என் உணர்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரர் லோகநாதன்.
எப்படி எல்லாம் புரட்சித் தலைவர் பற்றி பொய்கள். நெற்றிக்கண் படத்திலே ரஜினி காந்த் போட்டிருக்கும் கண்ணாடி மாதிரி புரட்சித் தலைவர் போட்டிருக்கும் கூலிங் கிளாசும் பிறர் ஆடையை ஊடுருவி உடலை காட்டும் என்று கூட கூசாமல் அந்தப் படம் வந்தபோது வதந்திகளை பரப்பினார்கள்.
புரட்சித் தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார் என்றார்கள். அளவு மீறினால் குடல் வெந்துவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் சாப்பிடுவதில்லை என்று புரட்சித் தலைவரே மறுத்திருக்கிறார்.
ராத்திரியில்தான் படப்பிடிப்பை வைத்துக் கொள்வார் என்று ஒரு காலத்தில் எழுதினார்கள். பகல் வேளையில் அவர் நடித்த காட்சிகள் படத்தில் வரவே இல்லையா? மற்ற நடிகர்கள் இரவில் நடித்ததே இல்லியா? அப்பிடியே ராத்திரியில் நடிச்சாலும் படம் எடுக்கும் டைரக்டர் கேமராமேன் லைட்பாய் கலைஞர்கள் தொழிலாளர்கள் கண் முன்னாடிதானே நடித்தார்? இதில் என்ன மர்மம் இருக்கின்றது?
ராத்திிரி படப்பிடிப்பு நடக்கின்றபோது யாரையும் அனுமதிக்க மாட்டார், அதுக்காகத்தான் இரவில் படப்பிடிப்பை வைத்துக் கொண்டார் என்றால் அதை பகலிலேயே செய்ய முடியும். பகலிலேயே அவரால் யாரையும் அனுமதிக்காமல் படப்பிடிப்பை நடத்த முடியும். என்ன மூளைடா சாமி?
மறைந்தும் 30 வருசம் கழிச்சும் அந்த நல்லவரை பற்றி இன்றும்கூட மோசமாக எழுதுகின்றார்கள்.
அதுவும் புரட்சித் தலைவருக்கு வெற்றிதான். எதாவது அவரைப் பற்றி எழுதினால்தான் பத்திரிகைகளுக்கு பிழைப்பு நடக்கிறது. அந்த அளவுக்கு இன்னும் அவருக்கு மவுசு இருக்கிறது. அந்த மவுசு என்னிக்கும் குறையாது. நீங்கள் போட்ட பத்திரிகை பதிவு பார்த்தேன். பாகுபலி படம் பற்றி எழுதினாலும் புரட்சித் தலைவரை சம்பந்தப்படுத்தி எழுதுகிறார்கள்.
ஊருக்கு உழைப்பவன் படத்திலே புரட்சித் தலைவரைப் பார்த்து தேங்காய் சொல்லுவார்.
‘பிரதர்.. உங்களிடம் ஒட்டறவனும் பொழைக்கிறான். திட்டறவனும் பொழைக்கிறான்’ என்பார்.
அப்படித்தான் சிலர் புரட்சித் தலைவரை திட்டி பிழைக்கிறார்கள். வேறுபாடு இல்லாமல் எல்லாருக்கும் தண்ணீர் குடுக்கும் மழை மாதரிி அந்த வள்ளலும் திட்டுகிறவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
புரட்சித் தலைவரின் படங்கள் பற்றிய மேலதிக புள்ளி விவரங்களுக்கும் தகவல்களுக்கும் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.