http://i1087.photobucket.com/albums/..._000757697.jpg
http://i1087.photobucket.com/albums/..._000953400.jpg
http://i1087.photobucket.com/albums/..._001012039.jpg
http://i1087.photobucket.com/albums/..._001084464.jpg
Printable View
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன்,
பூப்பறிக்க வருகிறோம் திரைக்காவியத்தின் விளம்பரம் மற்றும் ஸ்டில்களை வெளியிட்டு அசத்திவிட்டீர்கள்.
ஆனால் இந்த படத்தை நினைக்கும் போது நம்மால் உணர்ச்சி வசப் படாமல் இருக்க முடியவில்லை. கட்டுப் படுத்துவதும் கடினமாய் உள்ளது. தன்னுடைய கடைசிப் படம் என்று தெரியாத நடிகர் திலகம், தன்னுடைய முதல் படத்தைப் போன்று இந்தப் பாடல் காட்சியில் துள்ளி ஆடுவதைப் பார்க்கும் போது...
http://i50.photobucket.com/albums/f3...y666/thcry.gif
எட்டில் அழகு பதினெட்டில் அழகு என்ற அந்த இனிமையான பாடல் நம் பார்வைக்கு.,
இசை மெல்லிசை இளவல் வித்யா சாகர்
http://www.youtube.com/watch?v=wKrhsw9ST7Q
அது மட்டுமா தன்னுடைய இறுதிப் படத்தில் கூட புல்லாங்குழல் இசைக் கருவியை வாசித்து நடித்துள்ளார்.
அன்புடன்
டியர் முரளி சார்,
தங்களுடைய பதிவினை தினமும் எதிர்பார்க்கும் பல ரசிகர்களில் அடியேனும் ஒருவன். தினமும் எழுதுங்கள். ஒரு வார்த்தையாவது எழுதுங்கள். தங்களின் ஒரு வார்த்தை ஒரு லட்சம்.
சதீஷுடனான தங்களின் நினைவுப் பகிர்வு எல்லோருக்கும் அவரவர்களுடைய இளமைக் காலத்தை நினைவூட்டியிருக்கும். பொதிகை மலை சந்தனமே, பூஜை செய்யும் மந்திரமே, மதுரை நகர் வீதியிலே வளைய வரும் இளங்காற்றே என்ற பாடலின் வரிகளைப் போல் மதுரை நகரின் காற்று தங்களுக்குக் கட்டியம் கூறும்.
தாங்கள் கூறியது சரி. திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். நடிகர் திலகத்தின் மேன்மைகளை நம்மைப் போன்று ரசிகர்களில் ஒருவராக, பல்வேறு கோணங்களில் அவருடைய பெருமையைப் பறை சாற்றுபவராக திரு மகேந்திரா ஆற்றி வரும் தொண்டு மிகவும் பாராட்டத் தக்கது. அவருடன் விவாதிக்கும் போது அவருடைய சிந்தனையில் தோன்றியதன் செயல் வடிவம் நாம் 2ம் தேதி பார்க்கும் போது தெரியும்.
இதற்காக அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகள்.
அன்புடன்
'பூப்பறிக்க வருகிறோம்' சிறப்பு நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...an31355/44.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/1-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்
முரளி சார்! ரசிகருடனான சந்திப்பைக் கூட ஒரு சுவாரசியமான கட்டுரையாக வடித்திருப்பது அருமை.. தொடர்ந்து உங்களுடைய எழுத்துக்களை, ஆய்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
அன்புள்ள பம்மலார் சார்,
'பட்டணத்தில் பூதம்' படத்தில், முதன்முதலாக ஜாடியிலிருந்து வெளிவந்த பூதத்தைப்பார்த்து பயப்படும் ஜெய்யும், நாகேஷும் அதை அங்கிருந்து அகற்ற, எங்காவது பக்கத்திலுள்ள இடத்துக்கு அனுப்பினால் உடனே திரும்பி விடும் என்பதற்காக, திருப்பதி சென்று பிரசாதம் கொண்டு வரும்படி சொல்ல, அடுத்த கணம் கோயில் சந்நிதானத்திலிருந்து ஒருவர் பிரசாதத்துடன் வந்து நிற்பார்.
அதுபோல, நடிகர்திலகத்துடன் நடித்த நடிகை மாளவிகா அவரைப்பற்றி கருத்துச்சொன்ன பேப்பர் கட்டிங் எதுவும் உள்ளதா என்று நான் கேட்டதுதான் தாமதம்.... "இதோ" என்று எடுத்து நீட்டுகிறீர்கள். என்ன மனிதரய்யா நீங்கள்....
ஊகும்.... பூதாதி பூதங்களின் தலைவன் 'ஜீ பூம்பா' எங்கும் போகவில்லை, இங்குதான் இருக்கிறது.
இந்த ஜென்மத்தில் அதன் பெயர் 'பம்மல் சுவாமிநாதன்'.