http://i67.tinypic.com/2jfnlo3.jpg
http://i66.tinypic.com/vql8qa.jpg
http://i68.tinypic.com/5bww1l.jpg
Printable View
வரும் வெள்ளி முதல் (22/2/19) கோவை ராயலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின்
"முகராசி " வெள்ளித்திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/fdc41v.jpg
http://i67.tinypic.com/qrnnfr.jpg
ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
வரும் வெள்ளி முதல் (22/2/19) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளிவிளக்கு " தினசரி 4 காட்சிகளில் பிரகாசிக்க வருகை.
தமிழ் நடிகர்கள்/நடிகையர் நடித்த 100 வது படங்களிலேயே மறுவெளியீடுகளில்
மீண்டும் மீண்டும் வெளியாகி வெற்றிவாகை சூடும் ஒரே திரைக்காவியம்
http://i63.tinypic.com/5d6k1.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்.
இஸ்லாமிய வரலாறு காவியமான புரட்சி நடிகர் வழங்கும் "பாக்தாத் திருடன்" கண்ட சகோதரர் திரு. லோகநாதன் இங்கு பகிர்ந்தது மகிழ்ச்சி, இந்த காவியத்தின் பாடல்கள் அன்றே பிரபலமானது தான் என மூத்த ரசிகர்கள் கூறினர்... அதனால் தான் இன்றைய 2019ம் ஆண்டிலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் பவனி வந்து கொண்டேயிருக்கிறார்... வேறு எந்த நடிகர்கள், நடிகைகள் படம் வருகிறது? 👍 மக்கள் திலகம் காவியங்கள் தானே எக்காலத்திற்கும் பொருந்தும் வசனங்கள் உட்பட எல்லாம் அமைகிறது...
என்றும் திரையுலக பிரம்மாண்ட வசூல் காவியம், திரைப்பட வசூலுக்கு இலக்கியம்... இலக்கணம் வகுத்த சக்ரவர்த்தி மக்கள் திலகம் "ஒளிவிளக்கு" எப்போதுமே ஒளிவிளக்கு தான்... திருத்துறைப்பூண்டி எஸ். எஸ். வாசன் தயாரித்து வெளியிட்டது பல படங்கள்... ஆனால் அவற்றில் இன்றுவரை மறு வெளியீடு கண்டு திரைப்பட வினியோகஸ்தர்களையும், திரையரங்க உரிமையாளர்களையும் வாழ வைப்பது புரட்சி தலைவர் காவியங்களே எனில் அது மிகையன்று... இப்போது சமீபத்தில் மதுரையில் திரையிட்டும்... theatre ஸ்லிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் என குறிப்பிட்டுள்ளது வியப்பாக இருக்கிறது... அதனால் தான் இப்போதும் இந்த காவியத்தின் டிஜிட்டல் உரிமைகள் மிகுந்த மதிப்பு, மரியாதை உள்ளதால் பலர் போட்டியிட்டும் வாங்க இயலாமல் இருக்கிறது...
பாக்யா வார இதழ் -22/2/19
http://i65.tinypic.com/28b64nq.jpg
http://i65.tinypic.com/99q7af.jpg
#புரட்சிதலைவர்MGRபுகழ்ஓங்குக!!!!!! உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.
என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.
அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.
அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.
சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.
திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.
1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.
கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.
24/12/87அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.
திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.
1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை............... Thanks wa Friends.. .......
புரட்சி தலைவரின் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி,
புரட்சி தலைவரின் பூர்வீக வீட்டை புதுப்பித்து மக்களுக்கு பார்வையிடும் வகையாக வரும் 26:02:2019 அன்று கேரளா மாநில கவர்னர் திரு.சதாசிவம் அவர்கள் திறந்துவைக்கிறார்,
(இவர் வழக்கறிஞர் படிப்புக்கு புரட்சி தலைவர் நிறைய உதவி செய்திருக்கிறார், மேலும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்)
இதன் முழு செலவையும், திறப்புவிழாவை சிறப்பாக செய்பவர் அண்ணன் திரு. சைதை துரைசாமி அவர்கள்,
புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே அலைகடலென திரண்டு வாரீர்,
விழா நடைபெறும் இடம் கேரள மாநிலம் பாலக்காடுலிருந்து 15 கி.மீ அருகே உள்ள வடவனூர்,
" ஒருதாய் மக்கள் நாமென்போம் ..ஒன்றே எங்கள் குலமென்போம் "....... Thanks wa.,...
வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆர். அவர்களின்
102 வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு.
தகவல் உதவி : வேலூர் பக்தர் திரு.ராமமூர்த்தி .
http://i66.tinypic.com/13zab0j.jpg