பணம் படைத்தவன் - என்னை பொறுத்தவரை நல்ல மனம் படைத்தவன்
படத்தின் ஆரம்ப காட்சியில் தலைவர் விளையாட்டு காட்சிகளில் மிக அழகாக ஒரு சிறந்த நேர்த்தியான தடகள விளையாட்டு வீரராக பவனி வருவார் .
நாகரிக மோகத்தால் சீரழியும் சௌகார் ஜானகியுடன் ஹோட்டல் கிளப் நடனம் பார்க்கும் காட்சியில் தலைவரின் கன்னிய்மம் தெரியும் அதோடு தொடர்ச்சியாக சௌகார் ஜானகியுடன் பேசும் இடங்கள் கலக்கல்
கே .ஆர் விஜயவோடு மெல்லிய காதல் காட்சிகள் கன கச்சிதம் குறிப்பாக இந்த மாப்பிள்ளை கைய புடிச்சான் என்ற பாடல் சூப்பர்
தமபியாக வரும் நாகேஷ் ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகும் காட்சியில் அவரை நல்வழிபடுத்தி குடியின் தீங்கு சொல்லும் காட்சி அருமையாக இருக்கும் . என்னை பொறுத்தவரை அந்த காட்சியினை மதுவிலக்கு பிரச்சாரமாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் .
நாகரிக மோகத்தில் அழியும் மனித சமுதாய திற்காக அன்றே எக் காலத்துக்கும் பொருந்தும் பாடலாக கண்போன போக்கிலே பாடல் அமைந்திருக்கும் .
மனோகர் அவர்களோடு ஹோட்டல் சண்டை காட்சிகள் மிக அருமை அதன் தொடர்ச்சியாக வரும் காட்சிகளில் தலைவரின் நடிப்பு அபாரம . பின்னர் தலைவர் ராணுவத்தில் சேரும் காட்சிகள் அருமை
பாடல்கள் எல்லாம் தேன் சொட்டு குறிப்பாக என்னக்கொரு மகன் பிறப்பான் பாடல்
ஷாஜகான் இப்படி தான் இருந்திருப்பாரோ என்று நாம் நினைக்கும் அளவுக்கு பவள கொடியில பாட்டில் வரும் தலைவரின் உடை அலங்காரம் .
ராணுவ வேலைக்கு பின்னால் தலைவர் ஜிம் வைத்து இளைய சமுகத்தை உடற் பயிற்சி சொல்லி கொடுக்கும் வாத்தியார் ஆக இருப்பார்
மொத்தத்தில் திரும்ப நான் சொல்கிறேன் பணம் படைத்தவன் - என்னை பொறுத்தவரை நல்ல மனம் படைத்தவன்