அந்த நடிகர் பெயர் பிரசாத் பாபு என்று நினைவு ck sir
Printable View
தாங்க்ஸ் கிருஷ்ணா சார்..அவர் வேறு எதுவும் படங்களில் நடிக்கவில்லை என நினைவு..அந்தப் படம் ரிலீஸாகி தேவர் மகனும் ரீலீஸான கால கட்டத்தில் எனக்கும் என் சகோதரிக்கும் ஆர்க்யூமெண்ட்..தேவர்மகன் கமல் அண்ணா தலைவாசல் விஜய்யும் இந்த உ.மு.த நாதஸ்வர வித்வானும் ஒருவரே என.. நான் இல்லை என்று ஆர்க்யூமெண்ட் செய்திருந்தேன்..
எனக்குப் பிடித்த குட்டிப் பாத்திரங்கள்
அச்சமில்லை அச்சமில்லை - சுதந்திரமாய் நடித்த நடிகர்..
நாயர் கே ராமன் (வசனப் பயிற்சி மற்றும் நடிப்பு)
ஞான ஒளி - கோகுல் நாத் ஃபாதர்..(முரட்டுப் பயலே) (அவரேவிடியும் வரை காத்திருவில் சத்யகலாவின் அப்பாவாக நடித்திருப்பார்)
நூறாவது நாள் - கோகிலா (பின்னால் விசு படங்களில் எல்லாம் நடித்தார்)
பாஸ்கர் - மற்றவை நேரில் என்ற மெளலியின் முதல் டைரக்*ஷனில் வந்த பட ஹீரோ
மோகமுள் கதாநாயகி - அர்ச்சனா என்று நினைவு - மராத்தி ஹிந்தி கதக் டான்சர்
அச்சமில்லை அச்சமில்லை - சுதந்திரம் - இவரது பேட்டி குமுதம் அல்லது விகடன் நினைவில் உண்டு - நிறைய தெலுங்கு படங்களில் குள்ள பேய் வேஷம் போட்டு இருப்பார்
நாயர் ராமன் - வாத்தியார் ராமன் - ரஜினியின் சிவா படத்தில் நினைவு உண்டு
கோகிலா - வைதேகி காத்து இருந்தாள்,திருமதி ஒரு வெகுமதி
கோகுல்நாத் - nootrukku நூறு , இரு கோடுகள் எல்லா பழைய பாலச்சந்தர் படங்கள்
பாஸ்கர் - குடும்பம் ஒரு கதம்பம் - சுஹாசினி தம்பி - நித்யாவின் காதலர் என்று நினைவு மற்றும் எல்லா மௌலி படங்கள் - ரஜினியின் நான் சிகப்பு மனிதன் என்று நினைவு
//மோகமுள் கதாநாயகி - அர்ச்சனா என்று நினைவு - மராத்தி ஹிந்தி கதக் டான்சர் // நன்றி கிருஷ்ணா சார் தகவல்களுக்கு.. நான் கேட்டது மோகமுள் கதானாயகியை அல்ல. .தங்கம் என்ற கேரக்டரில் வயதானவருக்கு வாழ்க்கை ப்பட்ட பேதைப் பெண்ணாக வருபவர்.. வந்தவர்..
கிருஷ்ணா ஜி..கண்ணான்னு கூப்பிடறத விட கிருஷ்ணான்னு கூப்பிடறது இன்னும் நெருக்கமாத் தோணுமோ..அதுவும் பெண்களுக்கு..இந்த ப் பெண் நிர்மலா என்னவாக்கும் சொல்றா..லஷ்மி கல்யாணத்தில..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..அதுவும் சுசீலாம்மாவின் உருக்கும்குரல்..
பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! - என்
பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? - என்
கேள்விக்கு பதில் என்ன கேலியோ?
//ஹாய் கிருஷ்ணா..என் மீது உன் கடைக்கண்பார்வை பட்டது தெரியும் .. ஆனாக்க அதுக்கப்புறம் ஃபர்தர் ஸ்டெப்ஸ் நீ எடுக்கவே இல்லையே.. ஏன் நான் பாவம் செய்தவளா..சொல்லு கிருஷ்ணா சொல்லு.. அது சரீ ஈ..இது ப்ருந்தாவனம் ..ஒன்னோட இடம்..உன்னோட சைட்ல எல்லாம் கோபிகைகள் .. நார்த் இண்டிய இளம் பெண்கள்..நன்னாவே இருக்கா.. நான் தமிழ்ப்பெண் தானே..கொஞ்சம் நிறம் மட்டு...அதனால என்னைக் கேலிப் பார்வை பார்க்கறியா//
கீதையில் உன் குரல் கேட்டேனே! - என்
கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
பாதையில் உன் துணை வரவில்லையே!
பகவான் திருவருள் தரவில்லையே!
// குரு..கிருஷ்ணா..என்னவனே.. இவ்ளோ தூரம் பஸ் சார்ஜ் கொடுத்து லொங்கு லொங்குன்னு உன்னைத் தேடி வந்திருக்கேன்..வர்றச்சே படிச்ச புக் கீதை..அதுல வரிகள்ளாம் தெரில க்ருஷ்ணா ..உன்னோட லவிங்க் ஃபேஸ் தான் தெரிஞ்சது..அதுக்கப்புறம் கொஞ்சம் இறங்கி உன்னைத் தேடி வர்றச்சயாவது என்னை வந்து பார்த்திருக்கலாம்.. நீயோ வல்லை..ஏன் கண்ணா.ஏன் எனக்கு அருள் செய்ய மாட்டேங்கற//
குங்குமம் அணிந்தால் உன் தேவி! - தன்
கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த
மங்கல மரபுகள் உனக்கில்லையோ?
// என் செல்லக் கிருஷ்ணா.. உன்னை த் தேடி உருகற பக்தை .. வந்திருக்கேன்.. நீ மத்தவாளுக்கே அருள் செஞ்சுக்கிட்டு இருக்கியே நியாயமா..எனனை ஆட்கொண்டால் என்னப்பா குறைஞ்சிடும் உனக்கு..இல்லை அது பத்தித்தான் உனக்குத் தெரியாதா//
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை
கன்னியர்கள் விடும் கண்ணீரோ?
கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ?
//இப்போ புரிஞ்சுப் போச்சு கிருஷ்ணா.. நீ என்னைப் போல நெறயப் பேருக்கு டபாய்ச்சுக்கிட்டே இருந்திருக்க..அதான் உன்னை நினைச்சே உருகற என்னை ப்போன்ற கன்னிப் பெண்கள் விடற கண்ணீர் தான் கங்கையாய்டுச்சுன்னு நினைக்கறேன்..உனக்கென்ன கல்மனசாப்பா..இது உனக்கே சம்மதமா..ஏதோ செய்//
கிருஷ்ணா கிருஷ்ணா
//கண்ணா..கண்ணா :)//
**
அடேயப்பா!
தியேட்டர் பதிவுகள், கனகதுர்கா, குட்டி கதாபாத்திர நடிகர்கள் என்று திரி அதம் பறக்கிறதே. ம்..நாம சிட்டியிலே இருந்ததில்லே. கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள டூரிங்குகள் தான்.
சி.க.சார்,
தேவன் திருச்சபை மலர்களே பாடல் வரிகளுக்கு நன்றி.
//சி.க.வேதாளத்தின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லையெனில் பெருஸ்ஸா ஒரு விருத்தம் எழுதிப் படுத்திவிடுவேன் என்பதை//....
அது எப்படிங்க? என்ன மிரட்டலா!?:) இப்படியெல்லாம் பயமுறித்தினா நாங்க பயந்திடுவோமா?:)
பெருஸ்ஸா ஒரு விருத்தம் எழுதுங்க. படிச்சிட்டு அதைவிட பெரிசா பதிவு போடறேன். ஓஹோன்னானாம் வெள்ளைக்காரன்.:)
காலமகள் தந்த கவிதைக் கோமகன் கவியரசு கண்ணதாசன் திருவுருவச்சிலை திறந்துவைத்த பெருமகிழ்வில் .. கலைவாணர் அரங்கில் முழுநாள் வைபவங்கள்! கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசைவிருந்து நடைபெற்ற நாள் 11.12.1994.
திரைவரலாறுகளைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் திரை அகராதி அருமைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களின் ஆலோசனையேற்று திராவிடக் கவிஞர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து ‘கண்ணதாசன் விருதுகள்’ வழங்கிப் பெருமையுற்ற கவியரங்கில்.. திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞர் - பின்வருமாறு கூறினார். தமிழ் கலந்த தெலுங்கில் அந்த இனியமகன் செப்பியதாவது..
நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள்.. அடிக்கடி நேரிலும்..அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்துகொள்வேன்.
அப்படி ஒரு சமயம்.. நான் கேட்டபோது.. அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது.
என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன்.
எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார்.. இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப்பிறகுவரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவனன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவனன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனன்னா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க..
‘ஆணையிட்டது கோசலராமன்..
அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று
இப்பொறிதான் .. இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.
வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்
என 18 ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு!
(காவிரிமைந்தன் என்பவர் எழுதியிருந்ததில் இருந்து )
இனி பாட்டு..
**
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்
தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்
வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
*
மறுபடியும் சுசீலாம்மாவின் அழகிய பாடல்.. லஷ்மி கல்யாணம் திருப்பிப் பார்க்கணும் போல இருக்கே..
இன்றைய ஸ்பெஷல் (69)
'இன்றைய ஸ்பெஷலி'ல் நெஞ்சைப் பிழியும் ஒரு பாடல்.
http://www.inbaminge.com/t/i/Itho%20...vam/folder.jpg
படம்: இதோ எந்தன் தெய்வம்
வெளி வந்த வருடம்: 1972
நடிகர்கள்: முத்துராமன், மேஜர், கே.ஆர்.விஜயா, பேபி இந்திரா
ஒரு வீட்டுக்குள் திருடனாக நுழையும் முரடன் ஒருவன் அந்த வீட்டின் சிறுமியின் அன்புக்கு பாத்திரமாகி திருந்துவதுதான் கதை.
