டியர் சந்திரசேகர் சார்,
விழா இனிதே நடைபெற நம் இறைவனை (nt)வேண்டிகொள்வோம்.
Printable View
டியர் பம்மலார் சார்,
பூப்பறிக்கவருகிறோம் Stills அருமை, நான் என் மனைவியுடன் பார்த்த இரண்டாவது திரைப்படம்.
இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
டியர் முரளி சார்,
தங்களுடைய பதிவினை தினமும் எதிர்பார்க்கும் பல ரசிகர்களில் அடியேனும் ஒருவன். தினமும் எழுதுங்கள். ஒரு வார்த்தையாவது எழுதுங்கள். தங்களின் ஒரு வார்த்தை ஒரு லட்சம்.
டியர் முரளி சார்,
நானும் இதை ஆமோதிக்கிறேன், ராகவேந்தர் சார் குறிப்பிட்டதை போல தினமும் தங்கள் கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன்.
Quote Originally Posted by HARISH2619 View Post
DEAR MURALI SIR,
Your write up on the interaction with our satish sir was simply superb.please try to add atleast one post everyday so that we will not feel like missing you for a long time.
யெஸ்....
இதுபோல, நண்பர் பார்த்தசாரதி சாரும் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்.
டியர் பார்த்தசாரதி சார்,
என்ன ஆச்சு? உங்கள் பதிவுகள் எதுவும் இல்லையே? அதிக வேலைபளுவோ???
டியர் வாசுதேவன் சார்,
பூப்பறிக்க வருகிறோம் stills அருமை!!! நடிகர்திலகத்தின் பல்வேறு முகபாவங்களை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்
மிக்க நன்றி!!!
டியர் ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி !
டியர் வாசுதேவன் சார்,
"பூப்பறிக்க வருகிறோம்" ஆல்பம் மிக அருமை !
டியர் சந்திரசேகரன் சார்,
லைப்ரரி பாராட்டுக்கு லைஃப்டைம் நன்றிகள் !
சிறப்பு அன்னதான விழா சிறந்த முறையில் நடைபெற செழிப்பான வாழ்த்துக்கள் !
டியர் mr_karthik,
சாதாரண மனிதனான என்னை 'ஜீபூம்பா' பூதமாக்கிய தங்களுக்கு என்ன சொல்லி நன்றி தெரிவிப்பது !
ஓகே, "காசே தான் கடவுளடா" தேங்காய் பாணியில் 'தேங்க்ஸ் ஆயதே நமஹ !! பூதப்பிரசாத சித்திரஸ்து !!!'
டியர் anm,
மிக்க நன்றி !
தங்களின் திருப்பெயர் 'ஆனந்த்' என்றதும் வசந்த மாளிகை 'ஆனந்த்' நினைவுக்கு வந்துவிட்டார்.
டியர் ஜேயார் சார்,
மலரும் நினைவுகளுக்கு மனமார்ந்த நன்றி !
[ராகவேந்திரன் சார், நன்றி ! நன்றி !]
அன்புடன்,
பம்மலார் என்கிற பம்மல் ஆர்.சுவாமிநாதன் என்கிற ஜீபூம்பா [உபயம் : mr_karthik].
டியர் ராகவேந்தர் சார்,
உயர்ந்த மனிதன் விழாவில் உரையாற்றிய அப்போதைய மத்திய அமைச்சர் திரு ஒய்.பி.சவாண் அவர்களின் சென்னை நிகழ்ச்சிகளைப் பற்றிய பதிவை கண்டேன், என்ன செய்வது? மேடையில் இப்படி புகழ்பவர்கள் ntஅவர்களுக்கு இறுதி வரை தேசிய சிறந்த நடிகர் விருது வழங்க முயற்சி எடுக்க வில்லை என்பது வருந்ததக்கது.
ராகவேந்தர் சார், சந்திரசேகர், செந்தில், கார்த்திக் மற்றும் ராதாகிருஷ்ணன்,
உங்கள் அனைவரின் அன்புக்கும் என் மனங்கனிந்த நன்றிகள். எழுத வேண்டாம் என்பதில்லை. இந்த திரியில் தினசரி நான் [மட்டும்] எழுதிக் கொண்டிருந்த காலமெல்லாம் இருந்தது. ஆனால் இன்று தங்களின் அருமையான பங்களிப்புகளை தர இப்போது பலர் இருக்கிறார்கள். செவிக்குணவு இல்லாத போதுதானே வயிற்றுக்கு ஈய வேண்டும். இங்கே பலமுறை சொன்னது போல அலுவலகத்தில் ஹப் பார்க்க முடியாது. இரவில் கிடைக்கும் ஒன்றோ அல்லது இரண்டு மணி துளிகளில் படிப்பதையும் பதிவிடுவதையும் செய்ய வேண்டும் என்பதால் சில நேரங்களில் எழுத முடியாமல் போய் விடுகிறது. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அனைவருக்குமாக ஒரு பெரிய பதிவு பின்னாலே வருகிறது.
