comparable with GG!
https://www.youtube.com/watch?v=qoMI8OdajYY
https://www.youtube.com/watch?v=K6fGw2kf6xY
Printable View
Paavamannippu....The Gem of a movie with a cult theme....NT's superb acting histrionics with a pickle touch of GG's subtle performance alongside MR Radha's vibrations and TSBalaiya's confusions!! The bio-chemistry between the Inspector son and the miser 'don't bother' Don father worked out well///
Fully shouldered by NT's acting axis but ably supported by GG making his presence felt in scenes and his only one evergreen memory lane song kaalangalil aval vasantham rendered by PBS!
https://www.youtube.com/watch?v=4SoGbubt4QE
https://www.youtube.com/watch?v=b5ViGchL3Yo
நாளை 22 மார்ச் அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் நினைவு நாள்!
Quote:
காலங்கள் உள்ளவரை காட்சிகள் மறையும் வரை கண்ணியமான காதல் உணர்வுகளின் உயிரோவியமாகத் திகழ்ந்து இன்னும் ரசிக நெஞ்சக் கோட்டையில் வஞ்சிக் கோட்டை வாலிபராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் மாமன்னருக்கு அனைத்து திரி சார்ந்த நினைவஞ்சலி !!
அந்த தேஜஸ் ஜொலித்திடும் முகத்தில் மென்மை ஒளிர்ந்திடும் வதனத்தில் காதலின் குறும்பு மின்னிடும் கண்களில் கண்ணியம் பளீரிடும் நடை உடைபாவனைகளில் தொலைந்த இதயத்தை திருப்பித்தர வந்து விடுங்கள் நடிப்புலகின் காதல் ஆளுநரே !!!
மறக்க முடியவில்லையே மன்னரே.... காதலும் உயிர் பெற்று வாழ்ந்திட்ட உங்கள் பொற்காலத்தை !!
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் உங்களின் இதமான இனிமையான காதலம்சங்கள் தென்றலாய் தவழ்ந்திடும் தேனிசைப் பாடல்கள்!
https://www.youtube.com/watch?v=KRvTO_-Uvq4
ஜெமினி என்ற தோழனின் நினைவு நாள்.-22 மார்ச்
நடிகர்திலகம் என்ற அழகனை,ஆகர்ஷ சக்தியை,சுடரை,நடிப்பின் தெய்வத்தை நட்சத்திரமாக அண்ணார்ந்து பார்த்து பிரமித்தாலும் ,ஒரு மென்மையான தோழனாய் நம் தோளுக்கு அருகே வருபவர் ஜெமினி. சிவாஜியை பார்த்த போது பேச்சே வராமல், காலடியில் வீழ்ந்த நான் ,ஜெமினியிடம் சரளமாக உரையாடியுள்ளேன்.
இவரை பற்றி ஏற்கெனெவே எழுதியவற்றை நினைவு கூறுகிறேன்.
உண்மையாக சொன்னால் ஜெமினி ஒரு நடிகர் என்ற ரீதியில் மட்டும் வைத்து பார்க்க பட்டால்(தமிழகத்தில் உயரமான நடிப்பின் இமயம் இருந்ததால் ,நடிகர்திலகத்தை உலகத்தின் உச்சிக்கு விட்டு விட்டே மற்றவரை எடை போட இயலும்),அன்றைய தமிழகத்தில் இருந்த ஏனைய எல்லோரையும் விட உயர்ந்து,கிட்டத்தட்ட ஹிந்தி நடிகர்களின் தரத்தில் இருந்தவர்.
இத்தனைக்கும் கைகளை உபயோகிக்க தெரியாது,multi tasking acting ability ,coordination அறவே கிடையாது. ஸ்டைல்,ஈர்ப்புள்ள signature actions ஊஹூம். நடனம்,action ஹே ஹே ஹே. கொஞ்சம் பெண்மை தன்மையுள்ள soft நடிகர்.
ஆனால்,பல அற்புதமான தனி தன்மை கொண்டு இயங்கிய இயக்குனர்களின், டார்லிங்.
கீழ்கண்ட விஷயங்களை காரணமாக கூறலாம்.
1)அவரிடம் அதிக பிரசங்கி தனம்,பார் பார் நான் நடிக்கிறேன் என்று உரத்து கூவும் கேமரா பிரக்ஞை கிடையாது.பாத்திரத்தோடு உறுத்தலில்லாமல் ஒன்றுவார்.
