http://i46.tinypic.com/96avef.jpg
Printable View
http://i50.tinypic.com/2vxln9w.jpg
வெளிவராத படம் ஒன்றில்
article from dinamalar
துரை அனுமார்கோயில்படித்துறை காஞ்சிமடம், முதியோர் பராமரிப்பு இல்லத்தில், தனது 84 வது வயதிலும், நாடகத்தின் மீது தீராத பற்றும், காதலுமாய், எதிர்பார்ப்புகளுடன்
தனிமையாய் காத்திருக்கிறார், நாடக கலைஞர் கே.வி.ராமச்சந்திரன்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதியோடு இணைந்து நடித்த நாடகங்கள், ராஜாஜி, காமராஜரின் அரசியல் மேடை நாடகங்கள் மூலம் கலைகளை வளர்த்து பாராட்டுகளை பெற்றவர் "கலை கே.வி.ஆர்.,' என அழைக்கப்பட்ட கே.வி.ராமச்சந்திரன்.நாடக உலகில் கொடி
கட்டிப் பறந்த கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன், ஒய்.ஜி.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன் என அக்காலத்தில் புகழின் உச்சியில் இருந்த, 16 நாடக குழுக்களில் இடம் பெற்றிருந்த கே.வி.ஆர்., நினைவுகளை நம்முடன் அசைபோடுகிறார்.
அவர் கூறியது:1950ல் நாடக கம்பெனிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது, ஜி.சுப்பிரமணியம், கலைவாணர், எம்.ஜி.ஆர்., என சேர்ந்து நாடக குழுக்கள் அமைத்து நாடகங்களை அரங்கேற்றினோம். குழுக்களில் உள்ள அத்தனை தொழில் நுட்பங்கள் (மேக்கப், மேடை, அலங்காரம், சவுண்ட்) தெரிந்து, இவற்றுடன் நடிக்கவும் செய்தேன். இதுவரை ஆறாயிரம் மேடைகளில் நடித்துள்ளேன்.எம்.ஜி.ஆர்., உடன்நரசிம்மபாரதி, இன்பஜோதி, சந்தோஷம், விஸ்வம் நாடகங்களில் பங்கேற்றேன். நாடகங்களில் எம்.ஜி.ஆர்., அடிக்கடி சொல்லும் ஒரு டயலாக்... ""வார்த்தை நல்லா வரணும்... அபத்தம் கூடாது'' என்பார்.
தொழிலாளர்களிடம் அவர்காட்டிய அன்பு தான், அவரை முதல்வர் வரை உயர்த்தியது. சினிமா வாய்ப்பு அதிகம் வந்த போது எம்.ஜி.ஆர்., தனது நாடக குழுவை கலைத்தார். அப்போதுஎங்களைப் (டெக்னீஷியன்கள்) பார்த்து "நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்' எனக் கேட்டார். நாங்கள் உங்களை படங்களில்பார்க்கிறோம், என்றதும், அவரது கண்கள் கலங்கியது. குழுவில் இருந்த 12 பேருக்கு ஆளுக்கு ரூ.11 ஆயிரம் கொடுத்து உதவினார்.
இது அந்த காலத்தில் எங்கும் நடக்காத ஒரு அதிசயம்.சிவாஜியின் நாடககுழுவில் இருந்த என் தங்கை தாம்பரம் லலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த போது, முதல்வர் பதவியில் இருந்த எம்.ஜி.ஆர்., டாக்டரிடம் போன் செய்து, என் முன்னே, நன்றாக கவனிக்க சொன்னார். அதிகாரத்தில் இருந்த போதும் தன்னுடன் துவக்க காலத்தில் இருந்த சாமானியருக்காக உதவும் அவரது குணம் (கண் கலங்குகிறது) எந்நாளும் மறக்கமுடியாதது.
தமிழக முதல்வரின் தாய் சந்தியா பங்கேற்ற, நாடகங்கள் மற்றும்அண்ணாத்துரையின் சந்திரமோகன், சந்திரோதயம், நீதிதேவன் மயக்கம் நாடகங்களிலும் பணிபுரிந்துள்ளேன். அண்ணாதுரை எல்லா நாடங்களிலும் நடிக்கமாட்டார். காமராஜரின் அரசியல் மேடை நாடகங்களில் நடித்து அவரிடமும் பாராட்டு பெற்றேன். காமராஜர் "கலையை கொண்டு கட்சியில் சேர்க்க கூடாது' என கூறியது இன்றும் நினைவிருக்கிறது.இவ்வாறு கூறினார்.
இப்படி, 66 ஆண்டு நாடக கலைப் பயணத்தில், வரலாற்று புத்தகம் எழுதும் அளவிற்கு பல்வேறு ருசிகர தகவல்களுடன் தனிமையில் இருக்கும் கே.வி.ஆர்.,ன் வாழ்க்கை பயணம் இனிக்கவில்லை. குழந்தை பிறந்ததும் இறந்த மனைவி; 36 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் மகள், இப்படி சோகம் நிறைந்தாகவே உள்ளது. நாடக கலைஞர்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில் காலத்தை கடத்தும், இவரது இப்போதைய ஒரே ஒரு ஆசை "கலைமாமணி' விருது மட்டும் தான்.