http://i501.photobucket.com/albums/e...ps10172e49.jpg
Printable View
சிவாஜி 25
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
- மானா பாஸ்கரன்
ஆனந்த விகடன்
இறந்து போன தமிழ் திரை உலகை ஊயிர்பிக்க மீண்டும் பிறந்து வா
Nadigar Thilagam's birthday on Saraswathi Puja. What a pious coincidence. Saraswathi takes different Avataars, one is V.C.Ganesan.
What a privilege this bachaa Balu had to sing to SARASWATHI ! BLESSED AM I.
I was blessed to have his abundance of love, which continues to flow to our family from his family.
Anna is ETERNAL.
Long live the legacy of Sivaji Anna.
SPB Sir on his Facebook
சினிமாவிற்கு இன்று பிறந்தநாள்
இறவாபுகழ் பெற்ற நடுப்புச்செம்மலே!
உறங்காத நினைவுகளால் உள்ளங்களை ஆட்கொண்டீர்!
பறவையினம் போல் பரந்த மனம் கொண்டவரே! இனி
பிறந்துதான் வரவேண்டும் உம்மைப்போல் ஒருவர்!
காலத்தை வென்றவர் பலருண்டு! ஆனால்
ஞாலத்தில் கணேசனை வென்றவர் எவருண்டோ!
கோலத்தில் இட்ட புள்ளிகள் போன்று
நீலதிரகடலின் துரும்பு போன்று
நுண்ணிய நிகழ்வுகளையும் தெளிவாக தன்
பண்பட்ட நடிப்பாற்றலால் காட்டியவரே! உமது
கண்ணசைவில் நவரசங்களையும் அள்ளி வழங்கினீர்!
பெண்களின் நளினத்தையும் கண்முன் கொணர்ந்தீர்!
நேரம் தவராமையைத் தவமாக கடைபிடிதவரே!
பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியாரின் அன்பைபெற்றவரே!
பாரம்பரியமிக்க நாடககலை மூலம் கலைத்துறைக்கு வந்து
ஊரறிய உலகறிய கலைத்தாயின் தவபுதல்வனாநீர்!
கனல்தெரிக்கும் வசனங்களால் உமது புகழை
அனல்பறக்க செய்தீர்! ஆற்றுபெருக்கு போன்ற
நினைவாற்றல் உமது அற்புதசிறப்பு!
மனமென்னும் கோயிலில் தெய்வமென நின்றீர்!
ஏழு வயது முதல் கலைத்தாயின் மடியில் தவழ்ந்தீர்!
ஏழேழு பிறப்புக்கும் ஈடேற்ற இயலாத நடிப்பை தந்தீர்!
ராஜாமணி அம்மையாரின் மணிவயிறு விளங்கிடசெய்தீர்!
பார்போற்றும் கலைஞநாக இன்றும் வலம் வருகின்றீர்!
தெய்வங்களையும் அடியார்களையும் உமது நடிப்பால் செதுக்கினீர்!
மெய்வருத்தி பலவேடங்கள் புனைந்தீர்! வான்மழை
பெய்திட வளரும் பயிர்போல் உமது வருகையால்
உய்ந்திட்ட கலைஞர்கள் ஏராளம் ஏராளம்!
வாழ்க சிவாஜி புகழ்!!!!!!!!!!
By Shankar Muthuswamy
in SIVAJI GANESAN THE GREAT FB pg
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு இனிய சிவாஜி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
From the facebook
"நந்தகோபாலனோடு
நான் ஆடுவேனே!"
-என்று நளின பாவங்களோடு
நகைச்சுவை செய்த போது,
நாங்கள் அடைந்த மகிழ்வு..
"நலந்தானா" கேட்கும்
நாட்டியப் பேரொளிக்கு,
"நல்ல சௌரியம்" என்று
கண்களாலேயே
பதில் சொன்ன போது,
நாங்களடைந்த உற்சாகம்..
"மன்னவன் வந்தானடி"
பாடலில் நடக்கும்
ராஜநடை பார்த்து,
எங்கள் நடைக்கும் வந்த
கம்பீரம்..
"கை வீசம்மா" பாடி
பாசமலரில் அழுத போது,
நெஞ்சுக்குள் நிகழ்ந்த
நெகிழ்வு..
தன் தமிழில் குறை கண்ட
நக்கீரனிடம்
தர்க்கம் பேசும்
கோபத் தமிழிலும்
நாங்கள் கண்ட
இனிமை..
புன்னகை ஒளிரும்
அழகுதடுகள் அசைத்து
"அன்பாலே தேடிய"
பாடிய போது,
எங்கள் இதயம் பெற்ற
பேரமைதி..
விழி உருட்டி,
உடல் நிமிர்த்தி,
குரல் உயர்த்தி
வீரபாண்டிய கட்டபொம்மனாய்
"வெற்றிவேல்..வீரவேல்"
முழக்கமிட்ட போது
எங்களுக்கும் வந்த
உத்வேகம்..
அலைக்கழிப்புக்குப் பிறகு
சந்தித்த காதலியோடு
ஒரு வார்த்தை கூட
பேசாமல்,
சத்தமே இல்லாமல் துவங்கி,
பெருஞ்சத்தத்தோடு
சிரித்து முடிக்கும்
"நவராத்திரி" இறுதிக்காட்சியில்
நாங்கள் அடைந்த
சந்தோஷம்..
உடம்பு முழுக்க
அம்புகள் செருகிக் கிடக்க
தேர்ச் சக்கரத்தின் மேல்
சாய்ந்திருக்கும்
"உள்ளத்தில் நல்ல உள்ளம்",
எங்களுக்குத் தந்த
உருக்கம்..
"காவிரி தந்த
தமிழகத்துப் புது மணலில்.."
-என்று துவங்கி,
மடை திறந்த
வெள்ளமெனப் பாயும்
அழகுத் தமிழ் மேல்
நாங்கள் கொண்ட மயக்கம்..
கன்னக் குழி
கண்டிருக்கிறோம்.
அதிசயமான அதிசயமாய்
இடுப்பில் குழி விழ
எழிலாய்..மீனவனாய்
நடந்த போது,
எங்கள் இதயம்
துள்ளிய துள்ளல்..
கப்பலோட்டிய தமிழனாகவே
மாறி நின்ற போது,
எங்கள் உடல் பெற்ற
புல்லரிப்பு..
பரிசுகள், விருதுகளென்று
மேடையேறும் போதெல்லாம்
ரசிகர் பெருங்கூட்டம் உகுத்த
ஆனந்தக் கண்ணீர்..
"பராசக்தி"க்குப் பிறகு
திரையுலகம்
உங்கள் மேல் வைத்த..
"நீங்கள் இருந்தால்தான்
பராசக்தி" என
பெருமாள் முதலியார் எனும்
பெருமகனார் வைத்த..
நம்பிக்கை..
"சிவாஜி" என்று
எழுதினாலும்,பேசினாலும்,
நினைத்தாலும்,
நெஞ்சம் பெறுகிற
நிறைவு..
நிம்மதி..
-இவையத்தனையும்
எங்களுக்குக் கிடைத்தது
வெவ்வேறு காலங்களில்.
ஆனால்..
01.10.1928-என்கிற
தேடினாலும் கிடைக்காத
தெய்வீகத் திருநாளில்
பிறந்து,
அத்தனையையும்
ஒரே தினத்தில்
அன்னை ராஜாமணியாருக்குக்
கிடைக்கச் செய்தவரே..
வணங்குகிறேன்..
உங்கள் அவதாரத் திருநாளில்.