வாசு
சற்று முன் "தெய்வ மகன் " சன் லைப் இல் பார்த்தேன் - ஒரு நப்பாசை - முடிவில் கண்ணன் இறக்காமல் , குடும்பம் ஒன்று சேராதா என்று - ஆனால் முடிவில் சிறிதும் மாற்றம் இல்லை - கண்ணன் சொல்லும் ஒரு வசனம் " இல்லாமல் போனதை யாருமே இழக்க முடியாது " என்று - எவள்ளவு உண்மை -- நடிப்பு என்று ஒன்று இப்பொழுது இல்லாமல் போனதை எந்த நடிகரால் ஈடு கட்ட முடியும் ?? விருதுகள் கிடைக்கும் நடிகர்களுக்கும் " கொஞ்சம் நடிங்க பாஸ்" என்று தானே இப்பொழுது சொல்ல வேண்டியுள்ளது . கிரேசி மோகனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது - " NT - overacting ?" அதற்கு அவர் ஒரு முத்தான பதிலை தந்தார் " NT யுடன் acting is over " என்று --- உண்மைதான் . Today actor is alive but not acting - it was last seen in 2001