திருடனான மேஜர் கே.ஆர்.விஜயா, முத்துராமன் தம்பதிகளின் மகளான பேபி இந்திராவிடம் நெகிழ்ச்சியாக பாடும் பாடல். திருடனான தான் தொட்டிலில் தவழாமல் குப்பைத் தொட்டியில் புரண்ட கதையைச் சொல்லிப் பாடும் பாடல்.
'தனி ஆளாகவே வாழ்ந்த, வளர்ந்த என்னை இப்படி பாசத்துக்கு அடிமையாக்கி விட்டாயே' என்று அந்த குழந்தையிடம் நெக்குருகிப் பாடுகிறான் அவன்.
பாறாங்கல் போன்ற தன் மனதிலும் ஈரம் வரவழைத்து கண்களில் கண்ணீரைப் பெருகச் செய்த அந்த தெய்வக் குழந்தையை மானசீகமாகப் போற்றுகிறான்.
விவரம் புரியாமல் அப்பா என்று தன்னை அழைக்கும் அந்தக் குழந்தையின் அன்பில் சிக்குண்டு அந்த சிங்கம் முயலாகிறது.
அருமையான பாடல். பாடகர் திலகம் வழக்கம் போல உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுக்க சோகத்தையும், பாசத்தையும் ஒரு சேர பிழிந்து எடுத்துத் தருகிறார்.
மேஜருக்கு இந்தப் பாடல் நடிகர் திலகத்தின் பாடல் காட்சி போல அமைந்துவிட்டது. அவரும் குறைவில்லாமல் செய்திருப்பார். 'மெல்லிசை மன்னர்' கடன் வாங்காமல் இப்பாடலின் டியூனைப் போட்டிருப்பார் என்று நம்புவோமாக.
பெரிய வித்தியாசம் எல்லாம் எதுவுமில்லை. ஆனால் மேஜருக்கு அமைந்து விட்டது விஷேசம். நடிகர் திலகத்திற்கு அமைந்திருந்தால் கதையே வேற.
http://i.ytimg.com/vi/ZUdm2n-fBLU/maxresdefault.jpg
http://i1087.photobucket.com/albums/...20-2/mejar.jpg
இனி பாடலின் முழு வரிகள்
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதிவழி போனவர்கள்
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதிவழி போனவர்கள்
தான் செய்த பாவம் அம்மா
என் செல்வமே
நான் செய்த பாவம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
ஊருக்கு நான் யாரம்மா
என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
சொன்னவள் நீதானம்மா
என் தெய்வத்தை உன்னிடம்
கண்டேனம்மா
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
அப்பனென்று அழைத்தாயம்மா
அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா
அன்பென்றும் ஆசையென்றும்
பண்பென்றும் பாசமென்றும்
சொன்னதைக் கேட்டேனம்மா
அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா
சொர்க்கத்தில் காண்பேனம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா
ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ
https://www.youtube.com/watch?featur...&v=ZUdm2n-fBLU
வாசு சார்.. நான் உங்களைக் கேட்க நினைத்த படத்திலிருந்து டபக்கென்று பாடல் கொடுத்திருக்கிறீர்கள்..ஓஹோன்னானான் வெ.கா :) இந்தப் படம் பற்றி எழுதியிருக்கிறீர்களா..அதுவும் இந்தப் பாட்டு என்று இன்னொரு பாட்டு செலக்ட் செய்துவிட்டு சிகப்புவண்ண புகைப்படத்தில் சிகரெட் குடித்துக் கொண்டிருக்கும் ந.தி அவதார் வைத்திருப்பவர் கோபித்துக் கொள்வார் என்று நிறுத்தி விட்டேன்.. என்ன பாட்டு..
அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி.., என் தேவி...
ஆலயம் திறந்து வைத்தேன்
ஆலாத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா.. என் தேவா
பூவிலே பூஜை செய்வேன்
காதிலே வேதம் சொல்வேன்
ஆயிரம் குடங்கள் கொண்டு
அபிஷேகம் நடத்தி வைப்பேன்
சாத்துப்படி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்
அர்த்த ஜாமம் வரையில்
அம்மனைக் காண வைப்பேன்
தேவா,.. என் தேவா....
பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
உல்லாச ஊர்வலத்தில்
உள்ளத்தை மயங்க வைப்பேன்
கோயிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
தேவனின் நிலையில் நின்று
தேவியைத் தழுவிக் கொள்வேன்
**
நீங்கள் எழுதிய பாடல் கேட்டதில்லை.. கேட்டுப் பார்க்கிறேன்.. நன்றி
*
கிருஷ்ணா ஜி வாணி பற்றித் தேடித்தான் பார்க்க வேண்டும்..ம்ம் நன்றி