ஈயடிச்சான் copy பேஸ்ட்?
Printable View
கோபால் சார்,
வாசு சார் சொன்னது போல சலிப்புண்டாவது இயற்கை தான். இதை நாங்கள் அடிக்கடி பகிர்ந்து கொள்வோம்.
என்றாலும் இதனைப் பொருட்படுத்தாதீர்கள். சில சமயம் நாம் தான் நிறைய செய்தாயிற்றே, இனி வருபவர்கள் செய்து கொள்ளட்டும் என்ற மனப்பான்மை கூட சில சமயம் சீனியர்களுக்கு ஏற்படக் கூடும். இதுவும் இயல்வானது தான். நாம் தொடர்வோம். நம் பணியை நாம் செய்து வருவோம். பங்கு கொள்பவர்கள் அவ்வப்போது இணைந்து கொள்வார்கள். நமக்கு நடிகர் திலகத்தைப் பற்றி எழுதுவதென்றால் ஆயிரம் பாகங்கள் கூட போதாது. எனவே நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்தில் தொடர்வோம்.
தங்களுடைய ஆய்வேட்டினைப் பொறுத்த மட்டில் தாங்கள் சிறிதும் வருத்தப் படத் தேவையில்லை. பெற வேண்டிய அங்கீகாரம் அதற்குக் கிட்டியே தீரும். நம்முடைய கதம்பப் பதிவுகளில் தங்கள் ஆய்வு சிக்கிக் கொண்டு இனியும் திணற வேண்டாம். பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட எண்ணமே பிரதானம். அது தங்களுக்கு அனுகூலமாகவே உள்ளது.
தொடர்வோம் நம் பணியை. வருவோர் வருவர். கவலை வேண்டாம்.
இனிய நண்பர் கவர்ச்சி எழுத்தர் கோபால்
எங்கள் மீது பாசம் வைத்திருக்கும் உங்களுக்கு நன்றி .
திடீர் தமிழக பயணம் - அதனால் தாமதாமான பதிவுகள் .
அன்புடன்
கவி
கோபால்!
திருப்தியா?
http://ttsnapshot.com/out.php/i58914...6h57m36s13.png
மழலை ஒன்று வெளுத்துக் கட்டுவதைப் பாருங்கள். கட்டபொம்மனின் வசனத்தை தன் மழலைக் குரலால் பேசும் அழகு! அனேகமாக இந்தச் சிறுமியின் தந்தை நடிகர் திலகத்தின் பெரிய ரசிகராக இருக்கலாம். மழலைகளும் மயங்கும் மகா நடிகரின் பேராற்றலை என்ன சொல்ல!
http://www.youtube.com/watch?v=_9bsN...yer_detailpage
ராகவேந்தர் சார்,
ஒரு நூறு முக்கிய படங்களின் original negative restore செய்து ,வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முயற்சியில் ,சில தனியார் அமைப்பை ஈடுபடுத்தி, அவர்களுக்கு இதனால் returns வரும் சாத்தியம் ,assurance கொடுக்க முடியாதா? சிவாஜி productions இதிலுள்ள வியாபார சாத்தியங்களை கர்ணன் மூலம் உணர்ந்திருக்க முடியுமே?
இன்னா கண்ணு அவ்வளவு சுளுவா சொல்லீக்கின. இன்னா வெளையாட்டாக்கீதா...ஒரு படம் காபந்து பண்றதுக்குள்ள தாவு அறுந்து போச்சு. ஒனக்கு 100 படம் பண்ணிகிணுமா...அதுக்கு இன்னா செலவாகும்... எப்படி அலையணும்.. இன்னான்னா பண்ணிக்கணும்.. இங்க அல்லாருக்கும் குடும்பம்குட்டி கெடயாதா....எங்க போயி 100 படத்த தேடிகினு வர்றது...ஒன்ன மாதிரி ஒன்டிகட்டயா கெடந்தாலும் பரவால்ல. இன்னா ஆச்சு ஒனக்கு.... படா பேஜாராப் பூட்டுதே... கிண்டலடிசிகினு கெடக்கிறியா.... அஆங்...:banghead: