-
டியர் ராகவேந்திரன் சார்,
'எட்டில் அழகு' கொள்ளையழகு போங்கள்...வீடியோ பிரமாதம். நடிகர்திலகம் நம்மைக் கண்கலங்க வைப்பது உண்மை! அவர் நீங்கள் குறிப்பிட்டது போல் சின்னக் குழந்தை மாதிரி துள்ளி குத்தித்து நடனமாடுவதை பார்க்கும் போது மனம் சோகத்தின் உச்சிக்கே செல்கிறது. நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Dear Mr. Kumaresh
Now the count down starts for October 14th, I have a suggestion, we need to capture the complete gala celebration both INSIDE AND OUTSIDE the theatre. I want every one of us should see and enjoy the kind of celebration we do inside the theatre while watching our N.T on the gaint screen.
We can engage a video grapher to capture all the events and also capture the original recordings as how our fans enjoy and celebrate inside the theatre....
Also, please send us the programme schedule.
Kindly consider my request.
JAI HIND
M. Gnanaguruswamy
-
அன்பு முரளி சார்,
http://www.orkutmela.com/images/scraps/16/17.gif
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் என்ற அற்புதப் பதிவிற்கு
வெறும் பாராட்டு என்ற வார்த்தையை சொல்ல எனக்கு மனம் வரவில்லை. இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்டுரையாக உங்கள் கட்டுரை அமைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களின் நிதானமான,ஆழ்ந்த,அனுபவப்பட்ட வார்த்தைகோர்வைகளின் நிஜங்களின் பின்னணிகளை அளந்து பார்த்தால் உண்மையாகவே நெஞ்சு பகீரென்கிறது. எத்தனை சதி வலைப்பின்னல்கள்! என்ன வஞ்சகத் திட்டங்கள்! ஒரு சாது பசுவைச் சுற்றி எத்தனை வரிப்புலிகள்! எவ்வளவு சுயநலங்கள்! தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவரைக் கவிழ்க்க கயமைத்தனங்கள் தான் எத்தனை? இப்படி எத்தனை எத்தனை என்று எத்தனையோ கேள்விகள் உள்ளத்துக்குள் கணைகளாய் துளைத்தெடுக்கின்றன.
தங்கள் சுய வளர்ச்சிகளுக்காகவும்,சுயலாபங்களுக்காகவும் பலிகடாவாக ஆக்கப்படுவதற்கு நடிகர்திலகம் தானா கிடைத்தார்?
தங்களின் இந்த அதியற்புதமான பதிவு பலதிரைமறைவு உண்மைகளை நாங்கள் அறிந்துகொள்ள பேருதவியாய் இருக்கிறது என்பது உண்மை.
அதே போல் விகடன் என்னும் நடுநிலை இதழ் ஒருசிலரின் கைப்பொம்மையாக இயங்கி தன் தரத்தைக் குறைத்துக் கொண்டதை நினைத்தால் வெட்கமும்,வேதனையும் நம்மைப் பிடுங்கித் தின்கிறது. விகடன் ஏன் எப்போதும் இப்படியே தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதிகிறது என்று நண்பர்கள் அனைவரும் பேசிப் பேசி மாய்ந்து போவோம். அதனுடைய பின்னணி உங்கள் எழுத்துக்களின் மூலமாக இன்றுதான் முழுமையாய் தெரிய வந்தது. தெளிந்தும் விட்டது.
நம் ரசிகர்கள் மட்டுமல்ல..பல நூறு பேர்கள் இந்த உண்மையினை தெரிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் வழி செய்து விட்டீர்கள். அதற்காக தங்களுக்கு எங்கள் கோடி கோடி கோடி கோடி நன்றிகள் சார்.
இத்தனை வேலைப்பளுவிற்கு மத்தியிலும் நீங்கள் இரவென்றும் பாராமல் இந்த அற்புதமான உண்மைகளைப் பிட்டு பிட்டு வைக்கும் உணர்ச்சி பூர்வமான கட்டுரையைப் பதிவிட்டமைக்கு காலம் முழுதும் நாங்கள் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் சார். நன்றி.
ஆச்சரியத்தின் விளிம்பில்
வாசுதேவன்,
நெய்வேலி.
-
அருமை நண்பர் ராகேஷ் அவர்களுக்கு
சற்று காலதாமதமானாலும் பொறுத்தருளி எங்களின் பொன்னான பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்க. எங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் இறைவனாரின் ஆசிகள் என்றும் தங்களுக்குத் துணை நின்று அருள் புரியும். வாழ்க வளமுடன்!
