-
சரத்குமார் அணியில் நடிகர் சங்கத் தேர்தலில் சிம்பு, தனுஷ் போட்டி? - திருச்சி நாடக நடிகர் சங்க பொதுச்செயலாளர் தகவல்
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ் போட்டியிட உள்ளதாக திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு கேட்டு விஷால் தரப்பினர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 19) மாலை திருச்சி தேவர் ஹாலில் நாடக கலைஞர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் சங்கப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகமது மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 248 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 148 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குரிமை உள்ளது.
திருச்சி நாடக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி அணியை ஆதரிக்கிறது.
சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடப் போகிறார். அது பொருளாளர் பதவியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, ஏற்கெனவே எங்கள் அணியிலுள்ள தனுஷ், எஸ்.எஸ்.ஆர். மகன் கண்ணன் போன்றோரும் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
திருச்சியில் விஷால் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றார் எம்.எஸ்.முகமது மஸ்தான்.
நடிகர் சங்கத் தேர்தலில் தனுஷ், சிம்பு போட்டியை வரவேற்கிறோம்: நடிகர் விஷால் பேட்டி
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர்கள் தனுஷ், சிம்பு போட்டியிட உள்ளதாக திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் நேற்று முன்தினம் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாமக்கல்லில் நாடக நடிகர் சங்கத்தினர் மற்றும் விஷால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் விஷால், நடிகர்கள் தனுஷ், சிம்பு ஆகியோர் போட்டியிடுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது. அதை கேட்பது தவறா?. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நாங்கள் உள்ளே வரக்கூடாது என எதிர்க்கிறார்கள். ஆனால், வந்துவிட்டோம். சேலம் நாடக நடிகர் சங்கத்துக்கு நடிகர் ரித்தீஸ் ரூ.10 லட்சம் வழங்கியதாக கூறுகின்றனர். அதற்கான பதிவு இல்லை. சரத்குமார் பெரிய நடிகர், வயதில் மூத்தவர், அவரை நாங்கள் எப்படி மிரட்ட முடியும்.
எங்கள் அணியில் நடிகர் நாசர், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். கமல் போன்ற பெரிய நடிகர்களை, சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அவமரியாதை செய்கின்றனர்.
முதல்வரை சந்திப்போம்
நடிகர் தனுஷ், சிம்பு போன்றோர் தேர்தலில் போட்டி யிடுவதை வரவேற்கிறோம். சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நடிகர்கள் நாசர், சரவணன், கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
காதலில் முடிந்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் உறுமீன் நட்பு
ஒளிப்பதிவாளர் குகன் இயக்கிய இனிது இனிது படத்தில் அறிமுகமானவர் ரேஷ்மி மேனன்.
அதன் பிறகு, தேநீர் விடுதி உள்பட சில படங்களில் நடித்தார். பாபி சிம்ஹா நாயகனாக நடித்துவரும் உறுமீன் படத்தில் இவர்தான் நாயகி.
இந்தப் படத்தின் போது பாபி சிம்ஹாவுக்கும், ரேஷ்மி மேனனுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், ரேஷ்மியின் வீட்டினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும், அவரது தந்தையும் ரேஷ்மியின் வீட்டினரை சமாதானப்படுத்தியதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கயிருப்பதாகவும் தகவல்.
இதனை பாபி சிம்ஹா மறுத்தார். இந்த செய்தியில் உண்மை இல்லை என்றார். ஜோ*திகாவுடன் காதலே இல்லை என்றுதான் சூர்யாவும் கூறினார். ஆனால், உண்மை அதுவல்லவே.
பாபி சிம்ஹா கூறுவது பொய், ரேஷ்மியும் அவரும் காதலிக்கிறார்கள். அடுத்த மாதமே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கலாம் என்கிறார்கள் படயூனிட்டில்.
-
'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - vikatan
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் சந்தானம். தன்னுடன் பணியாற்றியவர்கள், பணியாற்றுபவர்கள் அனைவரையும் இயக்குநராக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார் சந்தானம். முருகன் மற்றும் ப்ரேம் ஆனந்த் என தன்னிடம் பணியாற்றிய இருவரையும் முருகானந்த் என்ற பெயரில் 'இனிமே இப்படித்தான்' படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் சந்தானம். அந்நிகழ்ச்சியில் இயக்குநராக பணியாற்றிய ராம்பாலா இயக்கவிருக்கும் படத்தில் தற்போது நாயகனாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சந்தானம்.