2)ஒன்றாம் கிளாஸ் தாண்டாத நமது பாமர ஹீரோக்கள், கிராம படங்களில் "நடிக்க"முயன்ற போது,பட்டதாரி professor கிராம பாத்திரங்களில் ஒன்றினார்.
3)காமெடி,செண்டிமெண்ட்,tragedy ,கிராமத்தான்,நடுத்தரன்,பணக்காரர் எல்லா பாத்திரங்களுக்கும் பாந்தம்.(Action ,ஸ்டைல் விட்டு விடலாம்)
4)நாடக பயிற்சி இல்லாதது blessing in disguise . அதனால் சினிமாவிற்கு வேண்டிய சினிமா நடிப்பை மட்டுமே தந்தார்.
5)Acting is not about Acting and reacting but behaving as the character என்பதற்கு அற்புத உதாரணம்.
6)இவர் காட்சியை தன வய படுத்தும் (Scene Stealing )அழகு அவ்வளவு பாந்தமாய் ,மெருகூட்டுவதாக அமையும். ரங்கராவ் கற்பகத்திலும்(எல்லா காட்சியும்),சிவாஜி பார்த்தால் பசி தீருமிலும் (குழப்ப காட்சிகள்)என்று சொல்லி கொண்டே போகலாம்.
7)நான் அவனில்லை படத்திற்கு, சிறந்த நடிகர் பட்டம் வழங்காத இந்திய அரசை என்னால் மன்னிக்கவே இயலாது,.
இந்த திரிக்கு முக்கால பூஜை செய்யும் எங்கள் சிவாஜி பக்தர் சிவாஜி செந்தில் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நானும் வருவேன் .மிஸ்ஸியம்மா போன்ற படங்களுடன்.
ஜெமினி கணேசன்----By RP Rajanayahem
தமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக் குறிப்பிடலாம். மென்மையான நேர் எதிர்த் திசையில் சாதித்தவர்கள் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா ஆகியவர்கள்.
19 வயதில் பாப்ஜியைத் திருமணம் செய்துகொண்டவர். அதன் பிறகு நடிகைகள் புஷ்பவல்லி, சாவித்திரி இருவருடனும் வாழ்ந்து குழந்தைகள் தந்தவர். பின்னும் ராஜஸ்ரீயோடு affair. 78 வயதில் ஜூலியானாவை மணந்து பிரிந்து இப்போது 85 வயதில் வாழ்க்கையின் சலிப்பைத் தாங்க முடியாமல் மூச்சை நிறுத்திக் கொண்டவர்.
‘ உங்கள் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதட்டுமா? ‘ என்று ஒரு சினிமா பத்திரிக்காசிரியர் ஜெமினி கணேசனிடம் கேட்டார். “நீ எதுக்குடா எழுதணும்? Even a Rickshaw Wala in the street corner knows my whole history" – ஜெமினியின் பதில் இது!
தன்னுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜெமினி. "My life is a open book. You should read it to know what not to do."
1947இல் நடிக்க ஆரம்பித்திருந்தாலும் 1953ஆம் ஆண்டுதான் – தன்னுடைய 33 வயதில் – கதாநாயகனானார். அன்றைய பிரபல நடிகைகள் அனைவருடனும் நடித்தார். சாவித்திரி, அஞ்சலிதேவி, வைஜயந்தி மாலா, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, ஜெயந்தி, காஞ்சனா என்று எல்லோருக்கும் பொருந்துகிற மாதிரியான கதாநாயகன்.
நாடகப் பின்னணி கொண்டவர்களே சினிமாவுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் அத்தகைய பின்னணி இல்லாமல் நடிக்க வந்தவர். அன்றைய காலத்தில் நன்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த மிகச்சிலரில் ஒருவராக இவரைச் சொல்லலாம். அபாயமான காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். நடிகராவதற்கு முன்னரே, கல்லூரி மாடியிலிருந்து குதிப்பாராம். ‘ எப்படிக் குதித்தாய்? “ என்று பிரின்சிபால் பதறிக் கேட்டபோது மீண்டும் மாடியேறி குதித்து ‘இப்படித்தான்’ என்றாராம். புதுக்கோட்டை மகாராஜா இவர் தலையில் ஆப்பிளை வைத்துக் குறிபார்த்து ஆப்பிளைச் சுடும் பயிற்சிக்கு அடிக்கடி ஒத்துழைத்த தைரியசாலி.
சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. ஆனாலும் தன்னை விடச் சாதாரண நடிகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், போன்றவர்களின் படங்களில் கூட நடித்தார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் இவர் நடித்திருந்தார்.
எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் சிவாஜியிடம் அவரது பிரம்மாண்ட இமேஜ் அவருடைய மாறுபட்ட பாணியையும் மீறி மறக்க முடியாத விஷயமாயிருந்தது. ஆனால் ஜெமினியால் சராசரி மனிதனை மிக இயல்பாகத் திரையில் காட்ட முடிந்தது.
சரித்திரப் படங்கள், சமூகப் படங்கள் என்று பல வகைப் படங்களைத் தந்தவர். எந்த அளவுக்கு ‘ கல்யாணப் பரிசு’, ‘சுமை தாங்கி’ என்று சோகமான படங்களில் நடித்தாரோ அதே அளவு ‘மிஸ்ஸியம்மா’, ‘யார் பையன்’ என்று நகைச்சுவைப் படங்களிலும் நடித்தவர் ஜெமினி. இவருடைய ‘சாந்தி நிலையம்’, ‘ சங்கமம்’ வண்ணத்தில் தரமானவை.
ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் ஆகியோர் அவருக்காகப் பாடிய பாடல்கள், அவர் நடித்த படங்கள் ஆகியவை எப்போதும் இந்தக் காதல் மன்னனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
ஜெமினி கணேசனுக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்த பின் ( மூன்றாவது பெண்ணுக்கு ஹிந்தி நடிகை ரேகா வயது தான் . சர்ச் பார்க் கான்வென்டில் இருவரும் ஒன்றாக படித்தார்கள்.நான்காவது பெண் ’ஜிஜி’ கூட ரொம்ப பின்னால் தான் பிறந்தவர் ) புஷ்பவல்லியுடன் affairஏற்பட்டது .புஷ்பவல்லிக்கு முன் மனைவி பாப்ஜி தவிர வேறு பெண்களை தொட்டதே கிடையாது என ஜெமினி சொன்னார்.
1940களின் பின்பகுதியில் புஷ்பவல்லி பெரிய திரை நட்சத்திரமாய் இருந்த காலத்தில் ஜெமினி அவர் பெயருக்கு காரணமான ஜெமினி ஸ்டுடியோவில் உத்தியோகம் பார்த்தவர்.அதோடு சினிமாவில் (புஷ்பவல்லி கதாநாயகியாய் நடித்த படத்தில் கூட)அப்போது ஜெமினி கணேசன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர்.
1951ல் செப்டம்பர் 22தேதியில் பீச்சில் ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமுள்ள நடிகை புஷ்பவல்லியை சந்திக்க நேர்ந்தது அவர் வாழ்வையே புரட்டிப்போட்டது. புஷ்பவல்லி ஜெமினியிடம் தன் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினார். (புஷ்பவல்லிக்கு ஏற்கனவே அப்போதே ஒரு மகன் பாபுஜி.இந்த பாபுஜி பின்னால் குட்டி பத்மினியின் அக்காவை மணந்தார் . வியட்நாம் வீடு படத்தில் சிவாஜியின் மகளுக்கு காதலனாக நடித்தார்.)
ஜெமினியின் காரை புஷ்பவல்லி ஓட்டிப் பார்க்க விரும்பினார். காரை ஓட்டிப் பார்த்த புஷ்பவல்லியை ஜெமினி அன்றே ஓட்டி...
அதிகாலை மனைவி பாப்ஜி வீட்டில் திண்ணையில் குற்ற உணர்வுடன் வந்து படுத்துக்கிடந்தார் . பாப்ஜி வெகுளியாய் ஜெமினியின் தாயாரிடம் " அம்மா! உங்க பிள்ளைய பாருங்க இங்கே!"
தான் மெம்பராய் இருந்த கிளப் ஒன்றிற்குப் போய் மூன்று நாட்கள் அங்கேயே கிடந்தார். புஷ்பவல்லி அவரை தேடி அழுதுகொண்டே வந்தார்."உங்களை எங்கே எல்லாம் தேடுவது?"
அப்படி ஏற்பட்ட உறவில் தன் தாய், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளோடு ஒரு Distance வந்துவிட்டது . புஷ்பவல்லி Very possessive lady!
