-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
Thank you very much Mr Raghavendra
-
நடிகர்திலகத்தின் படங்களும் அதன் பெயரிலே உள்ள திரை அரங்கின் பெயர்களும் [ஒரு வித்தியாசமான பதிவு]
சத்யம் ---அண்ணா சாலை சத்யம் அரங்கு
சாந்தி அண்ணா சாலை - சாந்தி
சித்ரா பௌர்ணமி - சித்ரா
ஆனந்தகண்ணீர் - ஆனந்த்
கிருஷ்ணன் வந்தான் - கிருஷ்ணா
ராஜா கோவை ராஜா அரங்கம்
செல்வம் குடந்தை - செல்வம்
பாபு காஞ்சீபுரம் -பாபு
மனிதரில் மாணிக்கம் ஈரோடு - மாணிக்கம்
மனோகரா யாழ்ப்பாணம் - மனோகரா
வாணி ராணி யாழ்ப்பாணம் - ராணி
ரங்கோன் ராதா விருதுநகர் - ராதா
அன்பு திருவண்ணாமலை - அன்பு
காவேரி திருச்சி - காவேரி
கந்தன் கருணை பாண்டி - கந்தன்
சரஸ்வதி சபதம் சென்னை - சரஸ்வதி
லக்ஷ்மி கல்யாணம் சென்னை - லக்ஷ்மி
முரடன் முத்து நாகர்கோயில் - முத்து
pilot பிரேம்நாத் சென்னை - pilot.
-
டியர் விநோத் சார்,
சூப்பர்.. உண்மையிலேயே வித்தியாசமான பார்வை... இது போல் பல கோணங்களில் சிந்திக்கும் தங்களுடைய திறமை வியக்க வைக்கிறது.
என் நினைவுக்கு வந்த ஓரிரு அரங்குகள் - சிவாஜி எம் ஜி ஆர் இருவரும் நடித்த படங்கள்
வசந்தத்தில் ஓர் நாள் நாகர்கோயில் வசந்தம்
பராசக்தி - சென்னை சக்தி அபிராமி
ஸ்ரீ முருகன் - சென்னை ஸ்ரீ முருகன்
ரத்னகுமார் - தருமபுரி ரத்னா
-
ராகவேந்திரன் சார்
தங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மேலும் மக்கள் திலகம் - நடிகர் திலகம் படங்களின் பட்டியல் அளித்தமைக்கு நன்றி .
என்றும் நட்புடன்
வினோத்
-
சிவாஜி கணேசன் அந்த கிராமத்தின் பண்ணையார். அவருடைய சகோதரர் தேங்காய் சீனிவாசன். அவருடைய மனைவி கே.ஆர். விஜயா, மகன்கள் ஒய்.ஜி.மகேந்திரா, திலீப் மற்றும் வேணு அரவிந்த். நேர்மை, கண்டிப்பு, மனிதாபிமானம் இப்படி பல நற்குணங்களைக் கொண்டவர் பண்ணையார். அந்த ஊரில் அவருடையே பேச்சுக்கு தனி மரியாதை உண்டு. அவரிடம் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு அபலைப் பெண் வந்து சேர்கிறாள் கர்ப்பிணியாக. அவள் கர்ப்பத்திற்கு பண்ணையாரின் சகோதரர் மகனே காரணம் என அறிகிறார். அந்தப் பெண்ணிற்கும் உதவ வேண்டும் வாழ்வு அமைத்துத் தர வேண்டும் அதே நேரம் குடும்ப மானம் காக்க வேண்டும் என்ற கோணத்தில் பண்ணையார் பிரச்சினையை அணுகுகிறார். அந்த அணுகுமுறையை விளக்குவதே இந்தக் காட்சி.
பொதுவாக நடிகர் திலகத்தை 80களில் மிகவும் கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. வணிக நோக்கில் எடுக்கப் பட்ட ஒரு சில படங்களை வைத்து அவருடைய படங்களைப் புறக்கணித்த ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களும் உண்டு. அவர்கள் மேம்போக்காக சொல்லும் காரணங்களில் ஒன்று மிகை நடிப்பு என்பது. இந்த myth தவறானது என்பதை 80களில் பல படங்களில் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். குறிப்பிடத் தக்க படம் படிக்காத பண்ணையார். 250வது படமாக அறிவிக்கப் பட முழுத்தகுதியும் உள்ள படம். குறிப்பாக இங்கே இடம் பெறும் காட்சியை நாம் எடுத்துக் கொள்வோம். அவர் இதில் அதிகப் படியாக உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க நினைத்திருந்தால் சுலபமாக செய்திருக்கலாம். அழுத்தமான காட்சியமைப்பு ... மேம்போக்காக பார்த்தால் சாதாரணமாக காட்சியளிக்கும் இந்த சூழ்நிலைக் காட்சியில் தன் நிலைமையை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் திலகம். அதே சமயம் அந்தப் பாத்திரத்தைத் தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு - தன்னுடைய நம்பிகைக்குரியவனிடம் வந்திருக்கிறோம் அவன் ஏமாற்ற மாட்டான் என்கிற நம்பிக்கை. அந்த அபலைப் பெண்ணிற்கு ஒரு பாதுகாப்பு அமைத்துக் கொடுக்கிறோம் என்கிற பெருமிதம், நிம்மதி, இந்த உதவியைக் கேட்பதால் தான் தாழவில்லை என்கிற இறுமாப்பு,, இப்படி பல உணர்ச்சிகளை ஒரு சேர இக் காட்சியில் வெளிப் படுத்தியிருப்பார். குறிப்பாக அந்தப் பெண்ணுக்கு பெயர் வைக்கும் காட்சி ... முத்திரை பதிக்கும் முத்தான காட்சி ... தன்னுடைய கிராமத்து இயல்பையும் அந்த நேரத்தில் விடாமல் வெளிப்படுத்தும் சிறந்த நடிப்பினை அவர் தந்த இந்தக் காட்சி, நான் மிகவும் ரசித்த காட்சி. இதனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
http://youtu.be/PYYM4CADfm0
படம் படிக்காத பண்ணையார்
இயக்கம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
இசை இளைய ராஜா - இந்தக் காட்சியில் இசையின் பங்கு பெரிதும் பாராட்டத் தக்கது.
நடிப்பு - சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா - 200வது படம், வி.எஸ்.ராகவன், தேங்காய் சீனிவாசன், வி.எஸ்.ராகவன் மற்றும் பலர்.
-
'தினத்தந்தி' (28-10-2012) விளம்பரம்.
பாசத் தலைவரின் 'பாசமலர்' (DI Restoration Cinemascope) விரைவில் புதுப் பொலிவுடன் உலகெங்கும் பாச மணம் பரப்ப வருகிறது.
http://i1087.photobucket.com/albums/...g?t=1351396183
-
-
-
-