http://i58.tinypic.com/bj7nn.jpg
Printable View
வெஜ் அண்ட் நான் வெஜ்
http://www.lakshmansruthi.com/news/F...s/susheela.jpg
தென்றல் சுசீலா
http://2.bp.blogspot.com/-PKo0PlKxNo...+6+volumes.jpg
புயல் ராட்சஸி
இருவரும் ஒரே மாதிரி இணைந்து பாடிய பாடல் இரண்டை இன்று பார்ப்போம்.
இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட ஒரே ரகம்தான். இரண்டுமே அமைதியாக ஆரம்பித்து படுஆர்ப்பாட்டமாய் முடியும். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அமைதியை யார் தருவது? ஆர்ப்பாட்டத்தை யார் அளிப்பது? என்று.
நடிகை பாமா பக்கத்து வீட்டில் குடி வந்ததால் ஒரு வீட்டில் ஏற்பட்ட ஏகப்பட்ட களேபரங்கள் நமக்கு அத்துப்படி. அதுவும் புலி பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல நடிகையைப் பார்த்து அவள் போலவே தோற்றத்திலும், பழக்கத்திலும் தங்கள் மனைவியும் இருக்க வேண்டும் என்ற முத்துராமன், நாகேஷ் போன்ற கணவன்மார்களின் ஆசையை நிறைவேற்றும் குடும்ப மனைவிகள் காஞ்சனா மற்றும் ஜெயந்தி.
http://sim.in.com/2/e3955f0afed430bf...39952_ls_t.jpg
கணவனுக்கு வசியப்பொடி கலந்து பாமா நினைப்பிலிருந்து அவனை விடுவிக்க காஞ்சனா செய்யும் தந்திரம் துரதிர்ஷ்டவசமாய், தாறுமாறாய் மாறிப் போக (முத்து எல்லாம் தெரிந்து வசியப்பொடி கலந்த பாலை காஞ்சானாவையே அருந்தச் செய்து விடுவார்) வசியம் செய்யப் போனவரே அதில் சிக்குண்டு கணவனை 'கிக்' பார்வை பார்த்து மயங்கிச் சிரிக்க சுசீலாவின் அமைதியான குரலில் ஆழமான பாடல் ஆரம்பம்.
கலர் தேவதை காஞ்சனா பிளாக் அண்ட் ஒயிட் தேவதையாக அமர்க்களம். முத்துராமன் திருதிரு முழி ராமன்.
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
காதில் தேனாய் இறங்கும் சுசீலாவின் குரல்.
பாடலின் மறுபாதி
கணவன் நாகேஷை மயக்க ஜெயந்தி யோசனை. ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது. 'சங்கம்' படத்தில் வைஜயந்தி மாடர்ன் உடை அணிந்து ராஜ்கபூரை உண்டு இல்லை என்று படுத்தும் 'Main Ka Karun Ram Mijhey Buddha Mil Geya' பாடல் வானொலியில் ஒலிக்க செம ஐடியா கிடைக்கிறது ஜெயந்திக்கு. விளைவு சேலை போய் நைட் டிரெஸ் கோலம். நாகேஷ் இன்ப அதிர்ச்சி.('மை டியர் குட்டிச்சாத்தான்' ரேஞ்சுக்கு பக்கவாட்டு சுவர்கள் மேலே நடப்பார். ஏறும் போது காலண்டரை வேறு தூக்கிப் பார்த்துவிட்டுச் செல்வார்):)
சும்மா பேயாட்டம். நவ நாகரீக ஆட்டம். இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ரேஞ்சுக்கு. 'மெல்லிசை மன்னர்' மெச்சும்படி போட்ட மெல்லிசை பிளஸ் வல்லிசை
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
அணைத்தால் துடிக்க வைப்பேன்
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
பாடலின் மீதிப் பாதி ராட்சஸியின் குரலில் ஜெயந்திக்கு. முதல் பாதி சுசீலாவுக்கு அப்படியே நேர் எதிர். படு ஸ்பீட். அலட்சியம். தன்னம்பிக்கை, பாமாவை விட எந்த வகையில் நான் குறைந்தவள் என்ற எகத்தாளம். 'ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை நான் ஆட முடியாதா?' என்று எக்கச்சக்க கேள்வி. ஆதி மனிதர்கள் போலவே இருக்க ஆசை வேறு. அத்தனையும் அந்தக் குரலில் ஆர்ப்பாட்டமாய் வந்து சேரும்.
