-
-
நடிகர் திலகம் நடிக்கவிருந்த 'தம்பி' படத்திற்காக உருவாக்கப்பட்ட T.M.S.அவர்களின் அற்புத கம்பீரக் குரலில் ஒலிக்கும் "துணிந்து நில்... தொடர்ந்து செல்" என்ற அருமையான பாடல் ஏ.வி.எம்.ராஜன் நடித்த 'பால்குடம்' படத்திற்காக பின்னாளில் உபயோகப் படுத்தப்பட்டது. அந்தப் பாடலைக் கேட்க லிங்க்
http://www.inbaminge.com/t/p/Paal%20...hunil.eng.html
-
வாசு அவர்களே,
வெளி வராத தம்பி படத்தின் செய்திக்கு நன்றி. இதை முன்னரே படித்திருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம். அந்த செய்தியோடு சேர்த்து வெளிவந்திருக்கும் புகைப்படம், அது அந்த படத்தின் ஸ்டில்லா? காரணம் செய்தியில் தேவிகா நடிப்பது போல் எழுதப்படவில்லை. தவிரவும் நடிகர் திலகத்தைப் பார்த்தால் 1967-க்கு முன்பு உள்ள தோற்றம் தெரிகிறது. 1967 என்று குறிப்பிட காரணம் மனிஜே தயாரித்த இரு மலர்கள் 45 வருடங்களுக்கு முன்னாள் இதே நாளில்தான் [01-11-1967] வெளியானது என்பது உங்களுக்கு தெரியும். பழைய படத்தின் ஸ்டில்-ஐயும் இந்த செய்தியையும் ஒன்றாக சேர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். [ஒரு வேளை ஞாயிறும் திங்களும் படத்தின் ஸ்டில் ஆக இருக்குமோ?]
அன்புடன்
-
அன்பு முரளி சார்,
நீங்கள் கேட்டிருந்த சந்தேகம் சரியே. 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' அக்டோபர் 2011 இதழில் வந்த புகைப்படமும் செய்தியும் தான் அது. நீங்கள் சொன்னது போல பழைய படத்தின் ஸ்டில்-ஐயும் இந்த செய்தியையும் ஒன்றாக சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கே நிச்சயமில்லாததால்தான் அந்த புகைப்படத்திலேயே 'வெளிவராத படமொன்றில் தேவிகா, சிவாஜி' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இல்லையென்றால் 'தம்பி' படத்தில் சிவாஜி தேவிகா என்று குறிப்பிட்டிருப்பார்கள். எனவே பெரும்பாலும் 'தம்பி' பட ஸ்டில்லாக இருக்க வாய்ப்பில்லை. சந்தேகத்தினால்தான் நானும் அந்த புகைப்படத்தின் மேல் வழக்கமாகக் குறிப்பிடும் படத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. நிச்சயமாக சந்தேகப்பட்டு யாராவது எழுதுவார்கள் என்று நினைத்த மாதிரியே நீங்கள் எழுதிவிட்டீர்கள். என்னுடைய கணிப்பும் அது 'ஞாயிறும், திங்களும்' படமாகத்தான் இருக்கும் என்பதுதான். நன்றி சார்!
-
-
-
-
-
'சிவாஜி முரசு' (ஆசிரியர் J.நவாஸ்) நடிகர் திலகம் மணிவிழா மலரிலிருந்து.
இந்தக் அருமையான கட்டுரையை அப்போது மணிவிழா மலருக்காக வடித்துக் கொடுத்தது யார் தெரியுமா?!. சாட்சாத் நம்முடைய ரசிக வேந்தர் தான். நன்றி திரு. ராகவேந்திரன் சார்.
http://i1087.photobucket.com/albums/...-2/ra_0004.jpg
http://i1087.photobucket.com/albums/...-2/ra_0005.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
Dear Mr Murali Srinivas
I couldn't open this link:
நாட்டிய மேதையும் நடிகர் திலகமும்!-விகடன் கட்டுரை