-
1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா?
இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று.
நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை.
சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்குதல், கொள்ளை, போர் என படம் நீண்டாலும்.. சுபமாய் முடிகிறது. கருப்பு எம்.ஜி.ஆர். போல தமிழ் தெரியாதவர்களிடமும் பேசியே திருத்தி விடவில்லை வாத்யார். அனைவரிடமும் இரக்கத்தைக் காட்டி, எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற அணுகுமுறையால் அனைவராலும் ஏகமனதாக தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார் (இவரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்பவரோ.. நாலு பேரைக் கொன்றும், வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேன்ட் போட்டதும் தலைவனாகிவிடப் பார்க்கிறார்).
தொலைகாட்சியில் மட்டுமே பார்த்திருந்த எம்.ஜி.ஆரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் தவறவிடக்கூடாது. சமகால அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்றளவும் ‘வாத்யார்’ ஏன் திகழ்கிறார் என்பதற்கான பதிலையும் தியேட்டரில் பெறலாம்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவிற்கு தமிழில் இது மூன்றாவது படம். அப்பொழுது அவரது வயது பதினேழுதான். கண்டதும் காதலில் விழும் பாத்திரம்தான். அன்று போல் இப்போ எல்லாம் கண்டதும் காதலில் நாயகிகள் விழாவிட்டாலும்.. காதலிக்கப்படவும் பாடலில் நடனம் புரிய மட்டுமே நாயகிகள் என்ற நிலைமை இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.
படத்தில் அனைவரும் அழகாகத் தோன்றுகிறார்கள். முக்கியமாக நாயகன் நாயகிக்கு நிகராக ஜொலிக்கிறார் எம்.என்.நம்பியார். அவர் நாயகியை முதல் முறை பார்க்கும் பொழுது தரும் ரியாக்ஷனைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதைக் காணவே எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். ஒரு காட்சியில், “நஞ்சப்பா.. சந்தோஷத்தில் உன்னை உதைக்க வேண்டும் போலிருக்கிறது” எனச் சொல்லி ரசிக்க வைக்கிறார். புதுமண ஜோடியான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும், “நல்லா வாழுங்க” என ஆசிர்வதிக்கும் இடத்தில் அவர் முகத்தில் காட்டும் வெறுப்பபும் ஏமாற்றமும் ரசிக்க வைக்கிறது. இப்படி நம்பியார் திரையில் தோன்றினாலே சுவாரசியம் களைகட்டுகிறது. நம்பியார் அளவுக்கு சர்வதிகாரியாக நடிக்கும் ஆர்.எஸ். மனோகருக்கு படத்தில் அதிக வேலையில்லாமல் போய்விட்டது.
“ஆமாண்ணே.. நீங்க சொல்வது சரிதான். திருடன்கிட்டயே திருடுறதுதான் சரி” என அழகனாக நடிக்கும் நாகேஷ், மணிமாறன் பாத்திரத்தை பிரமோட் செய்வதையும் மீறி நகைச்சுவையில் கலக்குகிறார். நாயகியின் தந்தை செங்கப்பராக நடிக்கும் ராமதாசும் சிறப்பாக நடித்திருப்பார். அவரது அறிமுகக் காட்சியில் தனது மகளைப் பார்த்துச் சொல்லுவார், “நீ 1000 அடிமைகளுக்கு சொந்தக்காரியாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனச் சொல்வார்.
இந்தப் படத்தின் இறவாப் புகழுக்கு பாடல்களும் மிக முக்கியக் காரணம். ஏழு பாடல்களுமே செம ஹிட். “அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும்..” என்ற பாடலை ரசிக்காதவர் எவரேனும் உண்டா? ஏனோ இந்தப் படத்தோடு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை பிரிந்தது தமிழ் சினிமாவின் கெட்ட நேரம் என்றே சொல்ல வேண்டும்.
சேதமடைந்துவிட்ட பிக்சர் நெகட்டிவை, இரண்டு வருட கடும் உழைப்பின் மூலமாக டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் மூலம் தரம் குறையாமல் படத்தை நவீனமயமாக்கியுள்ளனர். திவ்யா பிலிம்ஸின் இந்த மகத்தான முயற்சியை நன்றியுடன் நாம் வாழ்த்தியே தீர வேண்டும். எம்.ஜி.ஆர். இல்லா விட்டாலும் அவரது படத்திற்கான தொழில்நுட்ப வேலைகள், அவரது மேற்பார்வையில் நடந்ததுபோலவே சிறப்பாக நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy - indli -net
-
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றெ மறப்பது நன்று"என்ற திருவள்ளுவர் வாக்கை மெய்ப்பித்திருக்கும் என் அன்பு சகோதரர்,... "கலைவாணர் "அவர்களின் அன்புச்செல்வன் திரு Nallathambi Nsk அவர்கள் "புரட்சி தலைவரு"டனான நினைவுகளை பகிந்துள்ளார் .இவர் போன்ற நல்ல உள்ளங்கள் சிலர் இருப்பதால்தான் "சிறிதளவு "மழையாவது பொழிகிறது போலும________
http://i62.tinypic.com/4v5po6.jpg
-
http://i57.tinypic.com/fkpdlf.jpg
திரு.கோகுலம் பிரவீன்(தொழிலதிபர்) அவர்களுக்கு திரு.லக்ஷ்மன் எம்.ஜி.ஆர் விருது வழங்குகிறார் அருகில் திரு.ராஜ்குமார்
-
http://i59.tinypic.com/2eumjhu.jpg
திரு.கோகுலம் பிரவீன்(தொழிலதிபர்) அவர்களிடமிருந்து திரு.லோகநாதன் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.லக்ஷ்மன்
-
http://i61.tinypic.com/24l4tj8.jpg
திரு.லக்ஷ்மன் அவர்களிடமிருந்து திரு.திண்டுக்கல் மலரவன் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார்
-
http://i59.tinypic.com/4ha9te.jpg
திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.தேனீ ராஜதாசன் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் மற்றும் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்
-
http://i57.tinypic.com/1zgarv5.jpg
திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.தமிழ்நேசன்(மதுரை) எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார், திரு.சரவணன்(மதுரை) மற்றும் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்
-
-
-
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா
நான் தங்களுக்கு அனுப்பிய pm படித்துவிட்டு உடனடியாக அந்த பதிவை நீக்கியதற்கு மிக்க நன்றி .இனி மக்கள் திலகம் திரியில நேர்மறையான பதிவுகளை மட்டும் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன் .வாழ்த்துக்கள் .