-
-
-
V.raghavendran sir
nadigar thilagam movies in your alphapet.
V.etrikku oruvan
r.aman eththani ramanadi
a.nbu
g.owravam
h.arichandra
a.npalippu
v.amsavilakku
e.thiroli
n.eethi
d.harmam enge
raththa thilagam
annai illam
n.an vazhavaippen
-
டியர் வாசுதேவன் சார்,
சூப்பர்... பாசமலரின் வாசம் தங்களை எப்படி நம்மை இழுக்கிறது பாருங்கள்... அதுவும் குணசேகரனையும் ராஜசேகரனையும் போட்டு landmark எது என்பதை சுட்டிக் காட்டி விட்டீர்கள்.. நம்மிடையே பாச மலர்களின் நடுவே சில காகித மலர்களும் செயற்கையான நறுமணம் வீச முயல்கின்றன. அடையாளம் கண்டு கொண்டால் அவற்றை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி விட்டு, நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம், உணர்ந்து கொள்ளலாம். இந்தக் கருத்தை அருமையாக விளக்கும் வகையில் தங்களுடைய பாச மலர் பதிவுகள் .... அதுவும் கண்களை ஒத்திக் கொள்ளும் தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் ... அருமை... தொடருங்கள் சார்...
அன்புடன்
-
டியர் விநோத் சார்,
தங்களுடைய அன்பு நெகிழ்வை ஊட்டுகிறது. அடியேனின் பெயரில் நடிகர் திலகத்தின் படங்களின் பெயர்களை பட்டியலிட்டு அசத்தி விட்டீர்கள். பதிலுக்கு நானும் சும்மா விட்டு விடுவேனா ... இதோ உங்கள் பெயரின் எழுத்துக்களில் எம்.ஜி.ஆர் .படங்களின் பெயர்கள்
s – sirithu vazha vendum
v – vikramadithan
i – indru pol endrum vazhga
n – nadodi mannan
o – oru thaai makkal
d – dharmam thalai kaakkum
k – kanchi thalaivan
u – urimai kural
m – mannadhi mannan
a – arasa kattalai
r - rickshakaran
-
Dear Vasudevan Sir,
Pasamalar Photos, Scenes & Ads are very nice and simply superb.
-
டியர் வாசு சார்,
பாசமலர் பதிவுகளுடன் வந்துள்ள தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
-
மனம் முழுவதும் அளவிடமுடியாத சோகம் நிரம்பியிருந்தாலும் இவ்வளவு வெளிப்படையா சிரிக்கிறார் பாருங்கள் (at 3.32 , at 4.26 ). மற்றவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு காரியம்.
கழியை பிடித்துக்கொண்டு கடவுளை விமர்சித்து முடிக்கையில் கழியோடு முகம் பாதிக்கும் இடங்கள். ஒவ்வொரு நொடிக்கும் பத்து முகபாவனைகள். நடிப்புக் கடவுள் என்பதில் துளி சந்தேகமேயில்லை.
http://www.youtube.com/watch?v=zNE0LicphLM
-
இப்பொது சமீப காலமாக ஒரு அருமையான திரைப்படத்தின் 25வது ஆண்டினைப் பற்றிய நினைவூட்டல் எதிர்பாராத கோணத்தில் பயணித்து தயாரிப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் இருந்திருக்கக் கூடிய அல்லது இருக்கக் கூடிய இடைவெளியினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு வருத்தமாயுள்ளது. இதை கூறக் காரணம், தயாரிப்பாளர்களிடம் முன் கூட்டியே விவாதித்து விட்டு முடிந்த வரை திட்டமிட்டு படமெடுக்க ஒத்துழைத்த நடிகர் திலகம் நினைவுக்கு வருவது தான். தமிழ் திரையுலகில் நாயகன் நிச்சயம் ஒரு சிறந்த படம். அதற்காக பல கஷ்டங்களை சந்தித்து அவற்றையெல்லாம் எதிர் கொண்டு படத்தை வெளிக் கொண்டு வந்த கமல் அவர்களும் மணிரத்தினம் அவர்களும், மற்றும் இன்றளவும் அந்தப் படம் பேசப் பட பெரும் துணையாக இருக்கும் இசையைத் தந்த இளையராஜா அவர்களும் என்றென்றும் பாராட்டத் தக்கவர்கள். அதில் சந்தேகமே இல்லை.
ஆனால் இந்தப் பேட்டியில் வெளிவந்துள்ள ஒரு வார்த்தை தான் நமக்கு புரியவில்லை.
School என்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது. அல்லது எந்த வர்க்கத்தைக் குறிக்கிறது. அல்லது எந்த குழுவைக் குறிக்கிறது ... இந்த ஒரு வார்த்தை தான் நமக்கு சற்று புரியமாட்டேன் என்கிறது. காரணம் முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் product. அதன் மூலம் discipline, planning போன்று ஒரு திட்டமிடுதலுக்கு தேவையான குணங்கள் அவரிடம் இருந்திருக்கும். அந்த ஸ்கூல் என்பதன் மூலம் அவருடைய மாடர்ன் தியேட்டர்ஸில் கற்றுக் கொண்ட தொழிலறிவு இங்கே குறை காணப் படுகிறதா.. அல்லது முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் நடிகர் திலகத்துடன் தயாரித்த படங்களிலும் அதே குணங்கள் மேலும் வலுவாக அமைந்து, அதுவும் இங்கே குறை காணப் படுகிறதா ... ஏனென்றால் தயாரிப்பாளர்களிடம் தான் கமிட் பண்ணி விட்டால் அதற்கப்புறம் அவருக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கும் கலைஞர் நடிகர் திலகம். தயாரிப்பாளர் எங்கே படப் பிடிப்பு வைத்தாலும் மறுப்பு சொல்லமாட்டார். தன் ஆலோசனைகளைக் கூறுவாரே தவிர வற்புறுத்த மாட்டார். இப்படி தயாரிப்பாளர்-கலைஞர் இடையே நல்லுறவை வளர்த்த நல்ல சூழலை நடிகர் திலகத்தின் படங்களில் முக்தா ஸ்ரீநிவாசன் கண்டதும் குறை சொல்லப் படுகிறதா ..
இது தான் புரியவில்லை.
இந்த விவாதத்தில் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனால் இந்த ஸ்கூல் என்கிற வார்த்தை மட்டுமே சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது . அவ்வளவு தான்.
-
அன்னை இல்லம், ஆண்டவன் கட்டளை, நீலவானம் ... இவையெல்லாம் நடிப்புக் கடவுளின் முத்திரை சித்திரங்கள் .. அதென்னவோ தேவிகாவுடன் இவர் நடித்த படங்களெல்லாமே மாஸ்டர் பீஸ் லெவலுக்கு இருப்பது தனிச் சிறப்பு. அதுவும் இந்தப் படத்தில் இந்தக் காட்சியைப் பற்றி முன்னொரு முறை மிகவும் மனம் விரும்பி எழுதியிருந்தேன். அந்தக் காட்சியை மீண்டும் இங்கே நினைவூட்டியதற்கு நன்றி வெங்கி ராம் சார்.