வெள்ளி முதல் கோவை
டிலைட் திரை அரங்கில் தெய்வத்தாய்.
Printable View
வெள்ளி முதல் கோவை
டிலைட் திரை அரங்கில் தெய்வத்தாய்.
தலைவர் திரையுலகில் இருந்தவரை வசூலில் முறியடிக்கப்பட முடியாத படமாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் திகழ்ந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கான ஆதாரங்களை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களும் திரு.சி.எஸ்.குமார் அவர்களும் சமீபத்தில் கூட வெளியிட்டிருந்தனர்.
தலைவர் நடிப்பதை நிறுத்தி 38 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது படங்கள் இன்னும் மற்ற மறுவெளியீடு படங்களால் வசூலில் நெருங்கமுடியாதபடி சரித்திர சாதனை படைத்து வருகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் மதுரை சென்ட்ரல் தியேட்டர் மேலாளரிடம் நேரில் பேசி வசூல் விவரங்களைப் பெற்று நமது திரியில் பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
அதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்த இயக்குநர். இயக்குநர் திலகம் என்று புகழப்பட்டவர். அவர் இயக்கிய பணமா? பாசமா? திரைப்படம் நல்ல படம். நானும் ஒருமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். படம் வெளியானபோது வசூலில் சாதனை புரிந்ததோடு வெள்ளி விழாவும் கொண்டாடியது.
இப்போது அந்தப் படத்தை இப்போது மறுவெளியீடு செய்தால் குறிப்பிடத்தக்க வசூல் கிடைக்குமா? அதற்காக, நான் அந்தப் படத்தையோ, நடிகர்களையோ குறை கூறவில்லை. சிறந்த படம், சிறந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மக்களின் ரசனை காலங்கள்தோறும் மாறும்.
அதேபோல, இன்று வசூல் சாதனை செய்யும் படங்கள் இன்னும் 45 ஆண்டுகள் 50 ஆண்டுகள் கடந்து மறுவெளியீடு செய்யப்பட்டால் (அதற்கு வாய்ப்பில்லை) குறிப்பிடத்தக்க வசூல் செய்யுமா? என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.
அதே நேரம் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் படங்கள் மட்டும் கால ரசனை மாற்றத்தால் பாதிக்கப்படாதா? என்று கேட்கலாம். ‘‘காருள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் தலைவர் படங்கள் ஓடும். இன்னும் 300 ஆண்டுகள் கழித்தும் தியேட்டர்களில் தலைவரின் படங்கள் வெளியாகும்’’ என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தலைவரின் படங்களுக்கே அப்படி ஒரு நிலை என்றால் மற்ற படங்களின் சுவடே இருக்காது.
தலைவர் படம் என்றில்லை, மற்ற சில படங்களின் நெகடிவே இல்லை என்று கேள்விப்படுகிறேன். இருக்கும் படங்களை நாம் பாதுகாத்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலேயே எவ்வளவு சாதனை செய்திருக்கிறார்கள் என்று வருங்காலத் தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். உதாரணத்துக்கு நாடோடி மன்னனில் தலைவரின் இரட்டை வேடக் காட்சியில், தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் அதுவரை எந்த தமிழ் படத்திலும் எடுக்கப்படாத அசையும் ஷாட். (இதுபற்றி பின்னர் தனியே எழுதுகிறேன்). அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.
பாகுபலி படத்தை பார்த்தவர்களே கூட, அதை விட அடிமைப்பெண்தான் சிறந்த படம் என்று கூறுகிறார்களே. அதுதான் தலைவரின் வெற்றி. இன்று வசூலில் சாதனை செய்யும் படங்கள் 50 ஆண்டுகள் கழித்து (பாகுபலியில் தெலுங்கு நடிகர். சரி. இப்போதிருக்கும் மற்ற தமிழ் நடிகர் படங்களையே எடுத்துக் கொள்வோம்) மக்களால் ரசிக்கப்பட்டு வசூலை குவிக்காது. ஆனால், 45, 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான தலைவரின் படங்கள் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணம்தான் மதுரையில் வசூல் சக்கரவர்த்தியாம் நம் தலைவரின் படங்களுக்கு கிடைத்திருக்கும் மற்ற மறுவெளியீடு படங்களால் அடைய முடியாத அமோக வசூல்.
திரு.லோகநாதன் சார், பெரிய இடத்துப் பெண் படம் கூட ரூ.1 லட்சத்தை நெருங்கியதாக நினைவு.
இதோ திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கூட கோவை டிலைட்டில் தெய்வத்தாய் படம் வெள்ளி முதல் வெளியாகிறது என்ற இனிப்பான தகவலை அளித்திருக்கிறார். சென்னையில் மினர்வாவில் ஆசைமுகம் ஓடுகிறது. தலைவர் கதாநாயகனாக நடித்த 100க்கும் மேற்பட்ட படங்களில் ஏறத்தாழ 90 படங்கள் இன்னும் மறுவெளியீடு கண்டுகொண்டுதான் இருக்கின்றன.
இன்று காலையில் திரு.வினோத் அவர்கள் கூறியிருப்பதைப் போல மற்ற படங்கள் எல்லாம் OTR (One Time Record) தலைவர் படங்கள் மட்டுமே ATR (All Time Record)
திரு.லோகநாதன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. தலைவர் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் அடுத்த மாதம் இதயக்கனி படமும் வரும் தீபாவளிக்கும் மதுரை சென்ட்ரலில் தலைவர் படம் திரையிடப்படும் என்ற தேனான செய்தியை அளித்ததற்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்கு புரியாமல் போய்விடும்.- புரட்சித்தலைவர்
Very good posting Sir. இது தான் எங்கள் பதில்:
https://www.youtube.com/watch?v=RwRaxialcHw
https://www.youtube.com/watch?v=NO1I65ixAN0
அருமை நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் விமர்சனம் அழகு, அருமை, அற்புதம், அசத்தல், அட்டகாசம். இன்னும்
வார்த்தைகளால் வர்ணிக்கலாம்.
பெரிய இடத்துப் பெண் மதுரை சென்ட்ரலில் கடந்த முறை ஈட்டிய வசூல்
ரூ.88,000/- மட்டுமே. பலமுறை பல அரங்குகளில் , மதுரையில் திரையிடப்பட்டு
வெற்றிவாகை சூடிய படம். என்பது தங்களின் கவனத்திற்கு.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி...............
http://i62.tinypic.com/66zygx.jpg