சுதாங்கன் என்பவன் ஒரு முட்டாள். வேறு ஒரு நடிகருக்கு தன்னை ரசிகன் என்று சொல்லிக் கொள்பவன். அந்த நடிகரின் படங்களைப் பற்றி எழுதி வருகிறான். தான் ரசிகராக இருக்கும் நடிகர் பற்றியே தப்புத் தப்பான தகவல்கள் சொல்கிறான். எப்படியோ தொலையட்டும். ஆனால், அவனுக்குப் பிடித்த நடிகர் பற்றியே தப்பாக எழுதுபவன் மக்கள் திலகத்தைப் பற்றி எந்த லட்சணத்தில் எழுதுவான்?
புரட்சித் தலைவரின் படங்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை வருவதால் கூட்டம் குவிந்து வசூல் வருமாம். எப்ப மக்கள் திலகம் படம் வந்தாலும் வசூல் வரும். மறுவெளியீட்டிலும் மக்கள் திலகம் படங்கள் வசூலை குவிக்கும். இன்றைக்கும் மறு வெளியீட்டில் மக்கள்திலகம் படங்களே அதிகம் வெளியாகின்றன. கோயமுத்தூரில் நீதிக்குப் பின் பாசம், மதுரையில் நாளை நமதே, சென்னையில் 3 படங்கள் ஓடுகின்றன.
அதனால்தான் பேசும்படம் பத்திரிகை 1971-ம் வருசத்திலே மக்கள் திலகத்தை வசூல் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டது.
http://i63.tinypic.com/wiv5zq.jpg
சரி, அதாவது போகட்டும். வேறு ஒரு படத்தில் நடிக்க ஜெயலலிதாவை காஷ்மீருக்கு போகக் கூடாது என்று மக்கள் திலகம் கண்டிஷன் போட்டார் என்று சொல்வார்கள் என்று சுதாங்கன் சொல்கிறான். நன்றாக படித்துப் பாருங்கள். அப்படி கண்டிஷன் போட்டதை இவனும் பக்கத்தில் இருந்து பார்க்கவி்ல்லை. கண்டிஷன் போட்டார் …. என்று சொல்வார்களாம். இவன் சொல்லவில்லையாம். சொல்வார்களாம். யார் சொன்னார்கள்? எப்ப சொன்னார்கள்? ஒரு நல்லவன் இமேஜைக் கெடுக்க என்றே ஒரு கூட்டம் அலைகிறது.
ஒரு வேளை இதெல்லாம் திரைமறைவில் நடந்து வெளி உலகத்துக்கு தெரியாமல் போனவை என்று சொன்னால் எவ்வளவு விஷயங்களை திரைமறைவில் நடந்தவைகளை சொல்லலாம்? எந்த நடிகனுக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு? அதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தது? அந்த சிக்கல்களை தீர்த்து வைத்தது யார்? என்றெல்லாம் யார் வேண்டுமனாலும் எழுதலாம். இதெல்லாம் யாருக்கு என்ன பயன் தரப்போகிறது?
இவனெல்லாம் ஒரு எழுத்தாளனாம். ஒரு காலத்தில் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என்று 1996 ஆண்டு வாக்கில் கூறியவன், பின்னர் ஜெயலலிதா இருக்கற போதே ஜெயா டிவியில் ஒட்டிக் கொண்டு இப்போதும் ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்துகிறான். இப்ப திமுக ஊழலை பற்றி இந்த வெட்கம் கெட்டவன் பேசுகிறான்.
சுதாங்கன் மாதிரி ஆளுங்கள் மனதில் உள்ள வக்கிரங்களை எழுதி ஆசையை தீர்த்துக் கொள்கிறவர்கள். தன் அபிமான நடிகர் பற்றியே ஒழுங்காக தப்பு இல்லாமல் தகவல் தெரிவிக்க துப்பில்லை. புரட்சித் தலைவர் பற்றி எழுத வந்துவிட்டான்.
உரிமைக்குரல் படம் 7-11-1974ல் வெளியானது. அது வெளியான 23 நாளில் 30-11-1974 ல் சிரித்து வாழ வேண்டும் வெளியானது. இதுதான் 6 மாசத்துக்கு ஒருமுறையா? உரிமைக்குரல் மதுரை சினிப்பிரியாவில் வெள்ளிவிழா ஓடியது. சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையில் (மட்டும்) 100 நாள் ஒடியது. இன்னும் சிறிது நாள் கழித்து வந்திருந்தால் உரிமைக்குரல் அலையில் இருந்து தப்பி சிரித்து வாழ வேண்டும் மதுரை மட்டும் இல்லாமல் பல இடங்களில் 100 நாள் ஓடியிருக்கும்.
இன்னொரு விசயம். மதுரையில் முதன்முதலில் சினிப்பிரியா, மினிப்பிரியா தியேட்டர் கட்டி இரண்டு தியேட்டரிலும் வெளியான முதல் படம் உரிமைக்குரல்தான். மினிப்பிரியாவில் ஒரு மாதத்துக்கு மேல் ஓடியது. சினிப்பிரியாவில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழா கண்டது. சினிப்பிரியா, மினி்ப்பிரியா முதலில் கட்டி முடிந்து இரண்டு தியேட்டரிலும் வெளியான முதல் படம் வெற்றிப்படம் உரிமைக்குரல்தான்.
21-11-1974-ல் மதுரை தினமலரில் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் அண்ணன் தங்கம் அவர்கள் கொடுத்த விளம்பரம் இங்கே…
http://i65.tinypic.com/34t28g7.jpg
உரிமைக்குரல் படம் 1974-ம் வருசமே வந்துவிட்டது..