http://uploads.tapatalk-cdn.com/2016...fca8b487f6.jpg
Printable View
கால யந்திரத்தில் பின்னோக்கி பயணித்து சைக்கிடெலிக் ட்ரான்ஸ் அனுபவம் பெற்றதுண்டா? கிட்டத்தட்ட ஜார்தா கொஞ்சம் மிகையாக எடுத்தால் அந்த அனுபவம் கிட்டலாம். சிவகாமியின் செல்வன் நூறாவது நாள் விழா நடந்த ரஷியன் கலாசார மண்டபத்தில் எனக்கு பிடித்த பருவ வயதிற்கு சென்று ,கை தட்டி விசிலடித்து கூத்தடித்து என்னை மறந்த வேளை ,இன்றும்,என்றும் இனிப்பது.
வாணிஸ்ரீ,Y .G .மஹேந்திரா,ராம்குமார்,சீ.வீ.ராஜேந்திரன்,லதா,எம்.எஸ ்.வீ புதல்வி,சிதம்பரத்தின் (கமலா)புதல்வர்,கனகசபை பேரன்,சேரன்,வீரரின் அன்னை,என்று சபை நிறைந்தது.
நம் Y .Gஆரம்பத்தையே களை கட்ட வைத்தார். சிவாஜி ஒருவர் மட்டுமே சாதனையாளர்,அவர் படங்களே பாடம் என்று துவங்கினார்.
லதா கொஞ்சம் சொதப்பல்,ஆனாலும் ,சிவாஜியுடன் தன் நல் அனுபவத்தை பரவசத்துடன் நினைவு கூர்ந்தார்.
வாணிஸ்ரீயின் சரளமான extempore பேச்சுதான் அன்றைய highlight . தான் ,குடும்பத்தின் பொருட்டு சினிமாவை,வெளிச்சத்தை தவிர்த்து வாழ்ந்ததை குறிப்பிட்டு ,குடும்ப தலைவியாய் வாழ்ந்த அனுபவத்தை மிக அழகான முரண்களோடு விளக்கினார். நடிகர்திலகத்தின் ரசிகையாக தொடங்கி அவருடன் நடிக்கும் போது ஒரே குடும்பமாக பழகி களித்ததை நினைவு கூர்ந்து,அவர் தன்னை ட்ரெஸ்ஸிங் சென்ஸ் க்கு புகழ்ந்து தள்ளியதை இனிப்புடன் குறிப்பிட்டார். ஒரு நடிகர்திலகம்தான் உலகிற்கு,இனி பிறக்கவே முடியாது என உறுதி பட உரைத்தார்.
சீ.வீ. ராஜேந்திரன், இந்த படத்தை எடுக்கும் யோசனையுடன் சென்று ,நடிகர்திலகம் தனக்கு ஊக்கம் கொடுத்ததை கூறினார். நடிகர்திலகம் தான் பாத்திரத்துக்காக தானே உடை,சிகை ,நடிப்பு முறை எல்லாவற்றையும் முடிவெடுத்து செயல் படுத்தும் லாவகத்தை குறிப்பிட்டார். எம்.எஸ்.வீ ,இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்ட தைரியத்தை புகழ்ந்தார்.
சேரன் , தான் வெறி கொண்ட நடிகர்திலகத்தின் ரசிகனாக தன் அனுபவங்களை சொல்லி, அவரின் நாயகியர்களை தானும் காதலித்ததை வேடிக்கையாக குறித்தார். நடிகர்திலகத்தின் கொள்கையும் அரசியலும் தூய்மையும் மக்களால் புரிந்து கொள்ள பட்டிருந்தால் ,தமிழகமே இன்று நிமிர்ந்திருக்கும் என்பதை குறிப்பிட்டார்.
சிதம்பர புதல்வர் ,தான் நடிகர்திலகத்தின் ரசிகனாக இருந்த அனுபவத்தை சுவை பட கூறினார்.
விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,பங்களிப்பாளர் (படத்திற்கு)எல்லோருக்கும் பாராட்டு தட்டு,சால்வைகள் என்று சம்பிரதாயங்கள். நண்பர்களுக்குள் அரட்டை குதூகலம் ,படத்தை கண்டு களித்தல் என்று அபூர்வ மாலை பொழுது முடிந்தது.
ராம்குமாரின் பேச்சு வழக்கம் போல cliched .குறிப்பிட ஒன்றுமில்லை.
இரண்டு விஷயங்கள்.