புஷவல்லிக்கு இரண்டு பெண்குழந்தைகள். ரேகா,ராதா. சாவித்திரியை வீட்டுக்கு கூட்டிவந்த போது விளையாட்டாக புஷ்பவல்லி " சாவித்திரியையும் கட்டிக்கங்க " என்று சொன்னபோது வானத்திலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் "ததாஸ்து " என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் விஷயம் சீரியஸ் ஆகி சாவித்திரி ஜெமினியுடன் இணைந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் புஷ்வல்லி தான். வாகினி ஸ்டுடியோவில் சாவித்திரி மீது காரை ஏற்ற முயற்சிக்கிற அளவில் கடுமையான கோபம். சாவித்திரி பிணைப்பு அதிகமானவுடன் புஷ்பவல்லி குடும்பத்தை விட்டு ஜெமினி ஒதுங்கினார். ஒதுங்குதல் என்பதை விட புஷ்வல்லிக்கும் ஜெமினிக்கும் கடும்பகை அப்போது ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும்.
சாவித்திரிக்கு இரண்டு குழந்தைகள். விஜயசாமுண்டீச்வரி , சதீஷ். சாவித்திரியுடன் கருத்து வேறுபாடு வந்த பின் வந்த 'பாமா விஜயம் ' ராஜஸ்ரீ கொஞ்சம் வித்தியாசமாக ஒரு நிபந்தனை விதித்தார். ' உங்கள் முதல் மனைவி பாப்ஜியை விவாக ரத்து செய்து விடுங்கள்.'ஜெமினி இந்த நிபந்தனை ஏற்படுத்திய கடுப்பில் " என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்கு யோக்கியதை கிடையாது " என கடுமையாக ராஜஸ்ரீயிடம் சொல்லி விட்ட பின் அந்த உறவு அறுந்தது.
1970 களின் மத்தியில் ஜெமினியின் வீட்டிற்கு கமல் ஹாசன் தான் ஹிந்தி நடிகை ரேகாவை விருந்தாளி (!)யாக அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
சாவித்திரி இறந்த போது புஷ்பவல்லி அந்த சாவுக்கு வந்திருந்தார்.
பாப்ஜியின் நான்கு மகள்கள், புஷ்பவல்லி யின் இரண்டு மகள்கள் , சாவித்திரியின் மகள் எல்லோரும் சேர்ந்து க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.சதீஷ் ஜெமினியின் வீட்டில் கொஞ்ச நாள் இருந்திருக்கிறார். ஜெமினி கணேசன் 64வயதில் துப்பாக்கியால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு சாவித்திரி மகன் சதீஷ் குறித்த சர்ச்சை தான் காரணம் என்று ஹேஸ்யம் உண்டு .
ராஜஸ்ரீ உறவும் கசந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் சாவித்திரியின் மறைவுக்கும் பின் சிலவருடங்கள் கழிந்து, ஜெமினி ஒரு பேட்டியில் சொன்னார்." இவ்வளவு வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மை புரிகிறது. என் முதல் மனைவி பாப்ஜியைத் தான் நான் மிகவும் காதலிக்கிறேன் என்கிற விஷயம் இவ்வளவு ஆண்டு கால வாழ்வுக்குப் பின் தான் தெரிகிறது ."
நாற்பது வருடங்களுக்கு முன் ' சாவன் பாதன் 'இந்தி படத்தில் நடித்த ரேகா பேட்டி கொடுத்தார். " என் தந்தை பிரபல தமிழ் நடிகர். "
இதில் பெரிய ரகசியம் ஏதும் இல்லை. சினிமாப் பத்திரிகை நிருபர் ஒருவரிடம் உடனே ஜெமினி கணேசன் நாற்காலியை திருப்பிப்போட்டு உட்கார்ந்து
" ஆமாம் பிரதர்! புஷ்பவல்லி யும் நானும் காதலித்து ஒன்றாக வாழ்ந்த போது பிறந்தவள் தான் ரேகா! நாங்கள் டைவர்ஸ் செய்துகொள்ளத்தேவையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் நானும் புஷ்பவல்லியும் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை." என்று கூலாக சொன்னார்!
ஜெமினிகணேசன் பேச்சில் எதைப்பற்றியும் சுலபமாக அபிப்ராயம் சொல்பவராய் இருந்தார் என்பது தான் உடனே என் மனதுக்குப் பட்ட விஷயம்.
இரண்டு வருடம் கழித்து அவ்வை சண்முகியில் நடித்தார்.
நான்கு வருடம் கழித்து தான் ஜுலியானாவை திருமணம் செய்தார்.
”உங்க மருமகன் ஜிஜிமாப்பிள்ளை ஸ்ரீதர் ராஜன் படம் ஏதும் பண்றாரா..என்ன செய்றார்?”
