-
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
நன்றிகள் மேடம். நீங்கள் பதிவு செய்திருந்த உணர்ச்சிபூர்வமான அந்தப் பதிவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். தெள்ளத் தெளிவான,மிக நியாயமான உள்ளக்குமுறல்கள். நிஜமாகவே உள்ளம் வலிக்கிறது மேடம்.இவ்வளவு சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் நடுவே அவர் சிறிதும் கலங்காது தன்னுடைய தொழிலில் இம்மியளவும் பிசகாது நடிப்பில் மேலும் பற்பல முத்திரைகளைப் பதித்தாரே... அதனால்தான் மனிதரில் மாணிக்கமாய் மக்கள் மனதில் மங்காப் புகழுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.
அன்பு மாணவன்
வாசுதேவன்.
-
டியர் கார்த்திக் சார்,
'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' தொகுப்பிற்காக தாங்கள் அளித்துள்ள பட்டியல் மிரள வைக்கிறது. சூப்பர் சார். இன்னும் ஒரு சில.
கல்தூண் (உடுக்கை)
குறவஞ்சி (குறவர் டப்பா)
எங்க மாமா (மரகாஸ்)
http://t0.gstatic.com/images?q=tbn:A...gl-3pSts2emNjw
நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் கார்த்திக், வாசுதேவன் சார்,
தாங்கள் பட்டியலிடும் போது மேலும் சில கருவிகள் நினைவுக்கு வருகின்றன.
இமைகள் திரைப்படத்திலும் ட்ரம்ஸ் வாசிப்பார் என நினைவு
அதே போல்
ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தில் டான்சேனியா மாநாட்டிற்குப் பின் நீக்ரோ வேடத்தில் வரும் போது பேங்கோஸ் வாசிப்பார் என நினைக்கிறேன்.
சரிபார்த்துக் கொள்ள வேணடும்.
அன்புடன்
-
'ரசிக வேந்தர்' திரு ராகவேந்திரன் சாருக்காகவும், நம் ஹப் அங்கத்தினர் அனைவருக்காகவும்
'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்'
நிழற்படங்கள் வரிசைகளின் தொகுப்பு.
மிக விரைவில்
அன்புடன்
வாசுதேவன்.
-
நன்றி வாசுதேவன் சார்.
தங்களுடைய பணி மிகவும் மேன்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இதோ இசைக் கருவிகளின் அணிவகுப்பில் நடிகர் திலகம். ஒரே பாடலில் நான்கு இசைக் கருவிகள்
பாடல் - ஸ்ரீலங்கா சின்ன ராணி
திரைப்படம் - இமைகள்
இசை - கங்கை அமரன்
பெயர்கள் ஆங்கிலத்தில் தரப் பட்டுள்ளன
Drums
Treple bangos
Bangos
Guitar
http://i872.photobucket.com/albums/a...trumentsfw.jpg
இமைகள் திரைப்படத்தை மனதில் வைத்து ஜெனரல் சக்கரவர்த்தி என்று தவறாக எழுதி விட்டேன் மன்னிக்கவும்.
அன்புடன்
-
டியர் ராகவேந்திர சார்,
நன்றிகள் பல.என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டதில்.
A(vare) N (iranthara ) M (udalvar).
-
அன்புள்ள கார்த்திக் சார்,
நன்றிகள் பல.
எல்லா ரசிகர்களையும் போல் நானும் ஒரு தீவிர ரசிகன்தான். 2003-இல் சிவாஜி விழாவில் திரு. Y.g. மகேந்திர அவர்கள், தான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன், அல்ல, அல்ல, தீவிர வெறியன் என்றார்.அவரைப் போல் தான் நாம் எல்லோரும், என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நிச்சயமாய் எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன்.
அன்புடன்,
anm.
-
அன்புள்ள வாசுதேவன் சார் அவர்களுக்கு,
என் தலை வணங்கி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு மாத காலமாக இந்தத் திரியைப் படித்து, பார்த்து, இன்புற்று வந்தேன். எத்தனை வருடங்களை இழந்து விட்டேன் என்று தெரிகிறது.
அன்புடன்,
anm
-
என்றும் அணையா ஜோதியில் வந்து ஐக்கியமாகி இருக்கும் anm அவர்களே, உங்களை இந்த சபைக்கு பெருமையுடன் அழைக்கிறோம். உங்கள் ரசனைகளை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! காத்திருக்கிறோம்!
அன்புடன்
-
சாரதா/கார்த்திக்/வாசு சார்,
ராகவேந்திரன் சார் பதிவிட்ட பல்வேறு இசைக்கருவிகளுடன் நடிகர் திலகம் பற்றிய புகைப்படங்களுக்கு நன்றி சொல்லி, விட்டுப் போன சில இசைக்கருவிகளையும் பற்றி குறிப்பு வரைந்திருக்கிறீர்கள். ஆனால் எதற்காக அவர் அதை செய்தார் என்பது தெரியுமா? அவர் எது செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும். காதை கொடுங்கள் சொல்கிறேன்!
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு பிறந்த நாளை முன்னிட்டும் அவரின் படங்களிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு [thematic presentation] அதன் அடிப்படையில் இசை நிகழ்ச்சியை வழங்கி பிறந்த நாளை கொண்டாடும் ரசிக மன்னன் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள், இம்முறை நடிகர் திலகம் இசைக்கருவிகளை இசைப்பதாக நடித்த பாடல் காட்சிகளில் இடம் பெற்ற பாடல்களைதான் வரும் அக்டோபர் 2 அன்று காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் இசைக் குழுவினரை வைத்து பாட வைக்கப் போகிறார். அந்த இசை மழையில் நனையும் ஒத்திக்கைதான் இது.
அன்புடன்