BRILLIANCE, THY NAME IS SHIVAJI GANESAN!!!!!!!!!!!Quote:
அன்பு முரளி சார்,
'பாலாடை' ஆய்வு மூலம் என்னை பரவசப்பட செய்து விட்டீர்கள். அதற்காக என் நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள். யாருக்கும் அதிகம் தெரியாத ஏன் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கூட சற்று ஒதுக்கி வைத்த காவியம் அது. என்னுள்ளே பல அதிர்வுகளை எப்போதும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் படம். நீங்கள் குறிப்பிட்டது போல அந்த கனவுக் காட்சியை நம்மவர் விவரிக்கும் காட்சி. ஒரு கோடி ஆண்டுகள் என்ன... உலகம் உள்ளவரை எந்த நடிகரும் நெருங்க இயலாத, எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத நடிப்பில் பிரளயம் ஏற்படுத்திய காட்சி. உலக உச்ச நடிகர்கள் முதல் சொச்ச நடிகர்கள் வரை அனைவரும் கைகட்டி வாய் பொத்தி குருகுல பாடம் படிக்க வேண்டிய உன்னதமான காட்சி. பொதுவாக கனவு கண்டவர்கள் அதை விவரிக்கத் தெரியாமல் திண்டாடுவார்கள். இது கண்கூடு. ஆனால் கனவே காணாமல் உண்மையாகவே கனவு கண்டது போல் தன் நிலை முழுவதும் மறந்து, தான் கண்ட கனவில் வரும் அந்த குழந்தையை, அந்தக் குழந்தையின் செய்கைகளை, அந்த செய்கைகளினால் தனக்கேற்படும் உணர்வுகளை அந்தக் காட்சியில் அவர் விவரிக்கும் விதம்... அந்தக் குழந்தை கைதட்டுவது போலவே தன் கைகளைத் தட்டி (கொட்டி) காண்பிப்பார் பாருங்கள்! "பளிச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்தான்... அந்த எச்சிலெல்லாம் பட்டு என் ரத்தம் மறைஞ்சு போச்சு"... என்று தன் கைவிரல்களால் வாயோரம் துடைத்துக் கொள்ளும் அந்த பாவனை... "எனக்குத்தான் குழந்தையே இல்லையேப்பான்னு சொன்னேன்...உடனே அவன் என் கழுத்த விட்டுட்டு அய்யய்யோ... உங்களுக்கு குழந்தையே இல்லையா?... உங்களுக்கு குழந்தையே இல்லையா?" என்று குழந்தை கூறுவது போல கைகளைத் தட்டும் போது அங்கு நடிகர் திலகத்தைக் காண முடியாது. அச்சு அசலாக அந்த குழந்தையைத்தான் காண முடியும்...
என்ன ஒரு ஆண்டவனின் படைப்பு!...
ஆண்டவனே ஆச்சரியப்பட்ட படைப்பு!...
முரளி சாரின் அற்புத 'பாலாடை' கட்டுரை ஆய்வுக்காக அடியேனின் அன்பு பரிசாக
முதன் முதலாக இணையத்தில் அந்த ஆகர்ஷிக்கும், கலையுலக ஆண்டவர் ஆட்சி செய்யும் கனவை விவரிக்கும் கலக்கல் சீன்.
http://www.youtube.com/watch?feature...&v=mg_uN7jsLZU
அன்புடன்,
வாசுதேவன்.
anm