http://i58.tinypic.com/2diegwk.jpg
Printable View
மாலை மலர் பேப்பரில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு கோடி வசூல் என்று தகவல் - செய்தியில் பிற மாவட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாளை நோக்கி ஓடுகிறது என்று தவறான தகவலை வெளியிட்டுள்ளார்கள் .திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு தெரியாமல் இந்த தவறான தகவல் வெளியிட்ட செய்தியாளருக்கு என்ன உள் நோக்கமோஎன்று தெரியவில்லை .
சென்னை - தேவி பாரடைசில் ஒரு காட்சி வசூல் மட்டும் ஆதாரத்துடன் சொக்கலிங்கம் விளம்பரம் தந்தார் .
யூகங்கள் அடிப்படையில் வசூலை கூறுவது ஆதாரமாகாது .
ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.
சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .
முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .
முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .
1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .
1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .
உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .
ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .
பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 43 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .
1972
BHARATH AWARD FUNCTION
http://i60.tinypic.com/x0s6t5.jpg