்தை விட சிறப்பான இசை முயற்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அது படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தபோது அவர் செய்த பணி. சினிமா துறை கை நழுவிப் போனபிறகு ஈகோவின் தள்ளாட்டத்தில் செய்த திருவாசகம் அல்ல.
இப்போது இந்த திருவாசக இசைக் கோவையின் நோக்கம்தான் என்ன? பக்தியைப் பரப்புவதா? ஓதுவோரின் எளிய இசையில் கேட்கும்போது கிடைக்கும் உருக்கம் கூட இதில் இல்லை. கடினமான் வரிகளை இசை இன்னமும் கடினமாக்குகிறது. பக்தி நோக்கம் அல்ல என்றால் வேறு எதற்காக திருவாசகம் ? இலக்கிய மாகவா? அப்படியானால் பொழிப்புரையையும் எளிய தமிழில் கூடவே எழுதி இசையமைக்க வேண்டும்.
“புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்” என்ற மெட்டுக்கு, “என்னில் நீ உறையும் அன்பே” என்று ஏதோ ஒரு பாட்டு எழுதிப் போட்டாலும் விற்கும்தானே?
விற்பதற்கான உத்திகளில் , விற்பனைக்கான கவன ஈர்ப்புக்கான உத்திகளில் திருவாசகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளாவிய தமிழர்களில் இன்று தமிழ்ப் புத்தகங்கள், சினிமா சி.டிக்கள் இவற்றின் விற்பனையில் கணிசமான பணம் கிடைப்பது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடமிருந்துதான் அவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சைவப் பற்றை வியாபாரத்துக்கு பயன்படுத்த திருவாசகம் சிறந்த வழி என்பதில் சந்தேகம் இல்லை.
சைவ பக்தி , வியாபாரம் இரண்டிலும் ஆர்வம் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கக்கூடிய கத்தோலிக்க கிறித்துவ பாதிரியார்கள் ஏன் இந்த திருவாசக இசையை வெளியிடுவதில் தீவிரப் பங்கேற்றார்கள்? கத்தோலிக்கப் பாதிரியும் தமிழ் மைய அமைப்பாளருமான அருட்திரு ஜெகத் கஸ்பார் ‘புதிய பார்வை’ இதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லுகிறார்: “திருவாசகம் ஓர் அற்புதமான பக்திப் பனுவல். நான் மாணவனாக இருந்தபோதே படித்துப் படித்து உருகிப் போயிருக்கிறேன். அதன் தத்துவ தரிசனைத்தை சிறு பிராயத்திலேயே உணர்ந்தவன். ஏகன்/அநேகன், அன்பே உண்மையான் வழிபாடு என்பன போன்ற மாணிக்க வாசகரின் தத்துவ வெளிப்பாடுகள் மதங்களை கடந்து நேசிக்கப்படுபவை. எனக்கு மிகவும் பிடித்த மறையாக திருவாசகத்தை பார்க்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.
அதெல்லாம் கஸ்பார் அறிந்துணர்ந்த திருவாசகம் நம்க்கு கேட்கக் கிடத்திருக்கும் திருவாசகத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?
அதில் ஆறாவது பாட்டிலே ஆரம்பத்திலேயே மாணிக்க வாசகர் சொல்லுகிறார்: “கற்றை வார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாத நண்ணி , மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றில்லாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சும் ஆறே!”
அதாவது சிவனை தலை முதல் பாதம் வரை கண்டபின்னும் இன்னொரு தெயவம் உண்டென்று சொல்லுகிற அறிவில்லாதவனைப் பார்த்தால் நிச்சயம் பயப்பட வேண்டும். பாம்புக்கு பயப்பட வேண்டாம். பொய்யர் சொல்லும் மெய்க்கும் பயப்பட வேண்டாம் எண்கிறது இந்தப் பாடல்.
சிவனை அடி முதல் நுனி வரை இன்னும் காணாதவர்கள்தான் ஏசுவைத் தொழுது கொண்டிருக்க முடியும் என்றுதானே இதற்கு பொருள். கண்டபின்னும் தொழுதால் முட்டாள்களல்லவோ. மதங்களின் இயல்பே , ஒன்றை மற்றொன்று பழித்து அவரவர் அடியார் கூட்டத்துக்கு வெறியூட்டுவதுதான். மாணிக்கவாசகரும் அப்படித்தான் பாடியிருக்கிறார். அவருக்கு கடவுள் ஒருவர்தான். ஆனால் அவர் சிவன்தான்.
