-
திரு வாசு சார்,
இந்திராவுடன் நடிகர்திலகம் அரிய புகைப்படம் அருமை,ஆண்டவன் கட்டளை ஷூட்டிங் ஸ்பாட் நிழல்படங்கள் மிகவும் இனிமை,நன்றி
-
நடிகர் திலகத்தின் பாடல்கள் வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருக்கும். இதை பல்வேறு பாடல்களை நாம் விவாதிக்கும் போது பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு பாடல் ஊரும் உறவும் படத்தில் இடம் பெற்றது நினைவு கூறும் வகையில் இங்கே நமக்காக. டி.எம்.எஸ்.ஸின் குரலில் சங்கர் கணேஷின் இசையில் அருமையான பாடல்.
http://youtu.be/Vt_qEyjAOWQ
-
டியர் ராகவேந்திரன் சார்,
அட... எதையோ நெனச்சி நமது திரியைப் பார்த்தால் ஊரும் உறவின் "அட எதையோ நெனச்சேன்...எதுக்கோ சிரிச்சேன்" பாடல் இருந்தது. இதுவரை 'ஊரும் உறவும்' பாடல் இணையத்தில் இல்லை. யார் தரவேற்றி இருப்பார்கள் என ஆவலுடன் you tube-ஐ open செய்து பார்த்தால் தாங்கள் முதன் முதலாக அந்த அர்த்தம் பொதிந்த பாடலை தரவேற்றியிருப்பது தெரிந்தது. இன்றுதான் தரவேற்றியுள்ளீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் தலைவர் ரிக்ஷாவில் ஜாலியாக, படு கேஷுவலாக பாடிக் கொண்டு வருவதை இந்த மழையில் பார்க்கும் போது அருமையாக இருந்தது. அருமையான பாடல். வித்தியாசமான கருத்து செறிந்த அபூர்வமான பாடலை தரவேற்றித் தந்தமைக்கு நன்றிகள்.
-
டியர் ராகவேந்திரன் சார், செந்தில் சார்,
தங்கள் அன்புப் பாராட்டுதல்களுக்கு நன்றி!
-
Friends, personal abuses are rearing its ugly head again.
இவரை அவர் மட்டம் தட்டுவதும், அவரை இவர் மட்டம் தட்டுவதும்... நிஜமாகவே அசிங்கமாக இருக்கிறது... நாமெல்லாம் படித்தவர்கள். ஏன் இப்படியெல்லாம் மற்றவர்களையும் அசிங்கப் படுத்தி, தானும் அசிங்கப் பட வேண்டும்? திரி சம்பந்தப் படாத மற்ற பதிவுகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது மற்றவர்களை புண்படுத்தாவண்ணம், ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வண்ணம் அனைவரும் ரசிக்கும் படி நகைச்சுவை இழையோட இருந்தால் தவறே இல்லை. எதற்கு வீண் சண்டைகள் சச்சரவுகள்? இதனால் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன? இதனால் திரிகளின் கௌரவம் காற்றில் பறக்கிறது என்பதுதான் உண்மை. நடிகர் திலகம் திரிகளின் மீது viewers பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகளைப் படித்து விட்டு என்ன நினைப்பார்கள்?
எனவே தயவு செய்து இது போன்ற தனிப்பட்ட மோதல்கள், கருத்துக்கள், கேலி, கிண்டல்கள் இல்லாதாவாறு பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் யார் மனத்தையும் புண்படுத்தவே வேண்டாம்.
-
-
டப்பிங் குரல் கொடுத்த நடிகர் திலகம்
http://i1087.photobucket.com/albums/...g?t=1351745593
நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்த தெலுங்கு நடிகர் முக்கமாலா அவர்கள் இவர்தான். 'நீதி' காவியத்தில் ஜெயலலிதா அவர்களின் தாத்தாவாகவும், 'துளிவிஷம்' படத்தில் நடிகர் திலகத்துடனும்,(இருவருக்கும் ஒரு கத்தி சண்டைக் காட்சியே உண்டு) 'தியாகம்' காவியத்தில் நடிகர் திலகத்தின் தாத்தாவாகவும் (பெரியதுரை) நடித்த பெருமைக்குரியவர்.
http://3.bp.blogspot.com/_BbJAArGDIE...0/IMG2013A.jpg
'தியாகம்' காவியத்தில் தெலுங்கு நடிகர் முக்கமாலா
http://i1087.photobucket.com/albums/..._004006396.jpg
'தியாகம்' காவியத்தில் நடிகர் திலகம், முக்கமாலா,
http://i1087.photobucket.com/albums/..._005630903.jpg
-
1962-இல் வெளியான நடிகர் திலகம் அவர்களின் அருமையான பேட்டி.
http://i1087.photobucket.com/albums/...g?t=1351747772
-
மேற்கண்ட பேட்டியில் நடிகர் திலகம் குறிப்பிட்டிருக்கும் 'வடிவுக்கு வளைகாப்பு' காவியத்தில் பாம்புடனான "தமிழ் நாட்டு கலையுலகின் திலகமே"பாடல் வீடியோ.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N0NH4iyPn_A
-