https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...86228c1d3ee07f
Printable View
ஹாரிஸ் ஜெயராஜூக்குப் படமே இல்லை, எதனால்?
கடந்த சில வருடங்களாகப் பரபரப்பாக இருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜூக்கு இப்போது படமே இல்லையாம். உதயநிதி நடிக்கும் கெத்து படம் மட்டும் அவர் கைவசம் இருக்கிறது. அந்தப்படத்தின் வேலைகளும் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்து வந்தால் பின்னணி இசையமைக்கும் வேலைகள் இருக்கும். அதன்பின் அவருக்கு எந்தப்படமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
அவருடைய பாடல்களுக்காகவே படங்கள் ஒடிய காலம்போய் அண்மைக்காலமாக அவருடைய பாடல்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பில்லாமல் போய்விட்டது என்பதால் பெரியபடங்களில் அவரை ஒப்பந்தம் செய்யத் தயங்குகிறார்களாம்.
அதற்கடுத்த நிலையில் உள்ள படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய அவருடைய சம்பளம் பெரிய இடையூறு என்கிறார்கள். அவருடைய சம்பளம் சுமார் மூன்றகோடி என்று சொல்லப்படுகிறது, அதிலிருந்து அவர் இறங்கி வராததால் படங்கள் கிடைக்காமல் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
.
So I hear Ms Asin Thottumkal is getting married?
Best wishes to her and husband-to-be!
.
பாலாவின் தாரைதப்பட்டை இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடக்கம் - VIKATAN
பாலா இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும் வரலட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் தாரைதப்பட்டை. இந்தப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
கரகாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நடுவில் சசிகுமாருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதம் ஏற்பட்டது. அடுத்து படப்பிடிப்பு தொடங்கியதும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். அண்மையில் அந்தமான் போய்ப்படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள்.
அந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி போக வர கப்பலிலும் படப்பிடிப்பு நடத்தினார்களாம். கப்பலில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.
அந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறதாம். பதினைந்துநாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் சொல்லப்படுகிறது.
தீபாவளிக்கு படங்கள் ‘ரிலீஸ்’ இல்லை? - தயாரிப்பாளர் சங்கம் திட்டம்
இந்த தீபாவளிக்கு புது ரிலீஸ் படங்கள் ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பாளர் சங்க வட்டாரத் தில் கூறப்படுகிறது. சினிமா தயாரிப் பாளர்களின் பிரச்சினைகள், சிக்கல்களை பேசித் தீர்த்துக்கொள்ளும் வகையில், அக்டோபர் மாதக் கடைசியில் இருந்தே புதுப் படங்கள் வெளியிடுவதை நிறுத்திவைக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டிருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்கள் பிரச் சினை, க்யூப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது தமிழ் திரையுலகம். கடந்த 6 மாதங்களில் வெளியான படங்களைப் பொருத்தவரை, ‘காஞ்சனா’, ‘பாகுபலி’ ஆகிய 2 படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்ததாக கூறப் படுகிறது. படத் தயாரிப்புக்கு ஆகும் செலவு, நடிகர்களின் சம்பள உயர்வு, விளம்பரச் செலவு என தொடர்ச்சி யாக சிக்கித் தவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
ஒரு படம் வெளியாகும்போது, ‘4 காட்சிகள்’, ‘மதியம் 2:30 மணி காட்சி மட்டும்’ என்று திரையரங்குகளில் விளம் பரப்படுத்துகிறார்கள். ஆனால், சில திரையரங்குகளில் அந்த நேரத்துக்கு போனால் வேறு படம் ஓடிக்கொண்டி ருப்பதாக கொந்தளிக்கின்றனர் தயா ரிப்பாளர்கள். அது மட்டுமன்றி, பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால், சிறு முதலீட்டு படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அக்டோபர் மாத இறுதியில் இருந்து, புதுப்படங்கள் வெளியீட்டை நிறுத்தி வைக்க தயாரிப்பாளர் சங்கம் திட்ட மிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர். சங்கத்தின் இந்த முடிவை விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரிவிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் படத் தயாரிப்பு முறையை மாற்றி சீரமைப்பது சம்பந்த மாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியிருப்பதாவது:
எவ்வளவு சரியாக திட்டமிட்டாலும், தயாரிப்பாளர்களே நஷ்டம் அடைகின்ற னர். இதற்கான காரணங்கள்:
எந்த வங்கியும் திரைப்பட தயாரிப் புக்கு கடன் வழங்குவதில்லை. இதனால், பைனான்சியர்களிடம் தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி, அதிக வட்டியுடன் திருப்பித் தரவேண்டியுள்ளது. இதனால் பைனான்சியர்களுக்கு எந்த சிக்கலும் வருவதில்லை. தாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் அவர்கள் வருமானம் பெறுகின்றனர்.
படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பணத்தை பைசல் செய்யாவிட்டால் படம் வெளியாகாது. சேட்டிலைட் உரிமை வாங்கப்படவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு இது பெரிய நிதிச்சுமையாக மாறுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல ‘அவுட் ரைட்’ முறையில் இப்போது திரைப்படம் வாங்கப்படுவதில்லை. அதுவும் ஒரு காரணம்.
படம் விற்கப்படுகிறதோ, இல் லையோ, அனைத்து நிதிச் சுமை யையும் தயாரிப்பாளர் ஏற்க வேண் டும். எல்லா தரப்புக்கும் பணத்தை தந்த பின்னரே படத்தை வெளியிட வேண்டும்.
இதில் எந்த நிலையிலும் தயாரிப் பாளர் தவிர மற்ற அனைவருக்கும் லாபமே. தொடர்ந்து நஷ்டம் அடை யும் பட்சத்தில் நாட்டில் உள்ள சில விவசாயிகளின் கதிதான் தயாரிப் பாளர்களுக்கும் நேருகிறது.
இந்நிலையை மாற்ற தயாரிப்பு செலவை 50 சதவீதமாவது குறைக்க வேண்டும். இதுதவிர, மற்ற தீர்வுகளும் உள்ளன.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திரையுலகை சேர்ந்த அனைவரும் உட்கார்ந்து, படத்தயா ரிப்பு முறைகளை மாற்ற வேண்டும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த கட்டமைப்பை மாற்ற வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
COIMBATORE ROYAL THEATER - DAILY 4 SHOWS - from 28th AUGUST
http://i501.photobucket.com/albums/e...pssfbxa32w.jpg
'நானும் ரவுடிதான்', 'விசாரணை'யை கையகப்படுத்தியது லைக்கா
தனுஷ் தயாரித்திருக்கும் 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' படங்களின் உரிமையை லைக்கா நிறுவனம் கையகப்படுத்தியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’லாக் அப்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த இரு படங்களின் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. இறுதியாக லைக்கா நிறுவனம் இவ்விரண்டு படங்களின் உரிமையையும் ஒன்றாக கையகப்படுத்தியிருக்கிறது.
'விசாரணை' படத்தினை உலகளவில் வெளியிட அனைத்து உரிமைகளையும் மற்றும் 'நானும் ரவுடிதான்' படத்தின் தமிழக உரிமையையும் லைக்கா நிறுவனம் வசப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா, ஹன்சிகா இணையும் 'போக்கிரி ராஜா'
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா இணையும் படத்துக்கு 'போக்கிரி ராஜா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திருநாள்' படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிவுற்றது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் ஜீவா. நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படத்துக்கு 'போக்கிரி ராஜா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.
தயாரிப்பாளர்சங்கத்துக்கு எதிராக பெண் தயாரிப்பாளர் போர்க்கொடி
பாயும்புலி படச்சிக்கலையொட்டி செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் புதியபடங்களைத் திரையிடமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள்சங்கம் அறிவித்திருக்கிறது.
இதனால் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியடைந்திருப்பதோடு திட்டமிட்டபடி தங்கள் படம் வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.
அசோக்செல்வன் பிந்துமாதவி நடிப்பில் சவாலேசமாளி படம் நாளை வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தை அருண்பாண்டியனின் மகள் கவிதாபாண்டியன் தயாரித்திருக்கிறார். அவரிடம் இதுபற்றிக் கேட்ட போது எங்களுடைய படம் திட்டமிட்டபடி நாளை (04.09.2015) உலக முழுவதும் 170 க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகும்.
“படத்தை திடீரென நிறுத்த முடியாது. என்னெனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப் பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப் பட்டுள்ளது. நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.
நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வீ.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்னைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை இன்னும் சொல்லப்போனால் லிங்கா படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான்தான். அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப் பட்டேன்.
அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை.
செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது” என்று கூறினார்கள்.