முன்னரே பாடல் வரிகளை கவனித்திருந்தால் இளையராஜாவும் அதை தவிர்த்திருப்பாராய் இருக்கும். ஆனால் அதுவும் முடியாது. மெட்டுக்குப் பொருந்தி வரும் வரிகளைத்தானெ அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
“கத்தோலிக்க நண்பர்கள் மையத்தையும் பாஷை தெரியாத பில்ஹார்மனிக் குழுவையும், நியூயார்க் குரல்களையும் மாணிக்கவாசகர் என்னும் மேதையையும் ஒருங்கிணைத்தது” யார்?
ஈசன் தான் என்கிறார் இளையராஜா. பொய்யர்தம் மெய்களில் இதுவும் ஒன்று. காசேதான் கடவுளடா.
இந்த கடவுள் திருப்பணிக்கு காசு அருளியிருப்போரில் முக்கியமானவர்கள் அப்பாவிப் பொதுமக்களாகிய நாம்தான். பொதுத் துறை அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி, ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் கமிஷன் தான் இந்த இசை வெளியீட்டுக்கு ஸ்பான்சர் என்று போட்டிருக்கிறது. எத்தனை லட்சம் கொடுத்தார்கள் என்று பகிரங்கப் படுத்தவில்லை.
எதற்காக அரசுப் பணத்தை இந்த திருவாசக வியாபாரத்துக்கு தர வேண்டும்? இதே போல இஸ்லாம், கிறித்துவ பக்திப்பாடல்கள் வெளியிடவும், பெரியார், அம்பேத்கார் பற்றி பாட்டு ஆல்பம் போடவும் தருவார்களா?
திருவாசக மோசடிகளில் இப்படி அரசுப் பணம் வீணாக்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரே அரசுப் பணத்தை மோசடி செய்தவர்தான். அவர் அமைச்சராக இருந்தபோது ராணுவத்துக்கு குதிரை வாங்கத் தந்த காசை கடவுள் பணிக்கு செலவிட்டுவிட்டு சிக்கிக் கொண்டார். ஊழலுக்கு உடந்தையாக இருந்தான் ஈசன். அரசன் கண்ணுக்கு நரிகள் எல்லாம் குதிரைகளாகத் தெரிய செய்தான்.
இளையராஜாவும் சிம்பனி குழுவைக் கொண்டு செய்த நரிப் பாட்டை பரிப் பாட்டாக நமக்குக் காட்டுகிறார். ஆனால் ஈசன் காப்பாற்ற வரவில்லை. வரமாட்டான்.
‘மெய்’ எந்த ரூபத்தில் வந்தாலும் சரி. திருவாசகம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், சிலப்பதிகாரம் (அதற்க்கெல்லாம் யாராவது கோடிக்கணக்கில் இளையராஜாவுக்குக் கொடுத்து உதவ வேண்டுமென்று சுஜாதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!)
பொய்யர் தம் ‘மெய்’யை அஞ்சோம்.
-
Jilaba..not many impressed with your posting..
good try though
-
Jilaba,
This posting is not new to us, the regular visiters to this forum. May be you are new to this. Welcome :)
-
jilbaba, idhellam ungaloda original points-aa? Appadinna, journalist Gnani has suttufied from you - please sue him - idhellaam avar thannoda column-la 2005-laye ezhudhinaar. Neenga sutteengala? Avaru suttara?
-
A comprehensive study on TIO by some christian fanatic :)
http://www.ephesians-511.net/thiruvasagam.html
Thalai suthuthu :cry: but my posts are mentioned there and Iam happy about it :D If someone reads the full page please let me know what are they upto :P
-
Fliflo,
This Could be a late call. Never Mind. I am looking for TIS making DVD alone in US. Can somebody help me here.
Best
-
TISK
BTW, I tried to make an order thro' your website but for some reason, it doesn't accept my credit card.
best
-