அன்புடன்
என் பதிவையும் பூப் பறிக்க வருகிறோம் ஸ்டில்ஸ்-ஐயும் பார்த்துவிட்டு எல்லோரும் [சுவாமி தவிர] நமது நண்பர் ராகேஷ் [Groucho] அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க மறந்து விட்டீர்கள். எனவே உங்கள் எல்லோரும் சார்பாகவும் ராகேஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part I
இங்கே ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் திலகத்தின் படங்களுக்கு 70-களின் தொடக்கத்திலிருந்து விகடனின் விமர்சனங்கள் எதிர்மறையாக எழுதப்பட்டதை சுட்டிக் காட்டியிருந்தார் சுவாமி. நான் அதை பற்றி எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை பற்றிய செய்திகளுக்கு செல்லும் முன் அன்றைய காலகட்டத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது. இந்த திரிக்கு இது ஒரு Digression என்றாலும் அதை எழுதினாலே இதன் பின்னணியை புரிந்துக் கொள்ள முடியும் என்ற வகையில் இதோ.
நான் எழுதப் போகும் விஷயங்களில் நமது திரியின் நாயகன் நடிகர் திலகம் இடம் பெறப் போவதில்லை. மாறாக இரண்டு நபர்கள் தங்கள் பரஸ்பர தேவைகளுக்காக செயல்பட்டது எப்படி அதில் எந்த பங்கும் இல்லாத நடிகர் திலகத்தின் படங்களை பாதித்தது [அதாவது மக்கள் மத்தியில் படத்தைப் பற்றி ஒரு நெகடிவ் கருத்தை உருவாக்கியது] என்பது பற்றிய பதிவே இது.
ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் ஒரு தேசியவாதி. காங்கிரஸ் பேரியக்கத்தை பெரிதும் ஆதரித்தவர். 1967 தேர்தலின்போது கூட தி.மு.க.கூட்டணியை எதிர்த்து தன் பத்திரிக்கையில் எழுதியவர். அந்த தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 1968-ல் சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் சில பணிகளை [அலங்கார ஊர்திகள் முதலியன] அன்றைய அரசாங்கம் அவரிடம் ஒப்படைக்க அதை சிறப்பாக செய்து முடித்தார். விகடன் தவிர அவர் ஜெமினி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் என்பது அனைவரும் அறிந்திருப்பர். இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்கு முன்னர்தான் முதன் முறையாக தன் ஜெமினி நிறுவனம் சார்பில் எம்,ஜி,ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். அப்போதுதான் பிற மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்து அதில் நடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிட்டிமார்(?) என்ற இந்தி படம் குடியிருந்த கோயிலாக உருவாகி கொண்டிருந்தபோது பூல் அவுர் பத்தர் படத்தை வாங்கி ஒளிவிளக்கு என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்தார் வாசன். இயக்குனர் பொறுப்பை சாணக்கியாவிடம் ஒப்படைத்தார். தயாரிப்பு நிர்வாகத்தை வாசனின் புதல்வர் பாலசுப்ரமணியனும் [எஸ்.எஸ்.பாலன்] அன்றைய விகடன் இதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த மணியனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த இடத்தில் மணியனை பற்றி சொல்ல வேண்டும். 1950-களில் விகடனில் 13-வது உதவி ஆசிரியராக சேர்ந்த மணியன் நாளைடைவில் வளர்ந்து வாசனுக்கு மிகவும் நெருக்கமானார். கதைகள் எழுதிக்கொண்டிருந்தவரை வெளிநாட்டுகளுக்கு அனுப்பி வைத்து இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் எழுத வைத்தனர் வாசனும் பாலனும். அதன் மூலம் மணியன் அடைந்த வளர்ச்சி அபாரமானது. மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோம்.
ஒளிவிளக்கு எம்.ஜி.ஆரின் 100-வது படமாக 1968 செப்டம்பர்-ல் வெளியானது. ஏ.வி.எம். போல் ஜெமினியும் அந்த ஒரு எம்.ஜி.ஆர். படத்துடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் யாரை எப்போது எப்படி தனக்கு உதவிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர். மனியனுடனான உறவை தொடர்ந்தார். அது மணியனுக்கும் தேவையாய் இருந்தது. இது எந்தளவிற்கு இருந்தது என்றால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தினசரி மாலை வேலையில் மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்திற்கு செல்வதை மணியன் வழக்கமாக்கி கொண்டிருந்தார். [மணியனே எழுதியுள்ளபடி அங்கே அவர் சென்றவுடன் இருவருக்கும் பாசந்தி மற்றும் முந்திரிப்பருப்பு பக்கோடா வருமாம். தினசரி அதை சாப்பிட்டதனால்தான் உங்கள் உடல் மிகவும் பெருத்து விட்டது என்று மணியனின் மனைவி திருமதி லலிதா மணியன் அவரை கிண்டல் செய்வாராம்] இந்த பரஸ்பர புரிதல் காரணமாக அடுத்து வெளிவந்த எம்.ஜி.ஆரின் படங்களான அடிமைப் பெண், நம்நாடு போன்ற படங்களுக்கு விகடனின் விமர்சனம் உறுதுணையாய் இருந்தது.