இது முழுக்க பேய் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக இருக்கிறது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தைப் போல இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க சந்தானம் தயாரிக்க இருக்கிறார்.
-
அருள்நிதி படத்துக்கு மீண்டும் சிக்கல் - தடை கோரி வழக்கு
அருள்நிதி நடித்திருக்கும், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படம் வரும் 24 -ஆம் தேதியும் வெளியாகும் என்று தோன்றவில்லை. படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை 21 லட்சத்துக்கு எம்.எஸ்.கே.ஃபிலிம் புரொடக்ஷன் என்ற நிறுவனத்துக்கு தருவதாக ஒப்பந்தம் போட்டு 7 லட்சம் அட்வான்ஸும் வாங்கியிருக்கிறார்கள். படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் நிலையில், மீதிப் பணத்தை தந்து உரிமையை வாங்க நினைத்திருக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
அதனால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று எம்.எஸ்.கே. நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை 23 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு காரணமாக 24 -ஆம் தேதி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
ரஜினிமுருகன் ரிலீஸ் தாமதமாவது எதனால்?
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகிவரும் படம் ‘ரஜினிமுருகன்’. படத்திற்கு இசை இமான். இந்த படத்தின் டிரெய்லர் , பாடல்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியாகாமலே உள்ளன.
இது தவிர்த்து நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் படத்தின் டப்பிங் வேலைகளே இன்னும் இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் என்றும் படத்தின் பின்னணி வேலைகள் முடிய இன்னும் 10 நாட்கள் பிடிக்கும் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எப்படி படக்குழு முன்னரே அறிவித்தனர் எனக் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதே போல் படத்தின் ரிலீஸ் தேதியும் கூட ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என தகவல்கள் கசிந்துள்ளன.
பலரும் படத்தின் ரிலீஸ் தேதி இதுவாக இருக்கலாம் , அதுவாக இருக்கலாம் என தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்னும் படத்தின் வேலைகளே முடியவில்லை என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமே.
-
குஷி பார்ட் 2: ஓகே சொல்வாரா விஜய்?
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000த்தில் எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் , ஜோதிகா, நடிப்பில் காதல், ஈகோ, என இளசுகளில் மனதை அப்படியே படம்பிடித்து காட்டிய படமாக வெளியானது ‘குஷி’. இந்த படத்திற்காக ஜோதிகா சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
சிறந்த இசைக்காக தமிழ் நாடு மாநில விருதை தேவா வென்றார். மேலும் எஸ்,ஜே.சூர்யாவின் ‘வாலி’ படத்தையடுத்து இந்த குஷி படமும் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தை இப்போது வரை உருவாக்கிக் கொடுத்தது.
இந்நிலையில் இந்த படம் தனக்கெ சினிமா உலகில் சரியான பாதை அமைத்துக் கொடுத்தது என்பதை விஜய்யும் பல நிகழ்ச்சிகளில் பகிர்ந்துள்ளார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய்யிடம் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளாராம்.
விஜய் தரப்பிலிருந்து படம் குறித்து இன்னமும் பதில் வரவில்லை. மேலும் துப்பாக்கி, கத்தி, ஜில்லா , என விஜய் ஆக்*ஷன் நாயகனாக களம் இறங்கிவிட்ட இந்நிலையில் விஜய் இந்த படத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஒருவேளை அவர் சம்மதித்தார் எனில் அவரது ரசிகர்களுக்கு இது பேரின்பச் செய்தியாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
-
விஜய்சேதுபதி படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?
பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஆகிய படங்களின் மூலம் பெரிய அளவிற்கு முன்னேறினார் விஜய்சேதுபதி. இப்போதைக்கு இவருக்குப் போட்டியாக எண்ணப்படும் சிவகார்த்திகேயனோ சரியான இடைவெளியில் படங்களைக் கொடுத்து வரும் நிலையில் விஜய் சேதுபதியின் படங்கள் இன்னும் வெளியாகாமலேயே உள்ளன.
மேலும் சமீபகாலமாக ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு ஆகிய பெரிதாக படங்களும் பேசப்படவில்லை. மேலும் விஜய் சேதுபதி என்றாலே தனது கேரக்டர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமாக நடித்தாலும் வசூலில் பெரிதாக இருந்தால்தான் ஹீரோவுக்கு மதிப்பு. அந்தவகையில் அண்மைக்காலப் படங்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல், மற்றும் அவரது நடிப்புக்காகவும் ,கெட்டப்பிற்காகவும் எதிர்பார்க்கப்படும் ஆரஞ்சு மிட்டாய் படங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகிறார்களாம்.
