May his soul rest in peace.
Can we observe a day of silence(no posts in this thread) as a mark of respect for the departed soul?
It is about 8:30 AM Tuesday in India. Silence till 8:30 AM Wednesday.
Printable View
RIP..music @ MSV
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...136c3f7ac9dbc7
It was probably the last song he recorded.. And he sang as though it was his first song
https://www.youtube.com/watch?v=922I...ature=youtu.be
http://static.sify.com/cms/image/miln9Uhigjbsi.jpg
இன்பத்தை தவிர வேறொன்றும் தந்தறியாத இசை சக்கரவர்த்தி இறந்தார்.
மதுர கானங்களில் நான்கில் மூன்று பங்கு ஆக்கிரமித்த 'மெல்லிசை மன்னர்' மறைந்தார்.
இசை சாம்ராஜ்யம் வீழ்ந்தது. இனி இனிமைக்கு யாரை நாடுவோம்?
இனி அவர் பாடல்களே எங்களுக்கு ஜெபம்.
நடிப்பின் சக்கரவர்த்தி மறைந்த போது ஆவி துடித்தது
மெல்லிசை மன்னர் மறைந்த போது நெஞ்சு துடிக்குது.
இறப்பு உங்களையும் எங்களையும் பிரிக்கலாம்
இசையும் ரசிப்பும் எங்களின் பரிமாற்றவல்லவா!
அதைப் பிரிக்க எவருக்கும், எதற்கும் சக்தியில்லை.
மெல்லிசை மன்னரை இறந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், இரு திலக ரசிகர்களுக்கும், மதுர கானங்களின் நண்பர்களுக்கும், மற்ற ஏனையோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையும், நாதமும் கலந்த விஸ்வரூப விஸ்வநாதனே!
உம் ஆத்மா சாந்தி அடையட்டும்.
உன் புகழ் பாட மதுர கானங்கள் என்றும் இருக்கும்.
மெல்லிசை மன்னர் காலமாகவில்லை, காலாகாலத்துக்கும் நம் இதயங்களில் நிறைந்து வாழும் இசை வடிவமாகி விட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு கைத்தாங்கலாக அழைத்து வரப் பட்டபோதே நம் இதயம் நெகிழ்ந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தது.
இன்று அதிகாலை இசை ரசிகர்கள் மீது பேரிடி விழுந்து விட்டது.
அவர் உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும் தன அழியாத பாடல்களால் நம்மிடையே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவர் புகழைப் போற்றுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.
எம்.எஸ்.விஸ்வநாதன்
( நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்டது )
சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி.கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள். நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார்.
பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தியவர் இவர்.
இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக்குழுவில் எம். எஸ். விஸ்வநாதன் ஆர்மோனியக் கலைஞராகவும் ,டி. கே. ராமமூர்த்திவயலின் கலைஞராகவும் பணிபுரிந்தனர் . உடல் நலகுறைவு காரணமாக, தன்னுடைய முப்பது வயதில் சுப்புராமன் மறைந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து அவரது இசையமைப்பில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களின் இசைப்பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த இவரும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.
எம்.எஸ்.வியிடம் கவியரசு கண்ணதாசன் விருது பெற்ற போது , தமிழ், தெலுங்கு தேவதாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம்.""வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது'' என்று சொல்லி தன்னுடைய "பணம்' என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் " ராமமூர்த்தி -விஸ்வநாதன்' என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை சுமார் 700 படங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.
இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப்பாட்டு, செந்தமிழ்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் தில்லு முல்லு படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைந்து இசையமைத்தார்.
1951-ல்ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் தமிழ்த் திரை இசை உலகின் முடிசூடா மன்னராக இருந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.
`பாசமலர்’ படத்தில் பாட ஆரம்பித்த இவர் வி.குமார், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார்.
`புதியபறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த இவர் `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக் கோர்ப்பு செய்தவர்.`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடலை 20 நிமிடங்களில் உருவாக்கிய இவருக்கு `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலை உருவாக்க இரண்டு மாதம் ஆனதாம்!
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப் படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது எகிப்திய இசையைப்`பட்டத்துராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்.
எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரது இசையில் பாடி இருக்கிறார்கள்! இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திய வரும் இவர் தான் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும் `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் `காதல்மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன்,சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர். 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசன் சந்திரபாபு "சித்ராலயா" கோபு முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில் திரு சிவாஜி கணேசனால் இவருக்கும் இராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள்
என்று பட்டம் வழங்கப்பட்டது.
கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும் தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை அது இன்றுவரை பெரிய ஏமாற்றம்தான்.
இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம்.
'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'
http://blog-assets.spuul.com/wp-cont...Paravaigal.jpg
வாசுதேவன் சாரும், யுகேஷ் சாரும் ஹிந்துவில் வந்த 'உல்லாசப் பறவைகள்' படப் பாடல்கள் பற்றிய பதிவை அளித்திருந்தார்கள். அதைப் படித்ததிலிருந்து 'உல்லாசப் பறவைக'ளின் மிக மிகச் சிறந்த பாடலான,
'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'
பாடலே எண்ணம் முழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது. 'மெல்லிசை மன்னரி'ன் இழப்பு சோகமே தற்காலிகமாக அதைக் கொஞ்சம் விரட்டியது.
முதலில் அந்த அருமையான கட்டுரையைப் பதித்த இரு நண்பர்களுக்கும் நன்றி.
பிறகு அந்தக் கட்டுரையை எழுதின ரசனையாளருக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
'உல்லாசப் பறவைகளி'ன் பாடல்கள் அனைத்தையும் ரத்தினச் சுருக்கமாக அந்த விமர்சகர் எழுதியிருந்தாலும் குறிப்பிட்ட 'அழகு ஆயிரம்' பாடலுக்கு அவர் எழுதியிருந்த ஒரு சில வரிகள் அருமையிலும் அருமை. மிக ரசனையாக ஓரிரு வரிகளில் அந்தப் பாடலின் மகத்துவத்தை அவர் உணர்த்தியிருந்தார்.
இந்தப் பாடல் அன்று முதல் இன்று வரை என்னைப் பைத்தியமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலைப் பற்றி நான் எண்ணாத நாளே இல்லை எனலாம்.
இசைக் கருவிகளின் ஆதிக்கம் நிறைந்த ஒரு பாடல். நோட்ஸ் எல்லாம் வினாடிக்கு வினாடி திகைக்க வைக்கும். அதுவும் ராஜா கிராமப் பின்னணியிலிருந்து மாறுபட்டு வெஸ்டர்ன் இசைக்கு வந்த ஆரம்ப காலத் துவக்கம்தான் அது. ஆனால் ராஜா எல்லாவற்றிலும் கரை கண்ட பிறகு கூட இந்த ஒரு பாடலுக்கு கொடுத்த இசை போல வேறு படத்தில் கொடுக்கவில்லை என்பது தனிப்பட்ட்ட என் தாழ்மையான கருத்து. இதை விட பிரம்மாண்டங்களை ராஜா தந்திருந்தாலும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வினாடி இசையும் தேவ ரகசியம் போல பல இசை விஷயங்களை உள்ளடக்கியது.
இந்தப் பாடலின் ஆரம்ப வினாடியே அப்படியே நம் உயிர் அணுக்களில் ஊடுருவி உடல் சில்லிட ஆரம்பித்து விடும். கட்டுரையாளர் மிக அழகாகக் குறிப்பிட்டிருந்தார் முகப்பு இசையிலேயே ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா என்று. எவ்வளவு உண்மை!
'உய்ய உய்ய உய்ய'...என்று சைரன் ஒலி போல இசை அஸெண்டிங்காகத் தொடங்கி அப்படியே அதனுடன் இணையும் பியானோவின் இசை (டங்டங்டங்டங்டங்... டங்டங்டங்டங்டங்) அந்தப் பியானோவின் இசைக்குப் பின்னால் மெதுவாகத் தட்டப்படும் டிரம் ஒலி, இவை எல்லாம் மிகச் சரியாக ஒன்றாகக் கலந்து நம் உடலோடு கலக்கும் போது அப்படியே பாடலின் டியூன் கிடாரில் மென்மையாக வந்து மிருதுவாக நம் முன்னாடி விழும். அதையே ஒரு ஆண்குரல் 'ததததாததா.... ததததாததா' ஹம்மிங் செய்யும் போது நம் மனம் இறக்கை கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வயலின்களின் மொத்த ஓசையும் கடல் அலை போல ஒன்று போல் எழுந்து ஆர்ப்பரித்து அடங்கும்! அந்த அலை அடங்கவும் அதிலிருந்து ஜானுவின் குரல் அம்சமாக எழும்பவும் திரும்பவும் சுகம் சுகந்தத் தென்றலாய் பரவும்.