ஜெமினி கணேசன் சலிப்பான பதில் : “இருக்கான்…. He is a BLACK MARK in my life…”
ராசுக்குட்டியில் நடித்த ஐஸ்வர்யா பற்றி விசாரித்தார்.
நான் சொன்னேன் “ A spoiled child”
ஜெமினி உடனே “ அவ அம்மா லக்*ஷ்மி … அவ … என் வாயால சொல்லக்கூடாது…”
கமல்ஹாசன் மனைவிகள் பற்றி “ வாணி… Actually she is elder than him.. very possessive lady.. அவனால முடியல.. இப்ப ஒன்னு கட்டியிருக்கானே.. சரிகா….என் வாயால சொல்லக்கூடாது..என் வாயால சொல்லக்கூடாது…”
டி.வி யில் அப்போது ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
Dear Gopal Sir!
Spellbound and Find no words to express my gratitude upon your heartfelt and respectful tributes and reminiscences on the King of Romance Mr.Gemini Ganesan at the right time and right moment of his anniversary pay backs!!
Regards forever on behalf of GG's Treasure island!
senthil
Tributes
In line with Gopal Sir I express my profound and heartfelt condolences on the sudden demise of Shri 'Film News' Anandhan who was also instrumental in disseminating the name and fame of NT by virtue of his huge collections of volumes of data and information related to NT and his era!
May the soul rest in peace!
senthil
https://www.youtube.com/watch?v=mG1JAhlmf2o
https://www.youtube.com/watch?v=3AbJutwxc1s
22 மார்ச் அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நினைவு நாள்!
[COLOR="#000080"][QUOTE]காலங்கள் உள்ளவரை காட்சிகள் மறையும் வரை கண்ணியமான காதல் உணர்வுகளின் உயிரோவியமாகத் திகழ்ந்து இன்னும் ரசிக நெஞ்சக் கோட்டையில் வஞ்சிக் கோட்டை வாலிபராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் மாமன்னருக்கு அனைத்து திரி சார்ந்த நினைவஞ்சலி !!
Quote:
ஜெமினிக்கான ஏஎம் ராஜா பிபி ஸ்ரீனிவாசின் குரல் குழைவாக எஸ் பி பாலசுப்ரமணியம் அவதாரமெடுத்த போது ஜெமினிக்கு அவரது தேன் மதுரக் குரல் பாந்தமாகப் பொருந்திய பாடல்களில் சாந்தி நிலையம் திரைக்காவியத்தில் வரும் இயற்கை என்னும் இளைய கன்னி என்னும் சுற்றுப்புறச் சூழல் அம்சங்களை உள்ளடக்கிய பாடலும் அவளுக்கென்று ஒரு மனம் திரை ஓவியத்தில் ஒலித்த ஆயிரம் கனவு ஆயிரம் நினைவு மழை நினைவுப் பாடலும் கலர் கதாநாயகி காஞ்சனாவின் இணைவில் முக்கியமானவை !! இன்றளவும் வண்ணக் கலவையில் மனத்தைக் கொள்ளை கொண்ட சங்கமம் திரைப்படத்தில் டி எம் சௌந்தரராஜன் அவர்களின்தனிப்பட்ட கொஞ்சம் சிரமமான ஜெமினி வாய்ஸ் மாடுலேஷனில் ஒலித்த தன்னந் தனியாக நான் வந்த போது பாடலும் முக்கியமானதே !!
https://www.youtube.com/watch?v=rgVmLYilkMU
https://www.youtube.com/watch?v=_ukBdTZTQgM
https://www.youtube.com/watch?v=nv03v9miW4Q
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நினைவு நாள்......
(22 March).....மன வலை நினைவலைகள் !
மறக்கமுடியுமா மன்னரே!
Quote:
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் என்றில்லாமல் ஒரு மன்னரைப் போல வாழ்ந்து திரைக்காதல் மாமன்னராக ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு மறைந்தாலும் எங்கள் மனதில் என்றுமே கண்ணியக் காதலின் நிரந்தர சின்னமாக கொலுவிருக்கும் அமரர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு நடிகர்திலகம் திரி சார்ந்த நினைவஞ்சலிகள் !!
https://www.youtube.com/watch?v=Wd2A_M6kgLo
22 மார்ச் அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் நினைவு நாள்!
காதலின் வலிமையையும் வலியையும் சலிக்காமல் நிலைப்படுத்திய ....காதல்மன்னவரே அழலாமா?!
https://www.youtube.com/watch?v=RggMJODLIac
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM