http://i59.tinypic.com/ff3150.jpg
Printable View
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு
மக்கள் திலகத்தின் படங்களின் ஒரு வரி விமர்சனத்திற்கு ஏற்றவாறு வீடியோ காட்சிகளை பதிவு செய்து வருவதற்கு
நன்றி .
கண்ணன் என காதலன் இரண்டாவது வாரத்தில் வெற்றி நடை போடுவது பற்றி இனிய தகவல் அளித்த திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் ''நவரத்தினம் '' இன்று 37 ஆண்டுகள் நிறைவு நாள் .
5.3.1977 அன்று திரைக்கு வந்த படம் .
http://i59.tinypic.com/2vv3r6e.jpg
மக்கள் திலகம் - ஏ.பி. என் கூட்டணி என்ற அறிவிப்பு வந்தவுடன் பலரும் வியப்படைந்தார்கள் .
நவரத்தினம் பட பூஜை அன்று வியாபார ரீதியாக மாபெரும் தொகையாக விற்பனை ஆனது .
நவரத்தினம் படத்தை வரை மக்கள் திலகம் தன்னுடைய அருமையான நடிப்பில் ஜொலித்தார் .
குன்னக்குடி - இசை - பாடல்கள் ஏமாற்றம் . இந்த ஒரு குறை தவிர படம் மிகவும் நன்றாக இருந்தது .
மானும் ஓடி வரலாம் ... என்ற பாடல் இடம் பெறவில்லை .
மக்கள் திலகம் அறிமுக காட்சியில் இடம் பெற்ற அத்தனை சாகசங்களும் கண்ணுக்கு விருந்து .
ஷெட்டியுடன் மோதும் சண்டை காட்சி சூப்பர் .
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் - இனிய பாடல் .
மொத்தத்தில் நவரத்தினம் - மக்கள் திலகத்தின் வித்தியாசமான நல்ல படம் .
courtesy - net
இன்னொரு இந்திய நண்பர் மூட்டை கட்டத் தொடங்கியிருக்கிறார். மகள் முதுகலைக் கல்லூரியில் சேர்ந்த இரண்டே மாதங்களில் நட்புத் தம்பதிகள் இருவரும், "போதும்டா ஆசாமி! (நாத்திகத் தம்பதிகள்) இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்ததும் சேர்த்ததும் போதும்" என்று வேலையை உதறினார்கள், வீடு கார் என்று தொடங்கி ஐபாட் வரை அத்தனை வசதிப் பொருட்களையும் விற்றார்கள் (கராஜ் சேல் எனும் சுலபமான சந்தைமுறை இன்னும் இந்தியாவைத் தொடவில்லை என்று நினைக்கிறேன்). பெண் பெயரில் பாதிப் பணத்தைப் போட்டார்கள், மீதிப்பணத்தில் கோயமுத்தூர் அருகே முதியோர் இல்லம் ஒன்றில் இடம் வாங்கினார்கள்.. கிளம்பத் தயாராகி விட்டார்கள். புதுவருடத்தை இந்தியாவில் கொண்டாடப் போகிறார்கள். நீடித்த மின்சாரத் தடையுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க நினைவாக ஒரு சிறிய விழா வைத்து அழைத்திருந்தார் நண்பர். போனதும் என்னை ஆறத்தழுவி, "எல்லாம் முடிஞ்சாச்சு அப்பாத்துரை" என்று என் பெயர் உடைய அழுத்தினார். "இனிமே பொண்ணு கல்யாணம் கில்யாணம்னு ஏதானு செஞ்சுகிட்டு, அதும் கல்யாணத்துக்குக் கூப்பிட்டா இங்கே வருவோம்.. இல்லாட்டி அவ்ளோ தான்.. இந்தப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே.." என்றார். எனக்கு மட்டுமே கேட்டப் பெருமூச்சுடன் வாழ்த்தினேன்.
விழாவுக்கு வருகிறேன். இந்த ஊரில் நட்புக்கூட்டம் சேர்ந்தால் 'இந்த மேரதான் அந்த மேரதான்' என்று ஏதாவது செய்வார்கள். இது ஓடுகிற மேரதான் அல்ல. சொல்கிறேன்.
நண்பர் எம்ஜிஆர் ரசிகர். ஊருக்குக் கிளம்புமுன் தன் முப்பது வருட ஆசை ஒன்றைத் தீர்த்துக் கொண்டார். எம்ஜிஆர் சினிமா மேரதான் ஒன்றைத் தன் ஊர்திரும்பல் விழாவின் மையக் கொண்டாட்டமாக அமைத்தார் (மோகன்குமாரின் பதிவுப்பெயர், பொருள் புரிந்து நெற்றியில் அடித்தது).
ஒரு புறநகர் சினிமா அரங்கை வார இறுதிப் பேகேஜ் என்று புதன் கிழமை முதல் ஐந்து நாள் வாடகைக்கு எடுத்திருந்தார் நண்பர். அவர் அழைத்திருந்த சுமார் இருபது குடும்பங்களும் தினம் அரங்கிலேயே தஞ்சம். அரங்கில் இரண்டு சினிமா தியேட்டர்கள். இரண்டு தியேட்டரிலும் தினம் சுமார் பதினெட்டு மணி நேரம் எம்ஜிஆர் படங்கள் ஓட, அரங்கிலேயே விருந்து, அரட்டை, விடியோ விளையாட்டு, கேரம், சீட்டாட்டம்... எங்கிருந்தோ பல்லாங்குழி புளியங்கொட்டை கூட கொண்டு வந்திருந்தார்கள்!.. அண்மை ஓட்டலில் ஐந்து ரூம்கள் குட்டித்தூக்கம் மற்றும் பிற வசதிகளுக்கு என அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.
