Originally Posted by ma.vE.sivakumAr
.............ஆனால் அதே வருடம் என் கதைகளைப் படித்த திரு.கிரேஸி மோகன் மூலம் திரு.கமல்ஹாசன் என்னைப் பற்றி கேள்விப்பட்டு தன்னுடன் திரையுலகில் சேர்ந்து பணியாற்ற எனக்கு அழைப்பு விடுத்தார். எனது ‘வேடந்தாங்கல்” நாவல் திரு.கமல்ஹாசன் முன்னுரையுடன் வெளியானது (1991). என் ‘நவீன சிறுகதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை அவரே தலைமை தாங்கி வெளியிட்டார் (1992). ஒரு வார இதழின் கேள்வி பதிலில் படித்ததில் பிடித்தது ஆங்கிலத்தில் Jurasic Park. தமிழில் திரு.ம.வே. சிவகுமாரின் வேடந்தாங்கல் நாவல் என திரு.கமல்ஹாசன் பதில் எழுதியிருந்தார். அவர் விடுத்த அழைப்பை ஏற்று 1992-ல் வெளியான ‘தேவர் மகன்” திரைப்படத்தில் ஒரு உதவி இயக்குனராய் பங்கேற்றேன்......