பாசமலர் பம்மலார் சார்,
தங்கள் அன்பும், பாசமும், உச்சப்பாராட்டுகளும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இந்த அளவுக்குப் பாராட்டிவிட நிச்சயம் நான் ஒன்றும் செய்து விட வில்லை. தங்களுடைய உயரிய பண்பான அன்புப் பாராட்டுதல்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் கோடி. பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் மனம் மகிழ்ந்த நன்றிகள்.
'தங்கப்பதுமை' தென்றல் முதல் வெளியீட்டு விளம்பரம் அபாரப் பதிவு. (இந்த மாதிரி அரிய இதழ்களை சேகரிக்க எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள் என்றெண்ணும் போது மலைப்பாக இருக்கிறது).
ஆனந்தவிகடனின் 'தங்கப்பதுமை' விமர்சனம் அரிய பதிவு. வெகு நாட்களுக்குப் பிறகு பலபேரை இப்போது படித்து சுவைக்கச் செய்தததற்கு ஆத்மார்த்தமான நன்றிகள். அது தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.
தங்கப் பதுமை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட வெற்றிகளை அழகான குறிப்புகளாய் அளித்து அசத்தியதற்கு அருமை நன்றிகள்.
அன்பு பார்த்தசாரதி சாருக்கு தாங்கள் எழுதியுள்ள பதிவில் தங்கள் தாயாரைப் பற்றிக் குறிப்பிட்டு கூறியிருந்தது கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த சுந்தரித்தாய் எங்களுக்கும் அன்புத் தாய்தானே! அவர்கள் இப்படி ஒரு முத்தைப் பெற்றெடுத்து எங்களுக்குக் கொடுத்ததற்காக காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள் அல்லவா! அவர் ஈன்றெடுத்த அந்த நன்முத்து மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கிக் கொண்டு, நடிகர் திலகத்தின் புகழ் வெளிச்சத்தை உலகுக்கெல்லாம் பரவச் செய்து கொண்டிருப்பதையே தன் தலையாய கடமையாய் நினைத்து, அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறதே ! அப்படிப்பட்ட அந்த முத்தான முத்தை உலகுக்களித்த அந்த தியாகத் தாய்க்கு என்றும் எங்கள் அன்பு அஞ்சலியை செலுத்திக் கொண்டே இருப்போம். த(எ)ங்கள் தாயின் நினைவாக இதோ ஓர் அற்புதப் பாடல் நம் தெய்வமகனின் வாயிலாக.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ufj9Lr0D6pA
அன்புடன்,
வாசுதேவன்.