-
நன்றி வெங்கிராம். 'அன்னை இல்லம்' திரைப்படத்தின் அற்புதமான அந்தக் காட்சியை நடிகர் திலகம் திரி பாகம் 9 இல் தரவேற்றியது அடியேன்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் காட்சியைப் பற்றிய முழு விளக்கமும் அளித்துள்ளேன். இணைப்பிற்கு
http://www.mayyam.com/talk/showthrea...Part-9/page107
-
Vasu sir back with bang, thank you.
Just look at Rajasekaran still, even this still won't be matched by any other actors for century, only NT has to come back to give similar stills. Thank you Vasu sir.
Cheers,
Sathish
-
நம் நடிகர் திலகம் நிச்சயமாக உலகம் அறியாத அப்பாவி. உலகத் தரத்திற்கு படங்களைத் தரவல்ல ஒரு ரசிகரை முன்னமேயே அவர் சந்திக்காமல் விட்டு விட்டார். இருந்திருந்தால் மீதி 256 படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 306 ஆஸ்கார் அவார்டுகளை வாங்கித் தந்து இவரல்லவோ ரசிகர் என்று எல்லோரும் போற்றும் படி செய்திருப்பார். தவறு நடிகர் திலகத்தின் மீது தான். இன்னும் சற்று காலம் கழித்து பூமியில் பிறந்து இந்த அதி மேதாவி ரசிகரின் இயக்கத்தில் அனைத்துப் படங்களையும் செய்திருப்பார். பீம்சிங், கே.எஸ்.ஜி., பந்துலு, மாதவன், திருலோக்சந்தர் உள்பட அனைத்து இயக்குநர்களும் இந்த ரசிகரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
பேசாமல் இந்தத் திரியின் பெயரை அந்த ரசிகர் பெயரில் மாற்றி விட்டால் புண்ணியமாய்ப் போகும்.
-
அன்பு நண்பர் வாசு சார் தரவேற்றிய பாசமலர் விளம்பரத்தின் நிழற்படம் வண்ணத்தில் இங்கு ...
http://i1146.photobucket.com/albums/...2THANTHIFW.jpg
-
ஆஹா ... உலக இயக்குநர்களின் பெயர்களையெல்லாம் பட்டியலிட்டு விட்டார் .... நாமெல்லாம் என்ன புண்ணியம் செய்தோமோ ... ஒன்றுமே தெரியாத முட்டாள்களாயிருந்த நம்மை உலக சினிமாக்களையும் உலக இயக்குநர்களையும் அறிமுகப் படுத்தி இது தான் சினிமா,, இனிமேல் சிவாஜி படத்தைப் பற்றிப் பேசினால் தெரியும் சேதி என்று சொல்லாமல் சொல்லி விட்டார்... யாராவது மேல் லோகத்திலேருந்து நடிகர் திலகத்தை அழைத்து வந்து இவரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வாங்கி கொடுத்தனுப்புங்களேன் .... அப்போதாவது நடிகர் திலகத்தின் ஜன்மம் சாபல்யமடையும் ... அது மட்டுமல்ல இனிமேல் சிவாஜி படத்தைப் பற்றி யாராவது எழுதினால் இவர்களுடைய படங்களிலிருந்து காட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டு இதில் ஒரு சதவீதம் கூட சிவாஜி செய்யவில்லை என்பதை மறக்காமல் நிரூபியுங்கள். அப்போது தான் இவருடைய மனம் திருப்தியடையும். யார் யாருக்கு சிவாஜி மேல் என்னென்ன கோபம் வருமோ அதையெல்லாம் எழுதினால் அப்போது தான் இந்த புண்ணியவான் பிறவிப் பயன் எய்துவார்...
ஒரு வேளை இந்தப் பெருமூச்சின் வேகம் தாங்காமல் தான் இந்த திரி இரண்டாக பிரிந்ததோ ? தெரியவில்லை.
-
Welcome Mr Vasu Sir, Hope to see our Pammalar postings also very soon.
