http://www.youtube.com/watch?v=tLdRE0o1zaE
Printable View
தமிழகத்தின் முதல் கேவா கலர் படம்- 1955ல் வெளியாகிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும்!
அலிபாபா படத்தை எடுப்பது என்று முடிவு செய்த டி.ஆர்.சுந்தரம் ஏற்கனவே இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டார். கதாநாயகி பி.பானுமதி. வில்லனாக வீரப்பா, காமெடியன்களாக தங்கவேலு, கே.சாரங்கபாணி மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எம்.என்.ராஜம் போன்றோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்தப்படம் கேவா கலரில் எடுக்கப்பட்டது புதுமை என்றாலும், அந்தப் புதுமையைச் செய்தவர் உள்ளூர்காரரான டபிள்யூ. ஆர்.சுப்பாராவ் என்னும் கேமரா நிபுணர். மாடர்ன் தியேட்டர்சில் தயாரானவர். இவர்தான் அப்போது எடுக்கப்பட்ட வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் புகைப்பட நிபுணராகப் பணியாற்றியவர். கேவா கலரில் அப்போது படம் எடுத்தது, ஒரு துணிச்சலான முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றிய ஏ.ஜே.டோமினிக், மாடர்ன் தியேட்டர்சில் வளர்ந்த இன்னொரு அற்புதக் கலைஞர்.
.
அப்போது எடுக்கப்பட்ட எல்லாப் படங்களுக்கும் அவர்தான் ஆர்ட் டைரக்டர். அலிபாபா படத்தில் முக்கியமான காட்சியே, குகைதான். இந்தக் குகைக்குள் நாற்பது திருடர்கள் மற்றும் குதிரைகளில் வந்து செல்ல வேண்டும். இதற்கு நல்ல குதிரைகள் வேண்டும். குதிரை சம்பந்தமான சீன்களை டி.ஆர்.சுந்தரம் மைசூரில் எடுத்தார். அங்கே இருந்த ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி, அவர்களிடமிருந்து, குதிரைகளையும், ஆட்களையும் தயார் செய்து கொண்டார். குதிரைகள் பார்க்க கம்பீரமாக இருந்தன. வில்லன் வீரப்பா, குதிரை மீது, தன் ஆட்களுடன் வருவதாகக் காட்சி. வந்தபின் குகைக்குள் நுழைய வேண்டும், பத்து நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்புக்காக மைசூரில் எல்லாரும் தங்கினர்.
இதற்காக குகை "செட்' இரண்டு இடங்களில் போடப்பட்டது. வீரப்பா, "மந்திரத்தை சொன்னதும் குகையின் கதவு தானாகத் திறக்க வேண்டும். அதற்காக பெரிய முன் கதவு அமைத்து, "செட்' போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. அதைப் போலவே சேலத்தில் ஏற்காடு மலை அடிவாரத்திலும் ஒரு, "செட்' போடப்பட்டது. ஸ்டுடியோவிற்கு வெளியே மற்றும் உள்ளே படப்பிடிப்பு நடத்த, ஸ்டுடியோவிலும் இன்னொரு "செட்' போடப்பட்டது. படத்திற்கு குதிரைகள் வேண்டுமே. டி.ஆர்.சுந்தரம் இருபது குதிரைகளை விலைக்கே வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அதற்குப் பின்தான், குகை சம்பந்தப்பட்ட வெளிப்புற காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டன.
அலிபாபாவில் சிக்கலான விஷயம், இந்த குகை காட்சிகள் மட்டுமல்ல, திருடர்கள் ஒளிந்திருந்த பீப்பாய்களை நீர் வீழ்ச்சியில் ஒவ்வொன்றாகத் தள்ளி விட வேண்டும். இதற்கு ஏற்ற இடம் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி தான். கே.சாரங்கபாணியும், எம்.என்.ராஜமும் மிகவும் சிரமத்தோடு பீப்பாய்களைத் தள்ள வேண்டும். ஓரிரு பீப்பாய்களை அங்கே தள்ளுவது போல் படமெடுத்த பின், ஸ்டுடியோவில் அதற்கு "மேட்சிங்காக' செட் போடப்பட்டது. அங்கிருந்து பீப்பாய்களை உருட்டுவது போலக் காட்சி அமைக்கப்பட்டது. ஏ.ஜே.டோமினிக் போட்ட செட்டுடன், ஒரிஜினல் நீர்வீழ்ச்சியை இணைத்து அருமையாகப் படப்பிடிப்பை நடத்தினார் சுப்பாராவ். படத்தை முடித்த பிறகு போட்டுப் பார்த்தவுடன் எல்லாருக்கும் பரம திருப்தி. அதே போல் படமும் மிகவும் நன்றாக ஓடியது .
http://i57.tinypic.com/wvsx8w.jpg
[The wordings appearing on the image is not part of the movie, you can find the logo changing in DVD's released by some other companies and the sub title will also disappear. Nevertheless, the Original movie does not consist the Logo and the sub title]
http://www.youtube.com/watch?v=EIeBwbOKWKQ
அலிபாபா ஒரு வெற்றிப்பாதையைக் காட்டியபினதானே [colour movie] .....வழிகாட்டி என்றும் மக்கள் திலகமே!
Thanks to Mr. Chandran Veerasamy, FB.
மீனவ நண்பன் சிறப்பு தகவல்கள் .
