http://i1302.photobucket.com/albums/...ps56d0c6b8.jpg
Printable View
http://i1302.photobucket.com/albums/...ps8396de88.jpg
Thank you Kothai notes on Music and Movie in FB
இருவர் உள்ளம் ( kothaidhanabalan )
தமிழ்த் திரையில் பல நல்ல நாவல்கள் திரைப்படமாக்கப் பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் லக்ஷ்மி அவர்கள் எழுதிய ' பெண்மனம் ' என்ற நாவலே , கலைஞர் வசனத்தில் 'இருவர் உள்ளம் ' என்ற படமாக வந்தது...வெற்றி நடை போட்டது.
ஆரம்பபாடலே ....' 'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்....' என்று பாடும்...சிவாஜி ..கதாநாயகனாய் கண்ணதாசன் வரிகளில், இசைத் திலகம் இசையில் அறிமுகமாகும் விதத்திலே அந்தப் பாத்திரத்தின் தன்மை எவ்வளவு கேவலப் பட்டது ...பெண்களென்றால் மதிக்கத் தெரியாத கனவான் வீட்டுச் செல்லப்பிள்ளையாக ..பளிச்சிடுவார். அந்தக் காலத்து பெரியவர்க்குள்ள அக்கறையை...எஸ்.வி. ரங்கராவ்...அந்தக் காலத்து பெரியவர் பாணியில் ...டாக்டர் படிப்பென்றாலும்...பாதியில் நிறுத்தி ..வீட்டில் நிறுத்தி வேலையில் அமர்த்துவது இயல்பான மனித சுபாவத்தின் அன்றைய வெளிப்பாடு. சரோஜா தேவியின் அறிமுகம்... கோபத்தில் கொப்பளிக்கும் வார்த்தைகள்...அழகு கண்டு தடுமாறும் சிவாஜி.. மனதில் ....புதுவிதமான எண்ணத் தடுமாற்றம் உண்டாதலைக் கவனிக்கலாம்..
இயக்குனர் பிரசாத்தின் திறமை ...ஆரம்பம் ....இறுதிவரை அந்தந்த பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பளிச்சென்று அமைகிறது. சிவாஜியின் அண்ணன் வக்கீலாக நடிகவேள்..எம்.ஆர்.ராதா... இணை டி.பி. முத்துலட்சுமி.... முதலில் டூயட் ..பிறகு தாலாட்டில் தானே முடியும்...என்று சற்று கிண்டலுடன் சி ரித்து ...பாடும் ...' புத்தி சிகாமணி பெற்ற பிள்ள....' எ.எல்.ராகவன் ..ஈஸ்வரி அவர்கள் குரலில் ஒலிக்கும் பாடலை யார்தான் மறக்க முடியும்.
தாயின் (சந்தியா...) கண்டிப்பு இல்லாது செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர்...அந்த அதிகார வர்க்க எண்ணம் கொண்டே ..சாந்தா... சரோஜாதேவி மீது வளரும் அன்பை...நண்பன் கே.பாலாஜி... மைனர் மாணிக்கம்... உரையாடும்போது ' நம்மை வலை வீசி வரும் பெண்கள் போல அவரை எடை போடாதே ...சாந்தா இரண்டாவது கண்ணகி ...என இவர் தன்னை இரண்டாவது கோவலன்...என்பது வசனத்தில்...கதையின் போக்கை உணர்த்தி விடுகிறார்.
தன் வீட்டிற்கே வீட்டுப் பாடம் எடுக்கவரும் சாந்தாவிடம் தன் உள்ளத்தை உள்ளபடி உணர்த்தினாலும் , யாசகம் பெறுவதல்ல காதல் ம்.... என்று சொல்லி மசியாதவரை...பணம் கொடுத்து வாங்கிய...கணவர் தானே ...நீங்கள்...உள்ளத்தின் நிழலை நெருங்க முடியாது..
என்று கூர்மையான வசனம் சரோஜாதேவிக்கு... சிவாஜிக்கோ அக்னி பரீட்சை....உண்மையான அன்பிற்கு அங்கு ரோஷம் வருகிறது...'நீயாக உண்மை அன்பை புரியும் வரையில்...வெளிப்பார்வைக்கே கணவன் மனைவி என்று ஒதுங்குவது... நடிப்பு , வசனம், பாடல். மெல்லிசைக் குரலோன் குரலில், 'கண்ணெதிரே தோண்றினாள்...கனி முகத்தைக் காட்டினாள்...'
பாட்டை ரசிப்பதா...? நமக்குத்தான் குழப்பம்.