ஜானகி எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத பாடகி. ஆனால் இந்த ஒரு பாடலில் என் எண்ணத்தை சுக்கு நூறாக்கினார் அவர். இந்த ஒரு பாடல் போதும். 'சிங்கார வேலேனே தேவா'வில் சொக்கிப் போனவர்கள் ஏராளம். ராஜாவின் ஏகப்பட்ட பாடல்கள் ஜானகியிடம் போக, பிடிக்கிறதோ இல்லையோ ஜானகி சூப்பர் என்று ஒட்டு மொத்த தமிழகமும் ஓலமிட்டது..
ஊர் விட்டு ஊர் செல்லும் தனியார் பஸ்களில் ஜானகியின் முக்கலும் முனகலும் 5.1 ஸ்பீக்கர்களில் பஸ்சின் எஞ்சின் இரைச்சலையும் மீறி அலறியது.
ஆனால் என்வரையில் இந்த ஒரு பாடலுக்காகவே ஜானகி என்னுள் சமரசமானார். மாறாக என்னை மண்டியிடவும் வைத்தார் என்று ஒத்துக் கொள்ள எனக்கு வெட்கம் இல்லை. அந்த அளவிற்கு தன்னுடைய குரல் ஜாலத்தால் செயற்கைத்தனம் சிறிதும் இல்லாமல் வெகு அமர்க்களமாக இப்பாடலின் மூலம் மனதில் நுழைந்து வெளியே கிளம்பாமல் அங்கேயே குடிகொண்டு விட்டார். 'ஒ மாம மியா மாம மியா’ என்று அவர் பாடும் அழகை வர்ணிக்க எங்கு சென்று வார்த்தைகளைத் தேடுவது? அவர் குரலோடு சேர்ந்து பின்னால் 'மாம மி' என்று குரல்கள் ஒலித்து 'டக்'கென்று நின்றுவிடும் விந்தைகளை ராஜா தவிர வேறு யார் செய்து விட முடியும்?
'இறைவனின் திருக்கரம்.... எழுதிய ஓவியம்' என்று ஜானகி ஏறி ஏறி இறங்குவார். 'மாம மியா மாம மியா மாம மியா ...மா' என்று 'மா' என்ற ஒற்றை எழுத்துக்கு முடியும் போது அந்த எழுத்திற்கு 'மா'மரியாதை கிடைக்கும். பின்னணி கோரஸ் அற்புதமாக ஜானகியுடன் மேட்ச் ஆகும்.
இளையராஜாவின் திருக்கரம் எழுதிய இசை ஓவியங்கள் ஆயிரம் ஆயிரம் இருக்க இந்தப் பாடல் தனி 'மாம மியா'தான். அடுத்தடுத்து வித விதமான ஒலிகள் பின்னணிகள் அந்த சிறிய இடைவெளிக்குள் இந்திர ஜாலங்கள் புரிய ('கூக்கூக்கூ... கூக்கூக்கூ' என்ற இருமுறை ஒலிக்கும் அந்த புல்லாங்குழல் பின்னணி உட்பட) சற்றே பெண்மைத் தன்மை விடுத்து, குரலைத் தடிமனாக்கி, ஜானகி லேசான ஆண் குரலின் ரேஞ்சில் 'பா...பபபபப்பா' என்று பாடத் துவங்கும் அழகு பரவசமல்லாமல் வேறு என்ன? 'பா...பபபபப்பா' வுக்குப் பின்னால் அதனுடன் சேர்ந்து ஒலிக்கும் இசை சித்து வேலைகள் பார்த்து பார்த்து ராஜாவால் செதுக்கப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு மெல்லிய பியானோவின் ஒலி மட்டுமே இசைக்கப்பட்டிருக்கும்.