மக்கள் திலகம் நடித்த கடைசி சமூக படம் .
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த முதல் படம் .
இயக்குனர் ஸ்ரீதரின் இரண்டாவது மக்கள் திலகம் படம் .
மக்கள் திலகம் அதிக சம்பளம் வாங்கிய படம் [22லட்சம் ]
14.8.1977 அன்று வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய படம் .
கடற்கரை மணலில் மக்கள் திலகம் - நம்பியார் மோதும் கத்தி சண்டை அருமை .
மக்கள் திலகத்துடன் நம்பியார் - வீரப்பா -வி.கே . ராமசாமி - வெண்ணிற ஆடை நிர்மலா - தேங்காய் ஸ்ரீனிவாசன் - நாகேஷ் - சச்சு ஆகியோர் நடித்த படம் .
நேருக்கு நேராய் வரட்டும் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் .
பட்டத்து ராஜாவும் -- பட்டாள சிப்பாயும் .. பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் வெகு சிறப்பாக இருந்தது ,
பொங்கும் கடலோசை பாடலில் வாணிஜெயராமின் குரல் தேனமுது .
கண்ணழகு சிங்காரிக்கு - காதல் பாடலில் மக்கள் திலகம் - லதா ஜோடி சூப்பர் .
தங்கத்தில் முகமெடுத்து ... சந்தனத்தில் .. கனவு பாடல் விழிகளுக்கு விருந்து .
நேரம் பௌர்ணமி ..நேரம் - மனதை கொள்ளை அடித்த பாடல் .
மெல்லிசை மன்னரின் இசை - மிகவும் அருமை .
ஒரு நல்ல பொழுது போக்கு படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - சண்டை காட்சிகள்
ரசிகர்களுக்கு விருந்து .
இன்று படம் பார்த்தாலும் புத்தும் புது படம் போல் மனதிற்கு நிறைவு தரும் படம் - மீனவ நண்பன் .
மக்கள் திலகம் தன்னுடைய 60 வயதில் இளமை சுறுசுறுப்புடன் , எழிலான தோற்றத்தில் படம் முழுவதும் ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த படம் .
நல்ல கருத்துக்களுடன் - வசனத்துடன் - இயக்குனர் ஸ்ரீதரின் கை வண்ணத்தில் வந்த வெற்றி காவியம் '' மீனவ நண்பன் '' - மக்கள் திலகத்தின் வைர கிரீடம் . ரசிகர்களுக்கு அமுத சுரபி .
THANKS ROOP SIR
http://i61.tinypic.com/106el21.jpg
1974 அலையோசை’ பத்திரிகை வேலையை விட்டு விலகியிருந்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு எதிராக செய்திகளை வெளியிட ஆரம்பித்திருந்ததால் அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் முத்துலிங்கம். ஒரு நாள் தற்செயலாக புரட்சித்தலைவரை பார்க்க தி.நகர் ஆற்காட் ரோட்டிற்கு வந்திருக்கிறார். (இப்போது அது எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகியிருக்கிறது) அன்று வீட்டிலிருந்த குஞ்சப்பன் என்பவர் முத்துலிங்கம் வந்திருக்கும் தகவலை இண்டர்காம் மூலம் மாடியிலிருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கிறார். உடனே போனில் முத்துலிங்கத்திடம், அலையோசையிலிருந்து விலகியது பற்றி “விஷயத்தை கேள்விபட்டேன் முத்துலிங்கம் குஞ்சப்பணிடம் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோ” என்று சொல்ல, “இல்லைங்க தலைவரே எனக்கு பணம் வேண்டாம் வேலை கொடுங்க.” (பாடல் எழுதும் பணி) என்று கவிஞர் சொல்கிறார். “வேலை குடுக்கும்போது குடுக்குறேன் இப்ப பணத்தை வாங்கிக்க.” இது தலைவர். “இல்லங்க தலைவரே வேலை தான் வேணும் பணம் வேண்டாம். நான் புறப்படுறேன்.” என்று சொல்லி விட்டு கிளம்புகிறார் முத்துலிங்கம். அவர் காலத்தில் புரட்சித்தலைவரிடம் உதவி பெறாத கட்சிக்காரர்களே இல்லை எனலாம். ஆனால் எம்.ஜி.ஆரிடமே வாங்க மறுத்த மாண்பு கவிஞருக்கு மட்டுமே உண்டு. இந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்த எம்.ஜி.ஆர். முதல்மைச்சராக வந்த பிறகு அந்த ஆண்டின் பாவேந்தர் பாரதிதாசன் விருதை முத்துலிங்கத்திற்கு வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய எம்.ஜி.ஆர். தி.நகர் சம்பவத்தை குறிப்பிட்டு, “உழைக்காமல் யாரிடமும் பணம் வாங்கக்கூடாதுனு சுயமரியாதையோடு இருக்கும் முத்துலிங்கத்திற்கு பாரதிதாசன் விருதை கொடுப்பதுதான் பொருத்தமானது.”
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.
“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார் கவிஞர். இவரின் இன்னொரு சிறப்பு, வாலி ஒரு கவிதையையோ, கட்டுரையையோ எழுதி முடித்தவுடனேயே அதை படித்து காண்பிப்பது முத்துலிங்கத்திடம் தான். அத்தனை இலக்கியச் செழுமையுள்ளவர்.