-
[QUOTE=kaliaperumal vinayagam;1054641]விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திருமதி விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் கமலா செல்வராஜ் பேசும்போது " திரு. எம்ஜிஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்..என் தங்கைக்கு எம்.பி.பி.எஸ் சீட் கொடுத்திருக்கிறார். நாங்கள் கஷ்டப்படும்போது நிறைய உதவிகள் செய்த தெய்வம் அவர் ..மேலும் நாங்கள் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகைகள்..எம்ஜிஆர் படம் வந்ததும் நாங்கள் எங்கள் அம்மாவிடம் சொல்லி முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்..அவர் படங்களை பார்த்தாலே அப்படி ஒரு பரவசம் ஏற்படும். நாங்கள் அதிகமாய் மேடை ஏறியதில்லை..தலைவர் விழா என்பதால்தான் வந்தோம் என்றார்கள்..அவர்கள் பேசும்போது கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டனர்..ஏன் என்றால்..திருமதி சாவித்திரி அவர்கள் நடித்துகொண்டிருந்தபோது அவருடன் நடித்த நடிகர்கள், அவருக்கு கஷ்டம் வந்தபோது கண்டுகொள்ளவில்லை..மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பில் கட்ட பணம் இல்லாதபோதும், அவர் இறக்கும் தருவாயில் கூட அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை..ஆனால் நமது இதய தெய்வம் அவர்களோ திருமதி சாவித்திரி அவர்கள் 'அண்ணா ரொம்ப கஷ்டப்படுகிறேன்' என்று சொன்னதும்..அவருக்கு பண உதவி செய்ததுமட்டுமில்லாமல், அவர் மருத்துவமனை பில்லையும் கட்டி அவர் இறக்கும் வரை அவருக்கு உதவிகள் செய்தார்..இத்தனைக்கும் திருமதி சாவித்திரியுடன் அவர்களுடன் 3 படங்களே நடித்தும், உதவி என்று கேட்டதும் உடனே செய்தார் நமது தெய்வம்..ஈடிணை இல்லா கண்கண்ட தெய்வம்...
http://i40.tinypic.com/2q34zlk.jpg[/QUOTE
இவர்கள் பேசிய அந்த ஆடியோ அல்லது வீடியோ இங்கு பதிவிடமுடியுமா ?
திருமதி சாவித்திரி அவர்களின் கணவர் (தனது தந்தையார் )திரு.ஜெமினி கணேசன் உதவி செய்தாரா இல்லையா என்பது பற்றி ஒன்றும் சொல்லாத இவர் மற்ற நடிகர்கள் உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறான ஒரு எதிர்பார்ப்பு. !
மேலும் எந்த நடிகரும் உதவி செய்யவில்லை என்று உரைத்திருந்தால் அது மனசாட்சியை விற்றுவிட்டு புளுகுவது போலாகும். ! திருமதி விஜய சாமுண்டேஸ்வரி அவ்வாறு கூறியிருப்பது உண்மையென்றால் இவரை போன்ற நன்றி கெட்டவர்கள் இப்புவியில் இல்லை என்றுதான் அர்த்தம் !
திரையுலகை சேர்ந்த ஒரு சில நல்லவர்கள் திருமதி சாவித்திரிக்கு வேண்டிய உதவிகளை நிறையவே செய்திரிகிறார்கள், முக்கியமாக விளம்பரபடுத்தாமல் திரை உலகை சேர்ந்த திரு.M R ராதா, சந்திரபாபு, ஜெய்ஷங்கர், சோ, ஏவிஎம் செட்டியார் மூலம் திரு சரவணன், திரு.நாகேஸ்வர ராவ் மற்றும் பலர் திருமதி சாவித்திரிக்கு உதவி நிறையவே செய்திருகிறார்கள்.
சாவித்திரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது முதலில் பார்க்க சென்று வேண்டிய பண, மற்றும் இதர உதவிகள் செய்தது யார் என்பதை அவர் அவர்கள் மனசாட்சிக்கு, இறைவனுக்கு தெரியும். அனுமதிக்கப்பட்ட பின்பு ஒரு குறிப்பிட்ட நடிகர் முதலில் வந்து சென்றபின்பு அந்த செய்தி எட்டவேண்டிய இடத்தில் எட்டியதும் அவசரகதியில் வந்தது திரு.ராம வீரப்பன் என்பதையும் அன்றிருப்பவர் இன்றிருந்தால் உண்மை உரைப்பர். !
-
-
இந்த திரியில் இடம் பெற்ற சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா காட்சிகளைக் கண்டு விழாவை நேரில் பார்த்தது போல் இருக்கிறது என்று அலைபேசியில் பாராட்டு தெரிவித்த பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கும், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு.சைலேஷ் பாபு, திரு. மாசானம், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ரூப்குமார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
-
குணசித்திர நடிகர் திரு வி.எஸ். ராகவன் அவர்கள் மக்கள் திலகத்துடன் ஒளிவிளக்கு முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரை பல படங்களில் நடித்துள்ளார் .
http://i42.tinypic.com/148kzr.jpg
சிரித்து வாழ வேண்டும் படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது .
-
-
திருமதி சாவித்திரி அவர்கள் திரையுலகில் கொடி கட்டி பறந்தபோது மிகவும் செல்வமாக வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது...பின்னாளில் அவர் சிலரது துர்போதனையால்சரியான பாதையில் செல்லாதபோது , தலைவரின் அறிவுரைகள் அவர் செவியில் விழவில்லை..அதனால் செல்வங்களை இழந்து, சொந்தங்களை இழந்து, நண்பர்களை இழந்து வறுமையில் வாடினார்..பின்னர், நற்பண்புகள் போதித்த நம் தலைவர்தான் தன் துன்பங்களை தீர்க்கும் அருமருந்து என உணர்ந்து "அண்ணா, ரொம்ப கஷ்டப்படறேன்" என்ற ஒரு வாக்கியத்திற்கு, அவருடைய கஷ்டங்களுக்கு பண உதவியும் செய்து, சொந்தமாக ஒரு வீடும் கொடுத்து, 'நிழல் அண்ணனாக' இல்லாமல் 'நிஜ அண்ணனாகி' உதவினார்..கஷ்டம் என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து அதோடு விட்டிருக்கலாம்..ஆனால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது, அதை அனைவரும் அடைய வேண்டும் என்று பாடுபட்ட நம் இறைவன், திருமதி சாவித்திரி அவர்கள் குடியிருக்க சொந்தமாக ஒரு வீட்டை கொடுத்தார்..அதனால்தான் அவர் இன்னும் எட்டாவது வள்ளலாக வாழ்கிறார்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..
-
இந்திய திரைப்பட உலகில் மக்கள் திலகம் படைத்த சாதனை .
நவம்பர் 1974.- ஜூலை 1975.
மக்கள் திலகம் நடித்த மூன்று பிரமாண்டமான படங்கள் .
1. சிரித்து வாழ வேண்டும்
2. நினைத்ததை முடிப்பவன்
3. நாளை நமதே .
மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் இரட்டை வேட படங்கள்.
தொடர்ந்து வெளியான இந்த படம் அனைத்தும் இந்தி பட தழுவல்கள்.
தமிழ் கதைக்கேற்றவாறு மக்கள் திலகம் மூன்று படங்களையும்
ரசிகர்கள் - பொதுமக்கள் விரும்பி பார்க்கும் வண்ணம் பொழுது போக்கு படமாக மாபெரும் வெற்றி படங்களாக விருந்து படித்தார் .
மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் மூன்று படங்களும்
பாடல்கள் - பிரமாதமான இசை என்று அமர்க்கள படுத்தினார் .
1. சிரித்து வாழ வேண்டும் .
http://youtu.be/3HvyBAAopq0
டைட்டில் இசை வெகு பிரமாதமாக இருந்தது .
மக்கள் திலகம் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் தாதா அப்துல் ரஹமான் என்ற மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
ஒன்றே சொல்வான் .... நன்றே செய்வான் ...
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ....
பொன்மனச்செம்மலை புண் படுத்தியது ......
நீ என்னை விட்டு போகாதே .....
உலகமெனும் நாடக மேடையில் ....
போன்ற இனிய பாடல்கள் .
படம் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை படம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஏகோபித்த பாராட்டை பெற்ற மக்கள் திலகம்
அவர்களின் ''சிரித்து வாழ வேண்டும்'' மதுரை நகரில் ''நியு சினிமா'' வில் 100 நாட்கள் ஓடியது .
2. நினைத்ததை முடிப்பவன்
மக்கள் திலகம் நடித்த படங்களில் அதிக காட்சிகளில் தோன்றிய முதல் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகத்தின் வித்தியாசமான இரட்டை வேடங்கள் .
http://youtu.be/hBRHx-cPlfw
மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான , துள்ளல் காட்சிகள் கண்ணுக்கு
விருந்து .
மதுரை - மீனாக்ஷி அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் நிறைந்து
100 நாட்கள் ஓடிய வெற்றி காவியம் .
3. நாளை நமதே
மக்கள் திலகத்தின் ஹாட்ரிக் -இரட்டைவேட படம் .
இனிமையான பாடல்கள்
.
http://youtu.be/nxloTpkTxbk
மக்கள் திலகம் இளம் வாலிபனாக எழில் அழகராக தோன்றிய காவியம் .இன்று பார்த்தாலும் காட்சிக்கு காட்சி மக்கள் திலகத்தின்
நடிப்பு பிரமிக்க வைக்கிறது .
http://youtu.be/ysK_d2aWGTg
-
சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் & நாளை நமதே - மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த வெற்றிச் சித்திரங்கள். வினோத் ஸார், விடியோவுடனான பதிவுக்கு நன்றி.