இப்படி இருந்த நேரத்தில் 1969 ஆகஸ்ட் 26 அன்று எஸ்.எஸ்.வாசன் காலமானார். ஆசிரியர் பொறுப்பு பாலனின் மேல் விழுந்தது. ஆனால் எப்போதும் இது போன்ற பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டிய பாலன் பெயரளவில் தான் ஆசிரியராக இருந்துக் கொண்டு பத்திரிக்கையை நடத்தி செல்லும் முழுப் பொறுப்பையும் மனியனிடம் கொடுத்து விட்டார். மணியன் வைத்ததுதான் சட்டம் என்றாகிப் போனது.
இந்நிலையில் எம்.ஜி.ஆருடனான நட்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் மணியன். அவரிடம் சென்று விகடனில் ஏதாவது எழுதும்படி கேட்டுக் கொள்ள முதலில் மறுத்த எம்.ஜி.ஆர். பின் அதைப் பற்றி யோசிக்க தொடங்கினார். அன்றைய நாளில் பிரபலமான வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அவை குமுதம், விகடன், கல்கி, தினமணி நாளிதழின் ஞாயிறு பதிப்பாக வெளிவந்துக் கொண்டிருந்த தினமணி கதிர், கல்கண்டு மற்றும் ராணி ஆகியவை ஆகும். இவற்றில் எந்த இதழுமே எம்.ஜி.ஆர் ஆதரவு இதழ் கிடையாது. இவற்றில் கல்கண்டு மற்றும் கதிரை ஒதுக்கி விடலாம். கல்கிக்கு குமுதம், விகடன் போல் reach கிடையாது. ராணி தி.மு.க. ஆதரவு இதழாக இருந்தபோதினும் சந்திரோதயம் படத்தின் மூலமாக சி.பா. ஆதித்தனாரோடு ஏற்பட்ட பிணக்கு முற்றிலுமாக தீராத நேரம். மிச்சம் இருப்பது குமுதம் மற்றும் விகடன் மற்றுமே. இதில் குமுதம் நடிகர் திலகத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடிய இதழ். அது எந்தளவிற்கு என்பதை அரசு எழுதிய ஒரு கேள்வி பதில் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
கேள்வி இப்படி இருந்தது
ஒரே நேரத்தில் சிவாஜி படத்திற்கும் எம்.ஜி.ஆர். படத்திற்கும் ஓசி பாஸ் கிடைத்தால் நீங்கள் எதற்கு போவீர்கள்?
அதற்கு அரசு அளித்த பதில்
இரண்டையும் கிழித்துப் போட்டுவிட்டு சிவாஜி படத்திற்கு காசு கொடுத்துப் போவேன்.
நான் சொல்லும் இந்த பதில் 1973 - 74 காலக்கட்டத்தில்தான் வந்தது. ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பதோ 1970-ன் தொடக்கம். இருந்தாலும் கூட குமுதத்தின் stand எல்லாக் காலங்களிலும் எப்படி இருந்தது என்பதை வாசகர்கள் எளிதில் விளங்கி கொள்ளவே இதை குறிப்பிடுகிறேன்.
எனவே அன்றைய நாளில் பிரபலமாக விளங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையின் ஆதரவு தேவை என்பதை சிந்தித்துப் பார்த்த எம்.ஜி.ஆர். விகடனில் எழுத ஒப்புக் கொண்டார். அது மணியனின் master stroke -ஆக பத்திரிக்கை உலகில் பார்க்கப்பட்டது. எதைப் பற்றி எழுதுவது என்று ஆலோசித்த எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கை வரலாற்றையே நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் எழுத தொடங்கினார். 1970-ம் வருடம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெள்ளிகிழமையன்று தமிழ் புத்தாண்டு சிறப்பிதழாக வெளியான விகடன் இதழில் தொடர் ஆரம்பித்தது. இதற்கிடையில் 70 ஜனவரியில் வெளியான மாட்டுக்கார வேலன் படத்திற்கும் விகடனின் ஷொட்டு கிடைத்தது.
(தொடரும்)
அன்புடன்
தந்தை பெரியாருடன் கலையுலகத் தந்தை 'சிவாஜி'
http://i1094.photobucket.com/albums/...Periyar1-1.jpg
"பெற்ற மனம்(1960)" திரைக்காவியத்தின்
ஒரு காட்சியில் பெரியார் தோற்றத்தில் கலைப்பெரியார்
http://i1094.photobucket.com/albums/...EDC4611a-1.jpg
இன்று 17.9.2011 பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் 133வது பிறந்ததினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.