http://i57.tinypic.com/2h6rqm9.jpg
Printable View
கலைவேந்தன் சார் !
நல்ல அருமையான பதில்.
நடிகர் திரு. இராமராஜன் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் காவியம் " ஆயிரத்தில் ஒருவன் " திரையரங்குகளில் 150வது நாளை கடந்து, வெள்ளி விழாவை நோக்கி, வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் வேளையில் பொதிகை தொலைக்கட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
அதே போன்று பொன்மனச்செம்மலின் பொற்காவியம் "நாடோடி மன்னன்" திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதும் ராஜ் தொலைக்கட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
விநியோகஸ்தர்கள் எவரும் கவலைப்பட்டதும் கிடையாது. இதனால் வசூல் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்பட போவதும் இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு. ஏன் என்றால், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுக்கெல்லாம் பொன் முட்டையிடும் வாத்து.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு காவியம் (ஆயிரத்தில் ஒருவன்) மறு வெளியீட்டில் வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போடுவது கின்னஸ் சாதனைதான்.
சாதனை என்ற சொல்லுக்கு அகராதியில் எம். ஜி. ஆர். என்று தான் பொருள் போலும். சாதனைகளின் சிகரம் " உலக அதிசயம் எம். ஜி. ஆர். " என்றால் அது மிகையாகாது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்