-
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-9)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (9) 'அஞ்சலிதேவி '
அஞ்சலிதேவியின் அழகிய தோற்றம்.
http://www.cineradham.com/Stills/Act...ills%20(3).jpg
'முதல் தேதி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் அஞ்சலிதேவி
http://i1087.photobucket.com/albums/...g?t=1351481716
'நான் சொல்லும் ரகசியம்' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் அஞ்சலிதேவி
http://i1087.photobucket.com/albums/...g?t=1351481900
அழகான நாயகி அஞ்சலி தேவி. காக்கிநாடாவில் பெத்தாபுரம் என்ற ஊரில் 1928 அக்டோபர் 25-ஆம் நாள் பிறந்தவர். எட்டு வயதிலேயே நாடகங்களில் ஆண் வேடமிட்டு நடித்துப் புகழ் பெற்றவர். (நடிகர் திலகம் தன் சிறு வயதில் நாடகங்களில் பெண் வேடங்கள் இட்டு நடித்ததைப் போல்) தன்னுடய நாடகக் குழுவில் பணி புரிந்த ஆதிநாராயணராவ் அவர்களை மணம் புரிந்து கொண்டார். பின் இயக்குனர் புல்லையா அவர்களால் தெலுங்கில்( ‘Golla Bhama’) அறிமுகம் செய்யப்பட்டு ரசிகர்களின் 'மோகினி'யாகத் திகழ்ந்தார். ஆம்... முதலில் சினிமாவில் 'மோகினி' வேடம் அஞ்சலிக்கு. பின்னர் தெலுங்கில் அஞ்சலி அவர்களின் ஆட்சிதான். தொட்டதெல்லாம் துலங்கிற்று. ரசிகர்கள் அஞ்சலியின் மீது 'பிரேமை' பிடித்து கிடந்தார்கள். கணவர் ஆதிநாராயணராவ் புகழ் பெற்ற இசையமைப்பாளர். அஞ்சலி நிறைய தெலுங்குப் படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றி கண்ட நடிகை. இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் அஞ்சலி தயாரித்த முதல் தெலுங்குப்படமான 'பரதேசி' யில் நடிகர் திலகம் நடித்ததுதான். 'பூங்கோதை' என்ற பெயரில் தமிழிலும் எடுக்கப்பட்டது. ('அந்தமான் காதலி' காவியத்தின் மூலக்கதை 'பரதேசி' தான்)
பின் ஏராளமான தமிழ்ப் படங்கள் அஞ்சலியின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதல் தேதி, கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி, மணாளனே மங்கையின் பாக்கியம், அடுத்த வீட்டுப் பெண் (காமெடி), சர்வாதிகாரி, மர்மயோகி (வில்லி) போன்ற படங்கள். "அன்றலர்ந்த தாமரை அழகா... அல்லது எங்கள் அஞ்சலிதேவி அழகா!" என்று இப்போதும் அஞ்சலியை நினைத்து தன் வசம் இழந்து பெருமூச்சு விடும் பெருசுகள் ஏராளமானோர் உண்டு. அந்த அளவிற்கு ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டவர் அஞ்சலிதேவி. தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் இவர் இணைந்த அனார்கலி, சுவர்ண சுந்தரி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் மூவிகள். அஞ்சலி பிச்சர்ஸ் தயாரிப்பான 'பக்த துக்காராம்' என்ற அருமையான காவியத்தில் நடிகர் திலகம் வீர சிவாஜியாகத் தோன்றி முழக்கம் செய்ததை யாரால் மறக்க இயலும்? தமிழிலும், தெலுங்கிலும் நிறைய மியூசிக்கல் ஹிட்ஸ் படங்களை தந்தவர் அஞ்சலி தேவி. அது மட்டுமல்லாம தென்னக திரைப்பட உலகில் முதன் முதலில் ஸ்லோ மோஷன் காட்சியை அறிமுகப்படுத்தியவரும் இவர்தானாம். சோகம், காமெடி, வீரம், வில்லி, அம்மா என்று அத்தனை ரோல்களிலும் புகுந்து விளையாடக் கூடிய திறமை படைத்தவர். நடிப்புத் திறமையையும் மீறி அளவுக்கத்திகமான அழகால் அனைவரையும் வசீகரித்தவர்.