மனதார வாழ்த்தும்,
நெய்வேலி வாசுதேவன்.
-
Dear Guru
the first day sweet distribution, Staurday Annadhanam, sunday mornig sweet disrtibutions and chicken Briyani Anadhnam, evenig poo palku procession starts from Seppings Road, huge garlands and welfare programme
regards
kumar
-
kumaresan sir,
Do u received my 5 N.T.'s photos by e.mail? do u want more?
vasudevan.
-
டியர் முரளியண்ணா,
தாங்கள் ஒரு வரலாற்றுச்சுரங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். எழுத்தாளர் மணியனின் கயமைத்தனங்கள் பற்றிய நீண்ட கட்டுரை மிக அருமை மட்டுமல்ல, வரலாறு தெரியாத பலருக்கு பல உண்மைகளைப்புரிய் வைத்த காலக்கண்ணாடி. நமது ஆதங்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்....
மணியன், திரு எம்.ஜிஆரின் நெருங்கிய நண்பராக இருந்து விட்டுப்போகட்டும், நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.
திரு எம்.ஜிஆரின் கட்டுரையை தன் பத்திரிகையில் வெளியிட்டுக்கொள்ளட்டும். நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.
திரு எம்.ஜிஆரின் வெளிநாட்டுப்படப்பிடிப்புக்கு உதவி செய்திருக்கட்டும், நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.
திரு எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கட்டும், நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.
ஆனால் இதையெல்லாம் காரணமாக வைத்து, இதில் எந்த சம்மந்தமும் இல்லாத நடிகர்திலகத்தைப் பற்றி தரக்குறைவாக எழுதியும், அவரது நல்ல படங்களுக்குக்கூட குற்றம், குறைகளை பெரிதாக அடுக்கி, அந்தப்படங்களில் பாஸிட்டிவ் அம்சங்கள் நிறைய இருந்தாலும் அவற்றை வேண்டுமென்றே மறைத்தும் ஏன் பழி வாங்க வேண்டும்?. (அப்போதெல்லாம் எத்தரப்பிலும் சாராத பொது ரசிகர்கள், விகடன் விமர்சனம் அளிக்கும் மதிப்பெண்களை வைத்து படம் பார்க்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வதுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் இதுபோன்ற மோசமான விமர்சனங்களும், மதிப்பெண்களும் பல படங்களைப் பாதித்திருக்கின்ற்ன).
தாங்கள் குறிப்பிட்டது போல, நடுநிலையாளரான வாசன் மறைந்த பிறகு, அனுபவமில்லாத அவரது மகன் எஸ். பாலசுப்பிரமணியனை (எஸ்.எஸ்.பாலன்) பெயரளவுக்கு 'ஆசிரியர்' என்ற பெயரில் தன் கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு மணியன்தான் விகடனை டாமினேட் செய்து வந்தார். 13-வது துணையாசிரியராகச்சேர்ந்த மணியன், தன் குறுக்குப்புத்தியாலும் வில்லங்கங்களாலும், வாசனுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் விகடன் வளர்ச்சிக்குப்பாடுபட்டவர்களுமான விந்தன், கொத்தமங்கலம் சுப்பு, மெரினா போன்றோரை ஓரம் கட்டிவிட்டு, தான் பிரதான துணையாசிரியரானார். கூடவே தன் ஜால்ராக்களான தாமரை மணாளன், லட்சுமி சுப்பிரமணியம், ஜே.எம்.சாலி இவர்களை வைத்துக்கொண்டு விகடன் பத்திரிகையை தன் இஷ்ட்டத்துக்கு நடத்தினார்.
