-
இனிய நண்பர் ஜெய் சார்
இதுவரை படிக்காத 1967 பொம்மை சினிமா இதழில் மக்கள் திலகம் விரைவில் குணமாக பார்வையாளர்கள் எழுதிய வாசகங்கள் கண்ணீரை வர வைத்தது . அருமையான ஆவணங்கள்.
ஒரே இரவில் 38 பதிவுகள் பதிவிட்ட முதல் மையம் உறுப்பினர் என்ற பெருமை உங்களுக்குத்தான் ஜெய் .
சாதனைக்கு பெயர் போனவர் நமது மக்கள் திலகம் .
அவர் வழி வந்த நீங்கள் படைப்பது சாதனையின் சாதனை .
அசத்துங்கள் ஜெய்
-
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
"ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?"
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
-
Mdmk - leader vaiko about our makkal thilagam
சி.நாகமணி, சென்னை-18.
''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''
''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!
அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.
'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.
அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.
தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''
-
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்ற பாடலில் நடித்து, இன்று பல கோடி ரசிகர்களின் மூச்சில் கலந்திருக்கும் அந்த மூன்றெழுத்து தான் எம்.ஜி.ஆர்., தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் , "புரட்சித் தலைவராய், மக்கள் திலகமாய், மன்னாதி மன்னனாய்,' வலம் வந்த எம்.ஜி.ஆர்.,ன் பிறந்த நாள் இன்று. "மறைந்தாலும், இவர் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற பாடல் வரிகள், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்.
"கருப்பு, வெள்ளை' காலத்திலும், தன்னை பற்றி "கலர்' கனவு காண
வைத்தவர். நவீனம் குடியேறிய பிறகும், ரசிகர் மனதில் குடியிருந்த கோயிலாய் ஜொலிப்பவர். "இருந்த இடம் தேடி வெற்றியும், தமிழகமே இவரைச் சுற்றியும்,'
வலம் வந்த வரலாற்றை மறக்கமுடியுமா? "தமிழகத்தில் இவர் தடம் பதியாத பகுதியும் இல்லை; அரசியல் பிரவேசத்தில் தோற்ற தொகுதியும் இல்லை,'. திரையுலகிலும் எம்.ஜி.ஆர்., தான் மாஸ். இன்றும் "ஹவுஸ் புல்' ஆகும், அவரது படங்களே அதற்கு சாட்சி.
இன்றைய நிலவரப்படி தலைவர்களுக்கு "கட் அவுட், போஸ்டர், பேனர்,' வைப்பதன் பின்னணியில், கட்சியில் ஏதாவது பொறுப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஒருவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், எதிர்பார்ப்பு இல்லாமல் அவர் பிறந்த நாளை ஏழைகள், ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் தானே மக்கள் தலைவர்.
இதோ மதுரை ரசிகர்கள் மனந்திறக்கின்றனர்...
வீரபாண்டி(செவித்திறன் குறைவுடைய கூலித்தொழிலாளி): பேசும், கேட்கும் திறன் இல்லாத எனக்கு, எம்.ஜி.ஆர்., திரையில் தோன்றினாலே குதூகலம் தான். நான்
பேச நினைத்ததெல்லாம் அவர் பேசினார். ஆனால் அவர் பேசிய வார்த்தையை தான் என்னால் கேட்க முடியவில்லை. இரு முறை நேரில் பார்த்திருக்கேன். ஒரு முறை காரில் சென்ற போது கைகொடுத்தார். எனக்கான உலகத்தில் ஒரே கடவுள் எம்.ஜி.ஆர்., தான்(சைகையில் பேசினாலும், அவர் கைகள் வணங்கிய போது எதிரில் இருந்தது எம்.ஜி.ஆர்., படம்).