நடிகர் திலகத்துடன் குறிப்பிட்ட சில படங்கள் தான் நடித்துள்ளார். 'முதல் தேதி'யில் நடிகர் திலகத்தின் ஏழை மனைவியாகவும், 'நான் சொல்லும் ரகசியம்' காவியத்தில் நடிகர் திலகத்தின் ஏழைக் காதலியாகவும் நடித்துள்ளார். நடிகர் திலகத்தால் அன்புடன் 'பாஸ்' என்று அழைக்கப் பட்டவர். நடிகர் திலகம் பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களிலேயே நடிகர் திலகத்தின் திறமைக் கண்டுபிடித்து தன் சொந்த படத்தில் (பரதேசி (தெலுங்கு) மற்றும் பூங்கோதை) இரண்டாம் ஹீரோவாக நடிக்க சந்தர்ப்பம் அளித்த நன்றிக்குரியவர். (தன்னை முதன் முதலில் அஞ்சலிதேவி சொந்தப் படத்திற்கு 'புக்' செய்ததால் பிற்காலங்களில் செய்நன்றி மறக்காமல் நடிகர் திலகம் அஞ்சலி அவர்களின் சொந்தத் தயாரிப்பான 'பக்த துக்காராம்' தெலுங்குப் படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுத்து தன் நன்றிக்கடனை தன்னுடைய 'பாஸ்' அவர்களுக்கு திரும்ப செலுத்தினார்) நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல... நமக்கும்தான். எனவே நம் அனைவர் சார்பாகவும்
அன்பான அஞ்சலி அம்மா!
தங்களுக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்!
முதன் முதலாக இணையத்தில் நடிகர் திலகமும்,அஞ்சலி தேவி அவர்களும் இணைந்து கலக்கும் 'நான் சொல்லும் ரகசியம்' காவியத்தின் அற்புத டூயட் பாடல்... P.B.ஸ்ரீனிவாஸ் தலைவருக்காகப் பாடிய ஒரு சில பாடல்களில் முதன்மையான பாடல்.(வீடியோ)
"கண்டேனே உன்னைக் கண்ணாலே"...
http://www.youtube.com/watch?feature...&v=yiOrWn5ksxc
அஞ்சலி பிக்சர்ஸ் 'பரதேசி' தெலுங்குத் திரைப்படத்தின் ஸ்டில்.
http://www.eemaata.com/images/nov201...3-paradESi.JPG
போனஸ் இணைப்பு: நடிகர் திலகம் பற்றி அஞ்சலிதேவி அவர்கள் ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியின் திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் அளித்த பேட்டியை சமயத்திற்கு உதவுமே என்று பதிவு செய்து வைத்திருந்தேன். இப்போது உதவுகிறது. பரதேசி மற்றும் பூங்கோதை படங்களில் நடிகர் திலகத்திற்கு சான்ஸ் கொடுத்தது பற்றியும், நடிகர் திலகத்தின் அசாத்திய திறமை பற்றியும் அஞ்சலிதேவி அவர்கள் கூறுவதை இப்போது காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=6hjpngnsQvk&feature=player_detailpage
(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
-
All the 306 films of NT are equal for me. There is no discrimination between this & that.
He is an actor par excellance.
-
டியர் ராகவேந்திரன் சார், சதீஷ் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார்,
'பாசமலர்' பதிவுகளுக்கான தங்கள் பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றிகள்.
-
டியர் வாசுதேவன் சார்,
வருக! வருக!
நடிகர் திலகம் பற்றிய நிறையப் பதிவுகளைத்
தருக! தருக!.