நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/2qd1l3q.jpg
Printable View
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/2qd1l3q.jpg
தினமலர் -25/04/2017
http://i63.tinypic.com/alqefp.jpg
நன்றி சகோதரரே,
போட்டித் திரியில் எவ்வளவோ தப்பு தகவல்கள் வருகிறது. அதைப்பற்றி நாம் சொல்லுவது இல்லை. பிரச்சினை எப்படி வருது பாருங்கள்.
முத்தயன் சாவுக்கு விருப்பம் இருந்தால் இரங்கல் வருத்தம் தெரிவித்து விட்டு அதோடு நிற்கலாம். ஆனால், இரங்கல் தெரிவித்த அந்தப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தங்கள் பக்கத்தில் (அதாவது மக்கள் திலகம் திரியில்) தவறான பதிவுகள் வந்தபோதெல்லாம் சுட்டிக் காட்டிய நேர்மையாளர் என்று முத்தயனை புகழுவது போல நமக்கு ஒரு இடி.
நாம் தவறான பதிவுகள் போடுவது போலவும் முத்தயன்தான் நேர்மையாளர் போலவும் ஒருத்தரின் பதிவு. அதுக்குத்தான், இங்கயாச்சும் முத்தயன் இருந்தார். அந்தப் பக்கத்தில் தவறான தகவல்கள் பதிவிடும்போது, தப்பை சுட்டிக் காட்டவோ ஒத்துக்கொள்ளவோ யாரும் இல்லை. என்ன தவறான பதிவு போட்டோம் என்று யாராவது கேட்டால் பதில் வழங்கப்படும் என்றும் சொன்னேன். இதை மனதி்ல வெச்சுத்தான் திரியை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியிருக்கிறது என்றும் சொன்னேன்.
உடனே வேற ஒருத்தர் வந்து குதித்து நாங்கள் எல்லாரும் நேர்மையானவர்கள், உண்மையான பதிவுகளை மட்டுமே போடுவோம். பொய்யில பிறந்து பொய்யில வளர்ந்து… என்றெல்லாம் பேசுறார்.
அதுக்குத்தான் பதில் சொல்ல வேண்டியதாகிவிட்டது.
முத்தயன் சாவதற்கு இரண்டு நாள் முன்னால் கூட என்னிடம் போனில் பேசினார். நல்ல மனிதர். அந்த பக்கத்திலும் தவறை சுட்டிக் காட்டி கோபமாக பதில் சொல்லியிருக்கிறார். அதை சொல்ல வேண்டியதுதானே?
அவர்களின் ரசிகர்கள் ஆரம்பித்த மையம் தளத்தில் புரட்சித் தலைவரைப் பற்றி இவ்வளவு சிறப்புகள் வருகிறதே என்று போறாமை. அதனால் நமக்கு பொய் முத்தரை குத்தப் பார்க்கிறார்கள். 20 வருடம் கழித்து படிப்பவன் நம்பளை பற்றி என்ன நினைப்பான். நம்ப மீது பொய் முத்திரை குத்தும் சதியை முறியடிக்கத்தான் அவர்களின் பொய்யை தோல் உரிச்சு காட்ட வேண்டியது அவசியம் ஆகிவிட்டது. நான் தோல் உரிச்சு காட்டியது ஒரு சேம்பிள்தான். இன்னும் நிறைய இருக்கு. நமக்கு எதுக்கு? நீங்கள் சொல்லுவது போல விட்டுவிடுகிறேன்.
உங்களின் ஆலோசனைக்கும் ஆதரவுக்கும் மிகுந்த நன்றி சகோதரா.
ஏப்ரல் 23-ம் தேதி தினமலர் பேப்பர்
http://i68.tinypic.com/tat34i.jpg
நாளை முதல் கோவை
டிலைட் திரையரங்கில்
நீதிக்கு பின் பாசம்
அன்பு நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே,
தோட்டாவை தோற்கடித்த எம்.ஜி.ஆர். -தினமலர் செய்தி பதிவிற்கு நன்றி.
தவறான பதிவுகளுக்கு மறுப்பு தெரிவிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி தான் ஆலோசனை சொன்னேன். நிரந்தரமாக அல்ல. ஏனென்றால் நண்பர் திரு. முத்தையன் அம்மு மறைந்திருக்கும் நிலையில் ,கேட்பாரில்லை என்கிற வகையில்
பதிவுகள் தொடர்ந்தால் தவறுகளை சுட்டி காட்ட தயங்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். அதற்கு வாய்ப்பு வராது என்று நம்புவோமாக .
நன்றி.
நேற்று (27/04/2017) பிற்பகல்.1.30 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். கலையுலகின் "நவரத்தினம் "திரைப்படம் புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாகியது .
நேற்று பிற்பகள் 2மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தாயை காத்த தனயன் "திரைப்படம் ஒளிபரப்பாகியது .
இன்று (28/04/2017) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை"தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது
http://i65.tinypic.com/2dhfn7p.jpg