'ஹே......... மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்'
'ஹே.........' என்பதை மெதுவாக ஆரம்பித்து அம்சமாக உச்சத்துக்கு கொண்டு வருவார் ஜானகி. குரலில் லேசான நடுக்கத்தை அழகாகக் காட்டுவார். பின்னால் ராஜாவின் வான வேடிக்கைகளை கவனிப்பதா.... ஜானகியின் ஜாலங்களைக் கவனிப்பதா என்று மனம் குழப்பமடையும். இன்பத்தை ஒரு சேர அனுபவிப்பது எப்படி என்று எங்காவது கற்றுக்கொண்டுதான் நாம் வரவேண்டும். எவ்வளவு துன்பத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம்.... இந்தப் பாடலின் இனபத்தை தாங்கவே முடியாது போல் தோன்றும்
'இளமையின் சிலிர்ப்புகள்...புதுமையின் அழைப்புகள் எங்கும் 'மாம மியா மாம மியா' என்று மீண்டும் நம் மீது தேன் கொட்டும்.
http://i60.tinypic.com/wrkxf4.jpg
அடுத்த சரணம் தொடங்குமுன் ராஜா புறாக்கள் பறந்து போவதற்கான சப்தம் ஒன்று தருவார். அவ்வளவு அம்சமாக இருக்கும் 'டர டர டர டர டங்' என்பது போல். அப்படியே அதனுடன் சேர்ந்து மிக அழகான கிடார் பிட் ஒன்று அடுத்து வரும். பின் அதனுடன் சேர்ந்து பின்னால் வயலின் விளையாடத் தொடங்கும். வயலினும், பியானோவும் மாறி மாறி மார் தட்டும்.
முதல் சரணத்தில் 'ஹே' என்று தொடங்கியவர் இப்போது 'ஆ' என்று ஆரம்பித்து ஆனந்தப்படுத்துவார்.
ஆ...மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
திரும்ப அதை எடுக்கும் போது ஜானகி பழையபடி 'ஹே'... என்று மாற்றி தொடருவார்.
ஹே....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
'மாலையே இந்த மாலை... வேளையே நல்ல வேளை...இனியது கனவுகள்... மயங்கிய நினைவுகள் எங்கும்
மாம மியா மாம மியா'
அதே முதல் சரணத்தின் இனிமை தொடரும்.
'லலலலாலலா... லலலலாலலா' என்று அற்புதமாகப் பாடலை முடிப்பார் ஜானகி.
உணர்வு சம்பந்தப்பட்ட சில பாடல்கள், சோகப் பாடல்கள் என்றெல்லாம் நம் நாடி நரம்புகளை அசைத்துப் பார்த்து நம்மையறியாமல் நம் கண்களில் நீர் துளிர்க்கச் செய்யும் பாடல்கள் பல உண்டு. அந்தப் பாடலின் காட்சியோடு ஒன்றி விட்டால் இன்னும் நம் நிலைமை கவலைக்கிடம் ஆகும். (எனக்கு 'மெல்லிசை மன்னரி'ன் 'நேரான நெடுஞ்சாலை')
ஆனால் காதலன், காதலி இருவரும் வெளிநாடுகளில் சுற்றி ஆனந்தமாகத் திரியும் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் உடல், உள்ளம் சிலிர்த்து கண்களில் ஓரம் நீர் தெறிக்கிறதே! இது என்ன மாயம்?!
இத்தனைக்கும் சந்தோஷமான பாடல். காட்சி அமைப்புகள் அப்படியே ஒன்றி விடவும் வைக்காது. கமல் ரதி ஓடல்கள், துரத்தல்கள், விளையாட்டுக்கள், பிளைட், ஸ்கேட்டிங், உயர்ந்த கட்டடங்கள், ஆயிரக்கணக்கான கார் பார்க்கிங், கார் லோட் எடுத்துச் செல்லும் கண்டெயினர் என்று ஜாலியான, வழக்கமான வெளிப்புறப் படப்பிடிப்புதான்.
