ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
//அவர்கள் கூட 'மனம் திறந்து பேசுகிறேன் ' ஒரு 38 வாரம் எழுதிய நினைவு. பிறகு நின்று விட்டது// ஆமாம் கிருஷ்ணா ஜி..
இன்னிக்கு என்னவோ கொஞ்சம் ப்ளாங்க் ஆக இருக்கிறது..வேலையும் கொஞ்சம் நிறைய..
எனில் பக்திப் பாடல் பாடலாமா..
ஞானசம்பந்தரையும் நாவுக்கரசரையும் பற்றிப் படித்திருந்தாலும் கூட அவர்களது பாடல்களில் ஆழ முயற்சித்திருந்தாலும்கூட எப்போது படிக்கும் போதும் இந்தத் திரைக் காட்சி நினைவுக்கு வருதற்குக் காரணம் ஆழ்ந்த, நடிப்பென்றே தெரியாத அர்ப்பணிப்பு.. ந.தி.. நாவுக்கரசர். ஞான சம்பந்தக்குழந்தையும் நன்கு செய்திருக்கும்..
*
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா – உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை – அந்த
அம்மையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!…
)
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக – அந்த
பரவசத்தின் உள்ளே உயிர் உருக.
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய, இறைவா!…
)
கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே – கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே – வந்து
என்னை ஆளுகின்ற பரம்பொருளே, இறைவா!…”
*
அந்த ஆலய மணிக்கதவே தாழ் திறவாய் - உருகி உருகி அப்பர் பாட கதவு திறந்த பிறகு ஒரே பாடலில் கதவு மூட.. அப்பரின் உருக்கம்.. ம்ம் நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது..