ஒரே பாடலில் இரு வேறு பாடகிகளின் தனித் தன்மையைக் கொண்டு என்ன ஒரு வெரைட்டி! அமைதிப் பாடகியும், ஆர்ப்பாட்ட பாடகியும் அவரவர்கள் பாணியில் பின்னி எடுக்க இருவேறு நிலை காட்டும் பாடல்.
https://youtu.be/vSnnSKLMVnw
இதே போல இன்னொரு பாடல். இதே இரு பாடகிகளும் பாடியது. ஆனால் ஜெயாவிற்கும், சி.ஐ.டி.சகுந்தலாவிற்கும். நாயகன் ஒருவர் ஜெய்சங்கர்.
https://i.ytimg.com/vi/llcwVOPSDwY/hqdefault.jpg
குத்துச் சண்டை வீர சூரர் ஜெய்யைக் காதலிக்கும் ஜெயா. பதிலுக்கு ஜெய்க்கும் ஜெயா மேல் காதல். ஆனால் நடுவில் நடிகை சகுந்தலா (படத்தில் நடிகை ரோல்) ஜெய்யைக் காதலிப்பார் ஒருதலையாக.
ஜெய் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதும் கனவில் மூழ்கி ஜெயா தேவதைகள் அமுதம் தர, அருந்தி, மயங்கி காதலனை நினைத்து அமைதியாகப் பாடுவார். சேலை கட்டிக் கொண்டு நாகரீக மூவ்ஸ் அருமையாகத் தருவார். ஜெயாவை மோக போதையில் இது போல வேறு படத்தில் காண முடியாது
நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லோ
மின்னலை வீசும் கண்ணல்லோ
வா வா
(சுசீலா பின்னணி தந்திருப்பார்)
மிக அருமையான பாடல்.
சுசீலா பின்னுவார். (வா வா)
அப்படியே திடுமென சகுந்தலா ஜெய்யை ஜெயாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விடுவார். இப்போது ஈஸ்வரிக்கு வேலை. வழக்கம் போல வெள்ளப் பிரவாகம். புயல் வேகம். சகுந்தலா இங்கு பேயாட்டம். செம டான்ஸ். ஜெய் தடதடவென ஜேம்ஸ் பாண்ட் போலவே கூட ஓடுவார்.:)
வா தினம் ஒரு புது சுகம் தரவா
என் மடியினில் கலைகளைப் பெறவா
நாம் இரவிலும் பகலிலும்
போதையில் விழவா
மிக மிக அருமையான பாடல். வி.குமார் அவர்களின் இசைக்கருவிகளின் ஆளுமை அசத்தல். பாடலின் நடுவே வரும் ஆண்குரலின் ஹம்மிங் சங்கர் கணேஷை ஞாபகப்படுத்தும். இசை கூட அவர்களின் பாணியிலேயே இருக்கும் இது பற்றி ராகவேந்திரன் சாரை கூற அழைக்கிறேன்.
எல்லாம் சரி! என்ன படம் என்று சொல்லாமலேயே அறுக்கிறானே என்று நினைக்கிறீர்களா?:) எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'தெய்வக் குழந்தைகள்' என்ற அதிகம் தெரியாத படம்தான். முத்துராமன், 'குமாரி' பத்மினி, பாபி ஸ்ரீதேவி, மாஸ்டர் ராமு எல்லோரும் உண்டு.
வி.குமார் அவர்களின் அற்புத இசைக்கருவிகளின் சங்கமத்திற்கு இந்த ஒரு பாடல் சிறந்த சான்று.
இந்த இரண்டு பாடல்களையுமே சுசீலா ஆரம்பிப்பார். ஈஸ்வரி முடிப்பார். மெதுவாகப் பாடல் தொடங்கி வேகமாக முடியும். இரண்டும் நடிகை சம்பந்தப்பட்டது என்பது இன்னொரு விசேஷம்.
கேட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். 12.09 க்கு பாடல் துவங்கும்.
https://youtu.be/T14l68EYtVM
ஜி சூப்பர்
Thanks Ravi ! :) I like songs by PUC,MKT, T.R.Mahalingam, N.C.Vasantha kokilam, MLV,DKP, P.A.Periyanayaki and other older stalwarts.Quote:
Originally Posted by g94127302;1237671
[B
Here is one by P.U.Chinnappa in Jagathalaprathapan(1944):
http://www.youtube.com/watch?v=mPzjb0R9bbg
I posted this song to bring out the camera trick in the early 40s.
வாசு சார்
என்ன சொல்வது எப்படிப் பாராட்டுவது..