ஆனால் நம் நரம்புகள் அனைத்தும் இளையராஜாவின் வாத்தியங்களால் மீட்டப்படுகிறதே! ஜானகியின் வளமான குரலினால் 'ஜாம் ஜாம்' என்று மனம் குதிக்கிறதே! கண்களில் பொழிவது ஆனந்தக் கண்ணீர்தான். சந்தேகம் இல்லை.
ராஜா! இந்த ஒரு பாடல் போதும் நீ என் நெஞ்சை விட்டு அக்லாதிருக்க.
ஜானகியம்மா! மனதை விட்டு போக மறுக்கிறீர்கள்.
ஒரு நாளோ... இரண்டு நாளோ... பாடல் கம்போஸ் முடித்துவிட்டு, பாடி விட்டுப் போய் விடுவது நீங்கள். ஆனால் இங்கு வாழ்நாள் முழுதும் இந்தப் பாடலை எண்ணி எண்ணி வியந்து போவது நாங்களா? அந்த இனிமையிலே மூழ்கி எங்களைத் தொலைத்துக் கொள்வதும் நாங்களா?
இது நியாயமா?
http://i.ytimg.com/vi/Ga5WH7_hEZE/hqdefault.jpg
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமமியா மாமமியா மாமமிய..மா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
பா...பபபபப்பா....பபபபப்பா...பபபப்பா....பபபப்ப ா
ஹே...மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
ஹே...மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
சோலையில் எங்கும் காற்று
காற்றிலே எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமமியா மாமமியா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாம மியா மாம மியா மாமமியா மா
ஆ....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
ஹே......மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
மாலையே இன்ப மாலை
வேளையே நல்ல வேளை
இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமமியா மாமமியா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமமியா மாமமியா மாமமியா மா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
லலலலாலலா..லலலலாலலா
https://youtu.be/DN9GdmNjVbc
பியானோவில் இந்தப் பாடல் ஒலிக்கப்படும் அற்புதத்தை போனஸ் பதிவாகப் பெறுங்கள். மிஸ் பண்ணி விடாதீர்கள்.
https://youtu.be/7jqOhmf4d1M
வாசு , ஒரு இனிப்பை தந்து சுவைத்து முடிக்கும் முன் , இன்னொமொரு விருந்து - உங்கள் தீவிர ரசிகர்களான நாங்கள் எல்லோரும் இனி இன்சுலின் Dependents தான் . மிகவும் அழுக்கான துணிகளைக் கூட சற்றே சிரமம் எடுத்து அலசி விடலாம் - ஆனால் , படத்தயாரிப்பளர்களுக்கே தெரியாத அவர்களின் படங்களை , அதில் வரும் பாடல்களை தேடிக் கொண்டுவந்து , தீவிரமாக அலசி , நாங்கள் பார்க்காத கோணங்களில் விவரித்து , சரளா , குசல குமாரி போன்றவர்களை வாழவைக்கும் உங்கள் பதிவுகளை இன்னும் சரியாக பாராட்ட வேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி எங்களுக்கு போறாது . உங்களிடம் இருந்து இன்னும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் :
1. அங்க முத்து
2. அங்குச பிரகதாம்பாள் - 1951 இல் வந்த மின்னல் கொடியில் கதாநாயகிக்கு சித்தியாக நடித்தவள் .
3. ஸ்வப்பன சுந்தரி
சும்மா ஒரு நகைச்சுவைக்காக சொன்னேன் ... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - உங்கள் பதிவுகள் உண்மையில் MSV யின் இழப்பிற்கு , மனத்தின் வேதனைக்கு சற்றே ஆறுதலாக உள்ளன . தொடருங்கள் ---
கருவின் கரு - 191
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக
நகையை விற்றேன்..!
முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்..!
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..!
மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..!
சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்..!
பயணச் செலவுக்கு பல சமயம் என்
பசியை விற்றேன்..!
தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்..!
கடைசியில் கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்..!
படித்தாய்.. உயர்ந்தாய்.. வளர்ந்தாய்
வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையும்..!
இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்
நானிருப்பதோ முதியோர் இல்லத்தில்..!
எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்
எல்லாம் வாங்கியும் உன்னிடம் காணாமல் போனது .
உன் இதயம்
https://www.youtube.com/watch?v=vAoUr0p094g