http://i1170.photobucket.com/albums/...pse4d5ba35.jpg
கள்ளம் கபடம் ஏதுமில்லை, உனது பக்தனாய் வாழ்வதை காட்டிலும் என் பிறப்பின் சிறப்பு ஏதுமில்லை...
என்றும் இதய தெய்வத்தின் பக்தனாக!!
Printable View
http://i1170.photobucket.com/albums/...pse4d5ba35.jpg
கள்ளம் கபடம் ஏதுமில்லை, உனது பக்தனாய் வாழ்வதை காட்டிலும் என் பிறப்பின் சிறப்பு ஏதுமில்லை...
என்றும் இதய தெய்வத்தின் பக்தனாக!!
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கலியபெருமாள் வினாயகம் சார். தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
RIKSHAKARAN - 29-5-1971
TITLE SCENE
http://youtu.be/Bn0wV8MlbLY
SUPER SCENE
http://youtu.be/ru4suXRUs2E
SUPERB FIGHT WITH MANOHAR
http://youtu.be/iPQXBBV5mhc
MAKKAL THILAGAM MGR TALENT
http://youtu.be/GUrjGcbFY5w
MAKKAL THILAGAM - EYE FEAST
http://youtu.be/LAjSMlBp6Ew
மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த படம்'' ரிக்ஷாக்காரன் ''
1971 ஆண்டு வந்த ரிக்ஷாக்காரன் , முந்தைய ஆண்டுகளில் வந்த
1970- மாட்டுக்காரவேலன்
1969- அடிமைப்பெண்
படங்களின் சாதனைகள் அத்தனயும் முறியடித்த படம் .
சென்னை நகரில் முதல் முதலாக ரூ 15 லட்சம் வசூல் பெற்று சாதனை .
தேவி பரடைஸ் அரங்கில் முதன் முதல் 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து
142 நாட்கள் ஓடி சாதனை .
தென்னகமெங்கும் வசூல் புயல் கிளப்பிய படம் .
சத்யா மூவிஸ் தயாரிப்பான "ரிக்ஷாக்காரன்" படத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்") பெற்றார். எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் நடித்தார்.
"குமரிக்கோட்டம்", கோவை செழியனின் "கேசி பிலிம்ஸ்" தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். சொர்ணம் வசனம் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத் தார். டைரக்ஷன் ப.நீலகண்டன். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த "ரிக்ஷாக்காரன்" வரலாறு படைத்த படமாகும்.
படித்த இளைஞன் ஒருவன், ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண் முகம் எழுத, டைரக்ஷனை எம். கிருஷ்ணன் கவனித்தார்.
இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், "சோ", ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.
29_5_1971_ல் வெளிவந்த "ரிக்ஷாக்காரன்" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில் வாலி இயற்றிய, "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு", "பொன்னழகை சிந்தும் பெண்மை", "ஆணிப்பொன் தேர்கொண்டு", "கடலோரம் வாங்கிய காற்று", அவிநாசிமணி எழுதிய "கொல்லிமலை காட்டுக்குள்ளே" ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.
சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, "பாரத்" விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.