எத்தனையோ வருடங்கள் கழித்து முதல் வரிசையில் அமர்ந்து விசில் அடித்தேன். சுகமான அனுபவம். ஒரு அமெரிக்க நண்பர் அத்தனை எம்ஜிஆர் படங்களையும் பார்த்தார். கிளம்பும் பொழுது தமிழ் சினிமா ஆச்சரியம் அவர் கண்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. "you guys make films, we only make movies" என்றார் எங்களிடம். புரிந்தது போல் தலையாட்டினோம்.
வித்தியாசமான thanksgiving. அரட்டை அமர்க்களத்தில் எங்கள் தூக்கம் போனது. எனினும் நட்புத் தம்பதியருக்குப் பெரும் நிறைவு. அதுதான் முக்கியம்.
continue...
இந்த வாரம் அத்தனை எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்று தீர்மானமானது.
சரோஜாதேவியே எம்ஜிஆருக்கு மிகப் பொருத்தமான ஜோடி. 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும் விதிவிலக்கு.
இணை நடிகைகள் பாரதி, வாணிஸ்ரீ, மற்றும் லதா. தேவிகா சற்று ஆச்சரியமான பொருத்தம். எம்ஜிஆர் அருகில் இருந்தாலும் பானுமதி, சாவித்திரி இருவரும் ஏதோ தனியாக நடிப்பது போலிருந்தது.
பின்னாள் படங்களைப் பார்க்கையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பலமா அல்லது ஜெ எம்ஜிஆருக்குப் பலமாக இருந்தாரா என்றக் கேள்வி அடிக்கடித் தோன்றியது.
பாடல் காட்சிகளில் சரோஜாதேவி சளைக்காமல் எம்ஜிஆரையே கணக்கு பண்ணுகிறார்! எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார். பத்மினி எம்ஜிஆர் படங்களில் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகிக்கு அட்டகாசமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கேஆர்விஜயா ஜெயலலிதா இருவருடனும் எம்ஜிஆர் 'நெருங்கி' நடித்திருக்கிறார்.
வில்லன்களில் நம்பியாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறார்.
எம்ஜிஆரைப் போல் நடனமாட தமிழ்ச் சினிமாவில் யாரும் இல்லை. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' போல் ஒரு வேக நடனக் காட்சியை நான் பார்த்ததில்லை என்றே நம்புகிறேன். விஜயலட்சுமியுடன் போட்டியாட்டம் சில நேரம் கேமரா ட்ரிக்கோ என்று நினைக்க வைத்தது. நடனத்தை ரசித்த இன்னும் சில பாடல்கள் 'பல்லவன் பல்லவி', 'நல்ல வேளை'.
ஜெமினி சிவாஜியைப் பார்க்கையில் எம்ஜிஆர், பாடலுக்கேற்ற உடையலங்காரத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'வனமேவும் ராஜகுமாரி' பாட்டில் ராஜேந்திரனுக்குத் துணைவரிகளைப் பாடுகிறார் என்றாலும் எம்ஜிஆரின் உடையும், நடன அசைவில் பெண் பாவனையும் மறக்கவே முடியவில்லை.
கேவிஎம் எம்ஜிஆருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மிகவும் ரசித்த கேவிஎம் பாடல்கள்:'உன்னை அறிந்தால்', 'அழகுக்கு மறு பெயர்'. இரண்டு பாடல்களிலும் சவுன்டுக்கு ராஜன் சொக்க வைக்கிறார். எம்எஸ்வி எம்ஜிஆருக்கு உபரியாக உழைத்தார் என்றுச் சொல்வார்கள். உண்மைதானோ என்றுத் தோன்றியது. அனைத்து டூயட்களிலும் டிஎம்எஸ்-சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். 'தஞ்சாவூரு சீமையிலே', 'நாங்க புதுசா' பாடல்களில் சுசீலா டிஎம்ஸை லபக் என்று விழுங்கியிருக்கிறார்.
சற்றும் எதிர்பாராமல் ரசித்த படம்: பெற்றால் தான் பிள்ளையா.
எம்ஜிஆர் டூயட்களில் நிறைய 'சிப்பி/முத்து' உவமை வருகிறது. அதற்கு ஏற்ற நடன அசைவுகள் தணிக்கைக்குத் தப்பியது ஆச்சரியம். 'நீ வெட்கத்தை விட வேண்டும், நான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்' மிகவும் ரசித்த டூயட்கள்: 'பாட்டு வரும்', 'நாணமோ'. விடாமல் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்த டூயட்: 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே'.
தனிப்பாடல்களில் 'ஒரு கை பார்ப்பேன்' என்ற பொருள் அடிக்கடி வருகிறது. 'உலகம் பிறந்தது எனக்காக' 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' 'வெற்றி மீது வெற்றி' என எம்ஜிஆருக்கு அமைந்தாற்போல் கொள்கை/தனிப்பாடல்கள் பிறருக்கு அமையாதது ஆச்சரியம். பார்த்ததில் மிகவும் ரசித்தத் தனிப்பாடல்கள்: 'போயும் போயும்', 'தைரியமாகச் சொல்'.
கணக்கில்லாமல் எம்ஜிஆர் படம், பாட்டு, நட்புடன் அரட்டை என நாட்கள் போனதே தெரியவில்லை. நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை. அதுதான் முக்கியம்.