Originally Posted by app_engine
unhappy boy, Hope you can read this relevant part below:
‘‘இளையராஜாவின் ‘திருவாசகம்’ வெளியீட்டு விழாவுக்கு வைகோ-வை அழைத்திருந்தீர்கள்... தற்போது முதல்வர் கருணாநிதியோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். அரசியலில் நுழையும் எண்ணத்தோடு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வதாகச் சொல்கிறார்களே...’’
‘‘திருவாசகம் விவகாரத்தில் நான் பட்ட வலி-வேதனை களை எங்கும் சொன்னதில்லை. இசைஞானி இளையராஜா மிகப் பெரிய திறமைசாலிதான். இருந்தாலும், அவரும் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிதான் உணர வைத்தது. இவ்வளவு பெரிய இசைப் பேழையை உருவாக்கிய எங்களிடம் இன்றைக்கு ஒரு மாஸ்டர் காப்பிகூட இல்லை. அதாவது கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு உரிமையையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. ‘திரு வாசகம்’ சிம்பொனி முயற்சிக்கு மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டோம். அதற்காக எனது சொத்தைக்கூட விற்றேன். கிடைத்த வருவாய் வெறும் பதினைந்து லட்ச ரூபாய்தான். இதுதான் உண்மை. ஆனால், வெளியில் ஆளாளுக்கு ஏதோதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றியெல்லாம் நான் விரிவாகச் சொன்னால் அது பலரது மன உணர்வு களை காயப்படுத்தும். அதனால் நாகரிகத்தோடு அதைத் தவிர்க்கிறேன்...