Originally Posted by
RAGHAVENDRA
இப்பொது சமீப காலமாக ஒரு அருமையான திரைப்படத்தின் 25வது ஆண்டினைப் பற்றிய நினைவூட்டல் எதிர்பாராத கோணத்தில் பயணித்து தயாரிப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் இருந்திருக்கக் கூடிய அல்லது இருக்கக் கூடிய இடைவெளியினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு வருத்தமாயுள்ளது. இதை கூறக் காரணம், தயாரிப்பாளர்களிடம் முன் கூட்டியே விவாதித்து விட்டு முடிந்த வரை திட்டமிட்டு படமெடுக்க ஒத்துழைத்த நடிகர் திலகம் நினைவுக்கு வருவது தான். தமிழ் திரையுலகில் நாயகன் நிச்சயம் ஒரு சிறந்த படம். அதற்காக பல கஷ்டங்களை சந்தித்து அவற்றையெல்லாம் எதிர் கொண்டு படத்தை வெளிக் கொண்டு வந்த கமல் அவர்களும் மணிரத்தினம் அவர்களும், மற்றும் இன்றளவும் அந்தப் படம் பேசப் பட பெரும் துணையாக இருக்கும் இசையைத் தந்த இளையராஜா அவர்களும் என்றென்றும் பாராட்டத் தக்கவர்கள். அதில் சந்தேகமே இல்லை.
ஆனால் இந்தப் பேட்டியில் வெளிவந்துள்ள ஒரு வார்த்தை தான் நமக்கு புரியவில்லை.
School என்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது. அல்லது எந்த வர்க்கத்தைக் குறிக்கிறது. அல்லது எந்த குழுவைக் குறிக்கிறது ... இந்த ஒரு வார்த்தை தான் நமக்கு சற்று புரியமாட்டேன் என்கிறது. காரணம் முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் product. அதன் மூலம் discipline, planning போன்று ஒரு திட்டமிடுதலுக்கு தேவையான குணங்கள் அவரிடம் இருந்திருக்கும். அந்த ஸ்கூல் என்பதன் மூலம் அவருடைய மாடர்ன் தியேட்டர்ஸில் கற்றுக் கொண்ட தொழிலறிவு இங்கே குறை காணப் படுகிறதா.. அல்லது முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் நடிகர் திலகத்துடன் தயாரித்த படங்களிலும் அதே குணங்கள் மேலும் வலுவாக அமைந்து, அதுவும் இங்கே குறை காணப் படுகிறதா ... ஏனென்றால் தயாரிப்பாளர்களிடம் தான் கமிட் பண்ணி விட்டால் அதற்கப்புறம் அவருக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கும் கலைஞர் நடிகர் திலகம். தயாரிப்பாளர் எங்கே படப் பிடிப்பு வைத்தாலும் மறுப்பு சொல்லமாட்டார். தன் ஆலோசனைகளைக் கூறுவாரே தவிர வற்புறுத்த மாட்டார். இப்படி தயாரிப்பாளர்-கலைஞர் இடையே நல்லுறவை வளர்த்த நல்ல சூழலை நடிகர் திலகத்தின் படங்களில் முக்தா ஸ்ரீநிவாசன் கண்டதும் குறை சொல்லப் படுகிறதா ..
இது தான் புரியவில்லை.
இந்த விவாதத்தில் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனால் இந்த ஸ்கூல் என்கிற வார்த்தை மட்டுமே சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது . அவ்வளவு தான்.