Veera Sivaji படப்பிடிப்பு தொடங்கியது
தகராறு படத்தை இயக்கிய கணேஷ்விநாயக் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் புதியபடம் வீரசிவாஜி. இந்தப்படத்தில்தான் அஜித்தின் மைத்துனி ஷாம்லி தமிழில் அறிமுகமாகிறார்.
இந்தப்படத்தின் தொடக்கவிழா இன்று புதுச்சேரியில் நடந்தது. தொடக்கவிழாவை அங்கு நடத்தக் காரணம்? தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். முப்பதுநாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
ரோமியோஜூலியட் படத்தைத் தயாரித்த நந்தகோபால் தயாரிக்கிறார். இன்று நடந்ததொடக்கவிழாவில் நடிகர்பிரபு மற்றும் ஷாம்லியின் தந்தை உட்பட பலர் கலந்துகொண்டார்களாம். தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாம். ஷாம்லி நடித்துக்கொண்டிருக்கிறார்.