அப்போது வெளியான விகடன் இதழ்களைப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். அதில் மணியனின் ஒரு தொடர்கதை, தாமரை மணாளனின் ஒரு தொடர்கதை, இவர்களே பல புனைப்பெயர்களில் எழுதிக்கொள்ளும் சிறுகதைகள், எம்.ஜி.ஆரின். 'நான் ஏன் பிறந்தேன். தொடர், பரணீதரனின் ஒரு பக்திப்பயணத் தொடர், மணியனின் 'இதயம் பேசுகிறது' என்ற தலைப்பில் ஒரு வெளிநாட்டுப் பயணத்தொடர்.... அவ்வளவுதான். தன் இஷ்ட்டத்துக்கு ஆட விட்டு கண்டுகொள்ளாமல் இருந்த பாலனுக்கு நன்றிக்கடனாக தானும் வித்வான் லட்சுமணனும் தயாரித்த மூன்றாவது தயாரிப்பான 'சிரித்து வாழ வேண்டும்' படத்தின் இயக்குனராக எஸ்.எஸ்.பாலனைப்போட்டார் மணியன். இதுவும் பெயரளவுக்குத்தான். ஆனால் படத்தை பெரும்பாலும் இயக்கியவர் ப.நீலகண்டன் (எம்.ஜி.ஆர். விருப்பப்படி). டைட்டிலில் மட்டும் பாலன் பெயர் வந்தது.
இதனால், தனக்கு 'வேண்டியவரின்' நெருக்கத்தைப் பெற மணியன் தேவையில்லாமல் நடிகர்திலகத்தின் படங்களை மட்டம் தட்டும்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த பாலன், அதன் கூலியை அனுபவித்தார். ஆம், மணியன் ஆனந்தவிகடனை விட்டு விலகி 'இதயம் பேசுகிறது' பத்திரிகையைத் துவக்கியபோது, விகடனில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களில் பெரும்பாலோரை தன்னுடன் அழைத்துச்சென்றபோதுதான், பாலன் விழிப்படைந்தார். இத்தனை நாள் பாம்புக்குப் பால் வார்த்திருகிறோம் என்ற உண்மை உறைத்தது. (கார்ட்டூனிஸ்ட் மதனை தன்னுடன் வருமாறு மணியன் அழைத்தபோது அவர் சொன்னது, 'அம்மா பட்டம்மாள் வாசன் கையால் நான் சாப்பிட்டிருக்கிறேன். அந்த உப்பு இன்னும் என் உடம்பில் கொஞ்சம் இருக்கிறது')
இதன் பின் ஆனந்த விகடன் பொன்விழா வந்தது. விகடனில் இருந்து தனக்கு வந்த அழைப்பைப் பார்த்து, 'விழாவில் தனக்கு பெரிய மரியாதை கிடைக்கும், விகடனுக்காக தான் செய்த பல பெரிய விஷயங்கள் அங்கே குறிப்பிடப்பட்டு பெரிதாக மதிக்கப்படுவோம்' என்று நப்பாசையுடன் போன மணியனுக்கு சரியான நோஸ்கட் காத்திருந்தது. ஒரு சாதாரண ஆள் மதிக்கப்பட்ட அளவுகூட மணியன் மதிக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டார். தன் நெஞ்சில் குத்தி விட்டுப்போனவரை அழைத்து வைத்துப்பழிவாங்கினார் வாசனின் புதல்வர் பாலன்.
இதை மந்தில் வைத்துக்கறுவிய மணியன் (இதைப்பற்றி தன் பத்திரிகையிலும் புலம்பியிருந்தார்), தனக்கு 'வேண்டியவரின்' ஆட்சி நடப்பதை வைத்து, ஒரு சாதாரண கார்ட்டூன் வெளியிட்டமைக்காக விகடன் ஆசிரியர் பாலனைக் கைது செய்து சிறையில் அடைக்க வைத்தார்.
வரலாறுகளை மறைக்க முயன்றோரை வரலாறு மறப்பதிலை.
-
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
உங்கள் பங்கிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் மிக அருமையாக திரு முரளி சாரைப் பின்தொடர்ந்து உண்மைகளை சற்று காட்டமாக மிக மிகச் சரியாகவே பதிந்துள்ளீர்கள். நம் அருமையானவர் தில்லானா...வில் "எனக்கு எந்தெந்தப் பய.........." என்று கூறுவது போல அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டவர்கள் அனைவரும் எந்த கதிக்கு ஆளானார்கள் என்பது வரலாறு அறிந்ததே.
அன்புடன்,
தங்கள் மாணவன் வாசுதேவன்.
-
முரளி சார்,
’முந்தைய தலைமுறை தமிழ் சினிமா வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதுவதற்கு ஆற்றலும் அறிவும் மொழிநடையும் கொண்டவர் நீங்கள் என்பது என் வலுவான எண்ணம் .இதில் எந்த உயர்வு நவிற்சியும் இல்லை ..என்னுடைய இந்த எண்ணம் ஒரு நாள் ஈடேறும் என நம்புகிறேன்.
-