போத்தி கோபாலகிருஷ்ணன்(ஸ்ரீமீனாட்சி பாரடைஸ் தியேட்டர் உரிமையாளர்): அரசியல் பிரச்னையால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட தடை விதித்தனர். எதிர்ப்பை மீறி வெளியிட முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர்., எங்கள் வீட்டிற்கு வந்து படப்பெட்டியை கொடுத்தார். தியேட்டருக்கு மின் சப்ளை துண்டித்தனர். முதன் முதலாக
ஜெனரேட்டர் வாங்கி படத்தை திரையிட்டோம். எங்கள் தியேட்டரில், 217 நாட்கள் ஓடியது. வேறெங்கும் வெளியிடாததால், வெளியூரிலிருந்து உணவு பொட்டலங்களுடன் வந்து, பல நாட்கள் தங்கி படம் பார்த்து சென்றனர். இன்றும் மாதத்திற்கு மூன்று எம்.ஜி.ஆர்., படம் திரையிடுகிறோம். புதிய படங்களுக்கான அதே "கலெக்ஷன்' கிடைக்கிறது.
விஜயகுமார்(கலைமதி கம்பைன்ஸ் ஆப்பரேட்டர்): கடந்த இரண்டு ஆண்டில் மதுரையில் மட்டும் 40 தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் வெளியானது. நவீன தியேட்டர்களில் டி.டி.எஸ்., ஒலியுடன், கியூப் மற்றும் யூ.எப்.ஓ., தொழில்நுட்பத்திலும் வெளியிட்டோம். புதிய படங்களுக்கு குறைவில்லாத வரவேற்பு, இன்றும் எம்.ஜி.ஆர்., படத்திற்கு உள்ளது.
ஞானசேகரன் (ரிக்ஷா தொழிலாளி): எம்.ஜி.ஆர்., படம் பார்த்தால் உணவே தேவையில்லை. ஒரு நாளில் நான்கு "÷ஷா' பார்த்த படங்கள் நிறைய உள்ளன. அவரை நேரில் பார்க்க சென்னை கிளம்பினேன். அவர் வீட்டில் இல்லை. இரண்டு நாட்கள் ரோட்டில் தங்கி, மூன்றாவது நாளாக பார்த்தேன். திரையில் வருவதை விட அழகாக இருந்தார். "வாத்தியாரே...' என, கத்திய போது, நிமிர்ந்து பார்த்தவர், சிரித்த படி என்னை நோக்கி கையசைத்து சென்றார்.
ரிக்ஷாக்காரன் படத்தில் அவர் அணிந்த உடைகளை தான், இன்றும் அணிகிறேன்.
மாணிக்கம் (ரிக்ஷா தொழிலாளி): விபரம் தெரிந்த நாளில் இருந்து ரிக்ஷா ஓட்டுகிறேன். கடுமையாக கால் வலிக்கும் போது, ரிக்ஷாவில் ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர்., போட்டோக்களை பார்த்தால், தானாக தெம்பு வரும். இன்று, பண்டிகையில் தான் படங்கள் வெளியாகின்றன. அன்று, எம்.ஜி.ஆர்., படம் வெளியானாலே பண்டிகை தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை ரசித்தவர்கள் ஏராளம். இப்படி மனம் விட்டு பேசினர். இவர்களை போல இன்னும் எத்தனையோ ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர்., வாழ்கிறார். "காலத்தை வென்றவன் நீ; காவியம் ஆனவன் நீ'.-நமது சிறப்பு நிருபர்-
courtesy- dinamalar
-
மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 25வது நினைவுநாள் வருகிற 23ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லி தமிழ் சங்கம் எம்.ஜி.ஆர். நினைவுகள் 25 என்ற ஒரு நிகழ்ச்சியை டில்லி தமிழ்ச் சங்க அரங்கில் நடத்துகிறது. இதில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் நிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகிறது. இலசவ மருத்துவ முகாம்களும் நடக்கிறது. இதில் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். டில்லி தமிழ் சங்கத் தலைவர் எம்.கிருஷ்ணமணி, நல்லி குப்புசாமி செட்டியார், டாக்டர் டத்தோ துரைராஜா, முன்னாள் அமைச்சர்கள் ராசா முகமது, வி.வி.சாமிநாதன், உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தமிழ் சங்கத்துடன் இணைந்து எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
-
-
-
தமிழக மக்களின் மனதில், இன்றும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்.ஜி.ஆர்., புகழ், எவராலும் என்றும் எட்ட முடியாதது. அவருக்கு, வரும் டிசம்பர் மாதம் 24ம்தேதி, 25வது நினைவு நாள். "மனிதருள் மாணிக்கம்' பட்டம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு ரொம்பவே பொருந்தும். இவரது கருணை பார்வைபட்டு, வளமான வாழ்க்கை பெற்றோர், கணக்கில் அடங்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர்., என்ற ஈகை பெருந்தகை யாளரை, ஜாதி - மத மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்துவோர் என்றும் உண்டு. அவரது பெயரை முன் நிறுத்தாமல், உச்சரிக்காமல், இன்றைக்கும் யாரும் அரசியலில் அடையாளம் பெற்றுவிட முடியாது.