31ம் தேதி வெளியாக உள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு இப்போது வரை 100 திரையரங்குகள் கூட உறுதியாகவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அதே நாளில் ஜெயம் ரவியின் ‘சகலகலாவல்லவன் அப்பாடக்கர்’ மற்றும் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படங்கள் வெளியாக உள்ளன. எனவே தியேட்டர்கள் கிடைப்பதும் சிரமமாக இருக்கும் என்பதால் பட ரிலீஸை தள்ளிபோடலாமா என யோசித்து வருகிறதாம் படக்குழு.
-
திருப்பதி பிரதர்ஸூக்கு 'தூங்காவனம்' அளிக்க கமல் திட்டம் - tamil hindu
ராஜேஷ் இயக்கத்தில் நடித்துவரும் 'தூங்காவனம்' படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க கமல் திட்டமிட்டு இருக்கிறார். கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'தூங்காவனம்'. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தை கமலிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கி வருகிறார். ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
'தூங்காவனம்' ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கையெழுத்திட்ட 30 கோடியில் முதல் பிரதி அடிப்படையிலான படத்தை துவங்க திட்டமிட்டு இருந்தார் கமல். ஆனால், தற்போது 'தூங்காவனம்' படத்தை அளிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
இது குறித்து "'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்துவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 80 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க திட்டமிட்டோம், ஆனால் முன்பாக படம் முடிவடைந்து விடும் என நினைக்கிறேன். மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த உடன் படத்தின் செலவு கணக்கிட்டுவிட்டு, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கலாம் என்று கமல் சார் திட்டமிட்டு இருக்கிறார்" என்று படக்குழுவில் பணியாற்றுபவர் தெரிவித்தார்.
'தூங்காவனம்' படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளித்துவிட்டால், கமலின் அடுத்த படமாக 'தலைவன் இருக்கின்றான்' தயாராக இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நான்கு நாளில் முடிவுக்கு வந்தது வேலைநிறுத்தம், 31 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடக்கம்
பெப்சி தொழிலாளர்கள் திடீர் சம்பள உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து, பட அதிபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தார்கள் இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் நடந்துவந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. http://img.vikatan.com/cinema/2015/0...ges/taanu1.jpg
இந்த நிலையில் சம்பள பிரச்னை தொடர்பாக பட அதிபர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்குமிடையே கடந்த மூன்று நாட்களாக சென்னை பிலிம்சேம்பரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இரண்டு தரப்பினர்களிடையேயும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை முடிந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சம்பள பேச்சுவார்த்தை சுமூகமாக சென்ற நிலையில் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர்கள் சங்கத்தினருடன் மட்டும் பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. மற்ற அனைத்து சங்கத்தினருடனும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் போன்ற இதர பணிகளை நடத்துவது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இருப்பினும் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி நடைபெற்றுவருதால், தமிழக அரசின் ஆணைப்படி இன்று ஒருநாள் மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்து நாளை முதல் அனைத்துப் பணிகளையும் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
காக்காமுட்டையைத் தொடர்ந்து உலகை கவனிக்க வைத்திருக்கும் வெற்றிமாறன்
மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து படமாக்குபவர் வெற்றிமாறன். அவருடைய அடுத்த படம் விசாரணை. தனுஷ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.
இதற்கு நடுவில் பாரம்பரியமிக்க வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்று உலக சினிமாக்களுடன் போட்டிபோடவிருக்கிறது. முதன் முறையாக தமிழிலிருந்து வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் படமும் இதுவே.
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே விருதுகளும் பாராட்டுகளும் நிச்சயம் என்பதை ஆடுகளம், காக்காமுட்டை ஆகியவற்றைத் தொடர்ந்து விசாரணை படம் வெளியாவதற்கு முன்னரே நிரூபித்துவிட்டனர்.
ஆட்டோ சந்திரகுமார் என்பவர் தான் ஜெயிலில் அனுபவித்த சம்பவங்களை மையப்படுத்தி எழுதிய லாக்-அப் நாவலை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் காவல் நிலையத்தில் நிகழும் உண்மை நிகழ்வை அப்படியே படமாக்கியிருக்கிறாராம் இயக்குநர்.
கைதியாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார். கிஷோர், சமுத்திரகனி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் இறுதியாக படத்தொகுப்பு செய்த படமும் இதுவே.