நீங்கள் ஒரு வீட்டிற்கு அழைக்க படுகிறீர்கள் என்று வைப்போம். வர ஒப்பு கொண்டு விட்டு, அந்த வீட்டிற்கு சென்றால் ,அந்த வீட்டு மனிதர்களுக்கும் ,உங்களுக்கும் பொதுவாக உகந்த விஷயத்தைத்தானே பேச வேண்டும்? ஒருவர் வெறுத்து ஒதுக்கும் விஷயத்தையா பேசுவது?இந்த சபை நாகரிகம் கூட தெரியாதவர்கள் பொது வாழ்வுக்கோ .சபைக்கோ வர அருகதையற்றவர்கள். அதை சிலரிடம் எதிர்பார்க்க முடியாது.
எனது கனவு கன்னியை ஆர்திரிடிஸ் கால்களுடன் ,நடக்க முடியாமல் நடந்து வந்ததை காணும் போது ,மனது வலிக்கவே செய்தது.
முரளி ,ராகவேந்தர் இருவருக்கும் எங்கள் நன்றிகள்,வாழ்த்துக்கள்.
சிவகாமியின் செல்வன் பிறந்த தினத்தன்று மீண்டும் மதுரை மாநகரில் சிவகாமியின் செல்வன்.
மீனாட்சி பட்டணத்தில் மீனாட்சி திரையரங்கில்
ஜூலை 15 சிவகாமியின் செல்வன் பிறந்த நாளில் வெளியாகி ராஜாமணியின் தவப்புதல்வனின் நினைவு நாளான ஜூலை 21-லும் வெற்றி முரசு கொட்ட வருகிறார்.
அன்புடன்
http://i1094.photobucket.com/albums/...Kamarajar6.jpg
[புகைப்படத்திற்கு நன்றி சுவாமி!]
இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!
விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!
சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!
விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தியொன்பது ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!
தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!
பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!
பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!
எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!
அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை
அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!
ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தியொன்பது ஆண்டு தமிழக வரலாற்றில்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!
என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!
ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்
எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்
அன்றுதான் ஆரம்பமாகும்
தாழ்ந்து கிடக்கும் தமிழகம்
தலை நிமிரப் போகும் பொற்காலம்!
அன்புடன்
பொதுவாகவே மீள் பதிவு என்பது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாத ஒன்று. ஆனால் இந்த மீள் பதிவு நானே இரண்டாவது முறையாக விரும்பி செய்த ஒன்று.
காமராசர்-
ஒரு நல்ல மனம் கொண்ட எளிமையான அரசியல்வாதி. தமிழகத்தின் மிக சிறந்த முதல்வர். இந்த வரிசையில் அண்ணா வந்திருப்பார் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால்.ராஜாஜி தொடர்ந்திருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக திட்டத்துடன் முன்னேறி இருக்கும்.
முன்னேற்றம் என்பதெல்லாம் பூஜ்யத்திலிருந்து தொடங்கியதால் ஏற்பட்ட விறு விறு மாற்றங்களே. அந்த காலகட்டத்தில் அவர் இருந்தது அவருடைய அதிர்ஷ்டம்.பல முன்னேற்ற திட்டங்கள்,இலவச கல்வி,மதிய உணவு ,பிற்படுத்த பட்டோர் நலம் போன்ற பல திட்டங்களுக்கு இந்த பச்சை தமிழனுக்கு (ஆசான் பெரியார்) புகழ் சேராமல் யார் யாருக்கோ போய் சேர்ந்தது. மது என்பது தமிழகத்தை எட்டியே பார்க்கவில்லை.
சத்யமூர்த்தி ,ராஜாஜியுடன் ஏற்பட்ட பிணக்கில் இவரை தூக்கி விட, ராஜாஜியும் பார்ப்பன எதிர்ப்பு அலையை புரிந்து கொள்ளாமல், கவர்னர் ஜெனெரல் என்ற பதவியில் இருந்து விட்டு பல படிகள் தாழ்ந்து தமிழக முதல்வர் ஆனார். குலதொழில்-கல்வி திட்டம் மிக மிக தொலை நோக்கு கொண்டது. பல சமூகங்கள் முன்னேறி இருக்கும். இந்த திட்டம் தோல்வியடைய பார்ப்பனர்களுக்கு தொழிலே இல்லாமல் போனது ,பார்ப்பன சூழ்ச்சியாய் பார்க்க பட்டது.
காமராசர் ,ஆட்சியை துறந்து(காமராஜ் திட்டம்) ,பக்தவத்சலம் போன்ற தகுதி,திறமை,நேர்மை இல்லாதவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது ,திராவிட இயக்கங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. மத்திய அரசுடன் இணங்கிய திராவிட இயக்கங்கள், கச்ச தீவு,காவிரி,முல்லை-பெரியார் பிரச்சினை,இலங்கை தமிழர் பிரச்சினை ,மது விலக்கு , கல்வி,சுகாதாரம் எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து ,இந்தியாவுக்கே மோசமான முன்னுதாரணம் ஆனது.