தன் தாயின் அறிவுரைக்கு கட்டுப்பட்டு, சைக்கிள் கூட ஓட்ட கற்றுக் கொள்ளாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையே வசீகரிக்கும் கலையை எப்படி கற்றுக்கொண்டார் என்பது, அவரோடு பயணித்தவர்களால் கூட கற்றுக் கொள்ள முடியாத ரகசியம்.
உண்மையில் அது ரகசியமல்ல, எந்த நேரமும், ஈரம் கசியும் அவரது பொன் மனமும், கொடைத்தன்மையும் தான் என்பது ஊரே அறிந்த ரகசியம். ஆனால், அவர் ஒருவர் மட்டுமே, உயிருள்ள மட்டும் அதை பின்பற்றியது அதிசயம்.
பொருளாதாரமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே, சினிமாவில் இரட்டை வேடத்திலும், சண்டைக் காட்சிகளிலும் அவர் காட்டிய புதுமை, இன்றைக்கும் வியக்க வைக்கும் உத்திகளாகும். நடிப்பு, ஒளிப்பதிவு, டைரக்ஷன், தயாரிப்பு என்று, சினிமாவில் பன்முகக் கலைஞராக ஒளிர்ந்தாலும், புகைப்பட கேமரா மீது, அவருக்கு தனி கவனமும், கரிசனமும் இருந்தது.
இன்றைக்கு வரும் சினிமாவில் கூட, ரகசியமாய் படம் எடுக்கும் போது, "பிளாஷ்' அடிப்பது போல, தப்பாக காட்சி வைக்கும் சூழலில், பல வருடங்களுக்கு முன் வந்த, "ரகசிய போலீஸ் 115' என்ற படத்தில், அவர் பிளாஷ் உபயோகிக்காமல் ஒரு சின்ன கேமராவில் படம் எடுத்து, உண்மையிலேயே ரகசிய போலீசாக வாழ்ந்து இருப்பார். கேமராவை முதலில் படித்து விடுவார்; அதன்பின், அது தொடர்பாக நடித்து விடுவார் என்பர்.
கேமராவின் பரிணாம வளர்ச்சியை அடுத்தடுத்து வந்த அவரது படங்களின் மூலமே அறிந்து கொள்ளலாம். அனைத்து கேமராக்களையும் மிக லாவகமாக அவர் கையாளும் அழகே தனி. இப்படி கேமராவும் கையுமாக அவர் சினிமாவில் தோன்றிய காட்சிகளை தொகுத்து, அதை ஒரு புகைப்படக் கண்காட்சியாக, சென்னையில் கேமரா காதலரும், ஓவியருமான ஸ்ரீதர் வைத்திருந்தார். அந்த படங்களை, தங்கள் பகுதியில் கண்காட்சியாக வைக்க விரும்பும் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9884035121.
***
-
-