நெய்வேலியிலிருந்து நிலக்கரி மட்டுமே சுரங்கத்தில் கிடைக்கும் என்பதை உடைத்தெறிந்து அதை விட பற்பல மடங்கு சிறப்பு வாய்ந்த தமிழ்த் திரையிசைத் தகவல் களஞ்சியமும் அங்கே சுரங்கமாய் கிடக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
விக்டரி மூவீஸ் பெத்த மனம் பித்து தந்த பிரமிப்பூட்டும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் புதிய வெற்றி இயக்குநராக அடையாளம் காணப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே விக்டரி மூவீஸ் அதே ஜெயாவைக் கதாநாயகியாக வைத்து தயாரித்து அதே ஆண்டில் செப்டம்பரிலேயே வெளியிட்ட படம் தான் தெய்வக் குழந்தைகள். இரண்டுமே மெல்லிசை மாமணி வி.குமாரின் இசை தான். இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான வி.குமாரை விட்டு பாமா விஜயத்திற்கு எம்.எஸ்.வி.யிடம் சென்றார் கே.பி. இருந்தாலும் இந்த நினைத்தால் சிரிப்பு வரும் பாட்டில் வி.குமாரின் பாணியை நினைவு படுத்தும் வகையில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார். அதனால் இந்த இரு பாடல்களும் ஒரே சாயலில் இருக்கும். [இந்த இடத்தில் சாயல் எனக் குறிப்பிடுவது மெட்டை அல்ல, பாடலின் அமைப்பு, இசைக் கருவிகளின் பிரயோகம், தாளக்கட்டு மாறும் உத்தி போன்றவை]. தங்களின் அபார ஞாபகசக்திக்கு இது மிகச் சிறந்த உதாரணம் வாசு சார். வி.குமாரின் இசையைப் பொறுத்த வரையில் ஹம்மிங் மிகவும் அபூர்வமாகத் தான் ஒலிக்கும். அவருடைய உதவியாளர் குணசிங் தான் பெரும்பாலும் குரல் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் இப்பாடலில் குறிப்பிடும் ஹம்மிங் அநகமாக குணசிங் அவர்களின் குரலாக இருக்கலாம். பல ஆண்டுகள் குமாரிடம் உதவியாளராக இருந்த குணசிங், சங்கு புஷ்பங்கள் படத்திற்கு தனியாக இசையமைத்தார். அப்படி யில்லாத பட்சத்தில் இந்தக் குரல் ஏ.வி.ரமணனுடையதாக இருக்கலாம். ஏனென்றால் குமார் இசையமைத்த சில படங்களில் அவர் ஹம்மிங் பாடியிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Vasu mentioned the song 'main kya karoon ram...' from Sangam(1964)
Here is the song:
http://www.youtube.com/watch?v=tc4PTMHeOHo
I thought this was obscene. This is nothing compared to what we see in modern movies. The trend seems to be 'more skin, less clothing'. I won't say anything about the lyrics ! :lol: That is 'progress' ! :) Of course, I felt the song and dance 'Oh rasikkum seemaane vaa' in Parasakthi was obscene when I watched the movie in 1952 ! :)
https://upload.wikimedia.org/wikiped...20px-M.s.v.JPG
இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.
மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.
http://thefunstons.com/wp-content/up...4/03/tears.jpg
வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.
மனதிற்கினிய அமரத்துவம் வாய்ந்த மதுர கானங்களை அள்ளித் தந்து நமது இதயங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னருக்கு நடிகர்திலகம் / மக்கள் திலகம் / காதல் மன்னரின் திரி சார்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்
https://www.youtube.com/watch?v=KiYCD6Nldqg
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
https://www.youtube.com/watch?v=UuMzmHuqN2I
https://www.youtube.com/watch?v=YN3a660t6Mo
Heartfelt condeolences on the sudden demise of our beloved Mellisai Mannar. May his soul rest in peace even as our souls are filled with his mind scintillating vibrators!
மெல்லிசை மன்னர் ..எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இயற்க்கை எய்திவிட்டார் ....
கலைத்தாய் தன்மகனை தன்னோடு அழைத்துக்கொண்டாள்.
அவருடைய ஆன்மா கலைமகள் பொற்பாதத்தில் இளைப்பாறும் என்பதில் ஐயமில்லை...
அன்னாரை இழந்துவாடும் குடுப்பதாருக்கும்...இசை உலகுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும்..
வருத்தங்களையும்...தெரிவித்துக்கொள்கிறேன் .....அவருடைய ஆன்மா சாந்தியடைவதாக இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
இன்று அவரைப்பற்றிய பதிவுகள் எல்லோரும் போடுவதற்காக - கருவின் கருவை இன்று பதிவிட மனம் வரவில்லை .
https://www.youtube.com/watch?v=JqJ62bv_07g
அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு என் முதல் பதிவே , என் இசை தெய்வத்துக்கு அஞ்சலியா? கடவுளே, என் இசை ஞானத்தின் ஆரம்ப புள்ளி, குடும்ப நண்பர், ஒரு வருட மொட்டை மாடி உலாவல் தோழர், நான் இந்தியாவிலேயே முதல்வராக நினைக்கும் இசை மேதை , எனக்கு மிக வேதனையான கருப்பு தினம். அந்த மேதையை இழந்து வாடும் திரி உறவினர்களுக்கு, என் நண்பர்களான அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். (எனக்கே தேவை)