-
தலைமைப்பண்பு என்று அண்ணாதுரை சொல்வது: முகத்தில் புன்னகை; அகத்தில் நம்பிக்கை; செய்கையில் சுத்தம்; சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை.
அத்தனை பண்புகளும், எம்.ஜி.இராமச்சந்திரனிடம் இருந்தது. முகத்தில் புன்னகை; எம்.ஜி.இராமச்சந்திரன் முகம், அழகு, வசீகரம்; கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை.
அக நம்பிக்கை. எம்.ஜி.இராமச்சந்திரன், மற்றவர்களது அகத்திலும் நம்பிக்கை ஏற்படும் வழியில் செயலாற்றினார். தன்னைப்போல் பிறரும், அக நம்பிக்கையோடு வாழ்வை வாழ வழி செய்து கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.
செய்கையில் சுத்தம். அகத்தில் தூய்மை; புறத்தில் தூய்மை. தூய்மைதானே கற்பு.
சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை. இந்த குணம் இருப்பவர்கள், இயற்கையாகவே, மனித குல சேவையில் ஈடுபடுவார்கள்.
-
கிழக்கு பதிப்பகம் வெளியீடான "வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை" புத்தகத்தை படித்தேன். ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதிய, இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.
"நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்"
என்ற புகழ்பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எம். ஜி. ஆர். கிட்டதட்ட அவர் ஆட்சி காலத்தில் இதுதான நடந்தது. அவரது கடும் உழைப்பு, திறமைகளை தாண்டியும், ஏதோ ஒரு வசீகரம் அவரிடம் இருந்துள்ளது, எனவே தான் இன்றும் எம். ஜி. ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் ரசிகர்கள் அதிகம்.
இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு வரை எம். ஜி. ஆர் ஒரு சிறந்த மனிதன், அவர் மக்களுக்கு நிறைய நன்மை செய்திருக்கிறார் என்று தான் என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் இவைகளை தாண்டியும் எம். ஜி. ஆர் ஒரு சிறந்த நடிகன், சிறு வயதில் இருந்தே அவர் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை ஆர். முத்துக்குமார் இப்புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய புதிய தலைமுறை நடிகர்களை போல் இல்லாமல், நாடகத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தவர்களே, மக்கள் மனதில் நிங்காத இடம் பிடிப்பர் என்பதை எம். ஜி. ஆரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும், இதற்கு ஆதாரமான அத்தனை சான்றுகளையும் இந்த புத்தகத்தில் காணலாம்.
இன்று எத்தனையோ நிகழ்ச்சிகளில் எம். ஜி. ஆர் என்றாலே, கையையும், காலையும் தூக்கிக் கொண்டு ஏதோ கோமாளியைப் போல் சித்தரிப்பதை பார்க்கிறோம், இப்படி இளைய சமுதாயத்தின் மனதில் தப்பான எண்ணத்தை பரப்பும் அனைவரும், எம். ஜி. ஆரின் வாழ்க்கையை படித்த பின்பு, இந்த மாபெரும் மனிதனை அவ்வளவு சாதாரணமாக இழிவு படுத்துவது தவறு என்று நிச்சயம் சிந்திப்பார்கள். தனது முகத்தை மட்டும் காட்டி, தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட பெருமை எம். ஜி. ஆருக்கு உண்டு. அவர் செயல்களில் சுயநலம் இருந்தாலும், அதன் இறுதி நோக்கு பொது நலத்திற்காகவே பயன்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வருமான வரி பற்றி எம். ஜி. ஆரின் கருத்துக்கள் இதற்கான சான்று. தன்னலமற்ற தலைவர்களின் பட்டியலில் அழுத்தமான இடத்தை என்றும் எம். ஜி. ஆர் வசப்படுத்திவிட்டார்.
இவர் வாழ்ந்த நாட்களில் ஒரு புரியாத புதிராக, மக்கள் மனதில் அதீத ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார். சினிமா, அரசியல் என்ற இரு பெரும் கடலில் ஆளுமை செலுத்திய மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது மிகுந்த சிரமமான ஒன்று, அதனை திறம்பட இந்த புத்தகத்தில் ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். எம். ஜி. ஆர் பிறப்பு முதல், இறப்பு வரை நடந்ததை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சுவாரஸ்யமாக தேவையான அளவு விவரித்துள்ளார்.
-
-
-
Makkal thilagam mgr in nan anaiyittal movie telecasting podhigai channel.
-
-
Look at the questions asked by his fans and as well as from others. How MGR has answered it. The first question is about the difference between Politics and Arts (Cinema here) and how MGR had given the definition clearly.
(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.
(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?
எம்.ஜி.ஆர் பதில் - விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.
(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?
எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.
The above questions about the legendary figures of Tamilnadu politics. MGR has equated their character, Rajaji for Sea and Periyar to the Banyan Tree.
Though fourth question was asked 40 years ago the same condition is still prevailing in Tamil Nadu.
(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?
எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.
Fifth answer gives advice to everybody and also to me.
(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?
எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.
Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.
(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?
எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.
(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.
courtesy - net
-
மிக்க நன்றி திரு இரவிச்சந்திரன் சார் புரட்சித்தலைவரின்
நினைவு அஞ்சலி தொடரும் .......
இதோ உங்களுடன் இணைகின்றேன்
-
-
பாட்டு பாட வா - எம் ஜி ஆர் பாடல்கள்
http://i45.tinypic.com/rtpdaf.jpg
எம் ஜி ஆர் தமிழகத்தின் ஒரு தலை சிறந்த கலைஞர். நம் இந்திய வரலாறு கண்ட - காணக்கிடைக்காத - மாபெரும் அதிசயம். அவர் ஒரு மிகப்பெறிய சாதனையாளர். தன் கொள்கைகளை மிகவும் தெளிவாக மக்களுக்கு உரைத்தவர். அவர் படங்களில் கதை வசனம் பாடல்கள் இவை மூன்றுமே மிகவும் சுவையாக இருக்கும்.
அவருக்காக பாடல்கள் எழுதப்பட்டன அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்: உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
.
காதல், தேசப்பற்று, வீரம், விவேகம், தாய்ப்பாசம் என்று பல நல்லு கருத்துள்ள பாடல்கள் அவர் படங்களில் இடம் பெற்றுள்ளன. மக்கள் திலகம் என்று சரியான பெயர் அவருக்கு சூடினார்கள்.
அவர் நடிப்பில் சண்டை காட்சிகளில் மட்டும் அல்லாமல் நாட்டியத்திலும் தன் திறமையை காட்டினார். ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்
என்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தி.பா.ஆனந்த
துபாய்