கணவரை விட்டு ஒதுங்கியே இருக்கும் நாயகிக்கு ...மாமனார், அத்தை..மச்சான் , பிள்ளைகள் என்று உறவுகள் பலப்பட...நாயகனின் குறையாத உண்மையான அன்பும் படிப்படியாய் நாயகியை மாற்ற.... மாமனார் பிறந்த நாள் விழாவில் கணவர் விருப்பத்திற்கு பாடினாலும்...குத்தலாக ..நாம் விலைக்கு போன பெண்தானே என்ற உள்ளுணர்வே மேலோங்க...' இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா....! சுசீலாம்மாவின் குரலில் "அனைவருக்கும் சற்று சந்தேகத்தின் சாயலை இந்நிகழ்வு படரச் செய்ய... இறுதியாக சாடவும்..செய்கிறது....அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே...அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே...! பெண்மனத்தின் சாபக் கேடோ என்றே தோன்றும்.. இன்றும் இந்தப் பாடல் காட்சியை நாம் பார்க்கும்போது.
கெட்ட பழக்கத்தினால் வரும் வேதனையை ஒருநாளாவது அனுபவித்துதானே ஆகணும்.
மைனர் மாணிக்கம் மூலமாய் மாஜி காதலி வசந்தி சிவாஜி சந்திக்க...ஆனால் அவர் இப்போது மாறிவிட்ட தரம் ஏறிய செல்வமாயிற்றே....
கன்னியாகுமரியில் இனிய மாற்றங்கள் மலர... கோவலனை கண்ணகி மன்னித்து ஏற்றுக் கொண்டாள்.. 'அழகு ..சிரிக்கிறது....ஆசை துடிக்கிறது...'
அவ்வளவு சீக்கிரம் எப்படி...
பத்மினி பிரியதர்சினி...வசந்தி கொலை வழக்கு...இவர் மேல் பழி விழ, சிறையில், 'ஏனழுதாய் ஏனழுதாய்....பாடல்...உள்ள உணர்வுகள் அத்தனையையும் உ ள் வாங்கி வெளிவரும் பாடல்... வழக்கில் அண்ணன் எம்.ஆர்.ராதா...பங்கேற்று...இறுதியில்...மனைவி சரோஜாதேவியின் , உண்மை அறிந்த வைராக்கியம்...அவரை விடுதலை செய்கிறது. தந்தையே ..தனக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க யத்தனித்ததை நினைத்து வேதனைப்பட்டு...
நான் செய்த பாவத்தை அனுபவித்துதானே ஆகவேண்டும் என்று உணரும் சிவாஜியின் பாங்கு... நல்லதொரு முழுமையான மனமாற்றம்.
டி.ஆர். ராமச்சந்திரனுக்கு வசந்தியைக் கொலை செய்த கணவனாக வில்லன் பாத்திரம்..இடையில் கருணாநிதி, எஸ். ராமராவ்... தேன்கூடு ...நகைச்சுவைக் காட்சி மறக்க முடியாதது.
காதல் என்பது எப்படிபட்டவனுக்கும் வரலாம்...ஆனால் அதில் உண்மை தீர்க்கம் இருக்கவேண்டும் என்பதே எந்தப் பெண் மனமும் விரும்பும் என்றுணர்த்தும் ...படம். நல்லதொரு சமபங்கு நடிகர், இசை, கவிஞர்...வசன ஆசிரியர் இவர்களுக்கு கொடுத்து இயக்குனர் பிரசாத் அவர்கள் கை வண்ணத்தில்...இந்த இருவர் உள்ளம்.
http://i1302.photobucket.com/albums/...psd9829975.jpg
எட்டாவது வாரம் ஐந்து திரை அரங்கில் வெற்றி வெற்றி....
இந்த கர்ணன் வெற்றியை வெற்றி கொள்ள வேறு ஒரு நடிகர் திலகம் படம் தான் வரவேண்டும்....
Photographer Mr. Ramakrishnan of Madurai with NT at NT's house
http://i1302.photobucket.com/albums/...psf34fee53.jpg
வசூலை வாரி குவித்து கோவையில் ஒரு கலக்கு கலக்கிய
எங்கள் தங்க ராஜா....
எங்கள் வசூல் ராஜா என்று எல்லா திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநோயோக்கிதிரை வசூலை அள்ளி அள்ளி அன்றும் இன்றும் இனி என்றும் வழங்கும் எங்கள் தங்க ராஜாவை ரசிகர்கள் வழங்கும் வரவேற்பை பாருங்கள்...
http://i1302.photobucket.com/albums/...ps32b524f1.jpg