எனக்கு காமராசர்,அண்ணா, கருணாநிதி போன்றோருடன் ,ஓரளவு மதிப்பு உண்டு.
காமராசரின் மிக பெரிய தோல்விகளுக்கு காரணமான தலைமை தகுதியில்லாத குணங்கள்.(அண்ணாவிற்கு தலைவராக முதல் மதிப்பெண் கொடுக்கலாம் )
மாற்றத்தை உணராத பழமை பிடிவாதம்.
கருத்துக்களை சரியாக வெளியிட தெரியா விட்டாலும்,பல பேச்சாளர்களை வளர்த்திருக்கலாம்.
செல்வாக்கு மிக்க சிவாஜி போன்றவர்களை சரியாக உபயோக படுத்தாத உதாசீனம்.சிவாஜி என்ற ஒரு அற்புதமான தூய மனம் கொண்ட ,சுத்தமான மனிதருக்கு,இவரால் இழப்புகள் மிக அதிகம். சிவாஜியின் உன்னதம் தொட்ட காலங்கள்(purple patch ) ,அவர் அரசியல் யமனிடம் இருந்து விலகியிருந்த 1957 முதல் 1964 வரையான காலங்களே.
தன்னுடைய மாநிலத்தை சேர்ந்த கலைஞர்களை , பல்திறமை கொண்டவர்களை தேசிய அளவில் இவர் செல்வாக்கை வைத்து இனம் காட்டவில்லை.ஒரு அவ்ரங்கசீப் போல ரசனை கெட்ட ஆள்.சிவாஜிக்கு உலக அளவில் வந்த பெருமைக்கு ஈடாக, இந்தியாவில் வராமல் போனதற்கு ,இந்த மாதிரி ரசனை கெட்டவர்களின் பின்னால் போனதே காரணம்.
இரண்டாம் நிலை தலைவர்களை வளர்க்காமல், அடுத்த தலைமையை இனம் காட்டாமல் போனது.சுத்தமாக தலைமை குணமே இல்லாத அரைகுறை அரசியல்வாதி.
இந்திரா எதிர்ப்பு அலையை ,ஜெயப்ரகாஷ் போன்று சரியாக திட்டமிடாதது.
தன்னுடன் தன் கட்சிக்கும் சமாதி கட்டியது.
தமிழகத்தின் பிரத்யேக நலன்களை புறக்கணித்து,தனித்தன்மை துறந்து ,தேசியத்தில் இணைய துடித்து, தேசிய தலைமை தேடி வந்த போதும் ஏற்று கொள்ளாத தாழ்மையுணர்வு. இது அவரை இரண்டுங்கெட்டான் அரசியல் ஞான சூன்யமாக இனம் காட்டி விட்டது.
ஜனநாயகத்தில் ,மக்கள் மன மாற்றங்களை உணராத ,குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்.(மொழி கொள்கையிலும் தெளிவில்லை)
ஆனாலும் ,அவருடைய நல்ல மனம் கொண்ட,மக்களிடம் நிஜமான அக்கறை கொண்ட ,நல்லாட்சிக்கு தலை வணக்கம்.
அந்தக் கடவுளைப் போல்
அத்தனை அழகில்லை.
ஆனாலும்,
அகன்று பரந்த
அந்த முகத்தில்
அவளுக்குப் போலவே உண்டு-
கருணை விழிகள் ரெண்டு.
அவளுக்கிருப்பது போல்
இப்படியும்,அப்படியுமாய்
முளைத்த கைகள்
நான்கில்லை இங்கே.
இடுப்புக்குக் கீழே
வழிந்து நீளும்
இரண்டே கைகள்.
இரண்டுமே,
கோடிக் கோடி ஜனங்கள்
தம் கண்களில்
நன்றிகளோடு
ஒற்றிக் கொண்டவை.
அவள் திருமேனியில்
இறுகி மினுக்கும்
பட்டாடை இல்லை இங்கே.
தொள தொளவென்று
அணிந்த உடைகள்..
அந்த வெள்ளை மனசு
போலவே
மிகத் தாராளம்.
அவள் போல் அமர்ந்து
அருளாட்சி செய்ய
வெண் தாமரை இருக்கை
இல்லை இங்கே.
அலைந்தலைந்து
நல்லது செய்த
அந்த அன்புருவத்தின்
வீற்றிருப்பெல்லாம்
ஏழையரின் இதயங்களில்.
அவள் மடியிருந்து
கனிவான இசை சிந்தும்
கை வீணை கிடையாதிங்கே.
சத்திய எச்சில் தெறிக்கப்
பேசுகிற பேச்சிலெல்லாம்
சங்கீத இனிமை இங்கே.
சரஸ்வதி அல்ல.
நாங்கள் வணங்கிப் பணியும்
கல்விக் கடவுளுக்கு
"காமராஜ்" என்று பெயர்.