“ஹவுஸ் புல் “ நினைவுகள்
பகுதி மூன்று..
க.தியேட்டர் வழியாகவும், மேம்பாலம் வழியாகவும் செல்ல முடிந்த தியேட்டர்கள் சினிப்ரியா மினிப்ப்ரியா சுகப் ப்ரியா..
இந்த சினிப்ப்ரியா மதுரையில் முதன்முதல் 70 எம் எம் தியேட்டர்..மேக்கன்னாஸ் கோல்ட் தான் முதல் படம்.. ஆனால் பார்க்கச் சந்தர்ப்பமில்லை..இன்ஃபேக்ட் தியேட்டர் கட்டி மூன்றாம் வருடத்தில் தான் அந்தத் தியேட்டர் பக்கமே போக முடிந்தது என்னால்..
சினிப்ரியாவில் வைதேகி காத்திருந்தாள், மேக்னிஃபிஷியண்ட் செவன் எனப் பார்த்திருக்கிறேன்..மினிப்ப்ரியா மதுரையில் முதல் ஏ.சி தியேட்டர் பார்த்த படங்களில் முக்கியமானது பதினாறு வயதினிலே
பின் அண்ணா நகர் சுந்தரம் தியேட்டர்..புதியதாய்த் திறந்தது முதல் பார்த்திருக்கிறேன்..அதுவும் என் கல்லூரி விமான நிலையத்திற்கு அருகில் இருந்தது..அங்கிருந்து பஸ்கள் தாவித்தாவிப் பிடித்து இங்கு வந்து பார்த்திருக்கிறேன்.. பார்த்தவை ஆண்பாவம், ஹீரோ (ம்ம் மீனாக்ஷி சேஷாத்ரி டிங்க் டாங்க்) இன்னும் பல..
சரி..ரொம்ப ஆத்துக்கு அங்கிட்டு சுத்தியாச்சு..இந்தப் பக்கம் தேவிதியேட்டரின் வலதுபுறம் ரோட்டில் சென்றால் கர்டர் பாலம் ஆரப்பாளையம் க்ராஸ்..குறுக்கில் சென்றால் பரமேஸ்வரி தியேட்டர் (ஷோலே யாதோன்கி பாராத் புகழ்)..
பின் அந்தக் க்ராஸ் ரோட்டிலேயே நேரே சென்று தேம்பாவணி வளைந்தால் மதி தியேட்டர்.. அங்கிட்டு பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே..
பின் அதேரோட்டில் வந்தால் அரசரடி வரும்.ம்ம்
ஆரப்பாளையத்திலிருந்து நேரே சென்று இடதுபுறம் திரும்ப குரு தியேட்டர்..பார்த்த் மறக்க முடியாத படங்கள் பயணங்க்ள் முடிவதில்லை முதல் மரியாதை
விட்டுப்போன தியேட்டர்க்ள் என நினைத்தால் ஷா, மது ஏசி, இங்கிட்டு நட்ராஜ், ஜெகதா… குருதியெட்டரிலிருந்து மாப்பிள்ளை வினாயகர் மாணிக்க வினாயகர்.. மதுரைக்குள் இருந்தும் போயே இராத சிட்டிசினிமா, இம்ப்பீரியல்.. அப்புறம் பஸ்ஸ்டாண்ட் அருகில் விக்டோரியா எட்வர்ட் ஹாலின் அருகில் ரீகல் ( எவ்ளொ இங்க்லீஷ்படங்கள், தமிழில் எதிரொலி தான் பார்த்தேன்)
சாந்தி தியேட்டரிலிருந்து வடுகக் காவல் கூடத் தெருவில் வளைந்து (ஆம் ஐ கரெக்ட் முரளிசார்) இடது புறம் திரும்பினால் ஏஷியாவின் பிக்கஸ்ட் எனச் சொல்லப் படும் தங்கம் தியேட்டர்.. ஹப்பா எவ்ளோ படங்கள் அங்கு சின்ன வயது முதல் கல்லூரி வரை..லிஸ்ட் போட்டால் தீபாவளி, தேர்தல் வெற்றி, ஜாமீன் வெற்றி என க் கொண்டாட்டத்தில் வெடிக்கும் சரவெடிகளை விட நீளமாகிவிடும்..ம்ம் தூறல் நின்னு போச்சு, ஸ்பை ஹூ லவ்ட் மி,, தி டீப், காற்றினிலே வரும் கீதம்..முத்து எங்கள் சொத்து ( ஒரு கேர்ள் ஃப்ரண்ட்டுடன் சென்ற நினைவு ஹி ஹி) என..
இப்படியாக தியேட்டர்களிலேயே ஊறி வளர்ந்த சி.க மதுரையை விட்டு பலவருடங்கள் ஆகிடுச்சாக்கும்.. பலவருடங்களும் சீமையிலேயே (?!) வேலை பார்த்த்தால்.. வீடியோ சிடி டீவிடி என்ப் போய் தியேட்டர் அனுபவம் மங்கித் தான் போய்விட்டது..எவ்வளவோ ஸோஃபிஸ்டிகேட்டட் தியேட்டர்க்ள் வந்தும் கூட ..இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே…அது ஏன் ஏன் நண்பனே…
மதுரையைப்பார்த்து கிட்டத்தட்ட இருபது வருடமாயிற்று..இதில் சொன்ன தியேட்டர்களில் எவ்வளவு தற்காலத்தில் உள்ளன என்று கூட எனக்குத் தெரியாது.. எல்லாம் என் மனசுக்குள் அப்படியே மாறாமல் இருக்கின்றன..
கட்டுரை சுவாரஸ்யக் குறைவின் அதன் முழுமுதற்பொறுப்பு என்னைச் சாரும் என்றாலும் பார்ட் ரெஸ்பான்ஸிபிளிட்டி ராகவேந்திரர் சாரையே சாரும் (பின் கீற்றுக்கொட்டகை வெற்றுவெளியில் கட்டியது அவர்தானே) எனச் சொல்லி நான் இப்போது எஸ்ஸ்ஸ்கேப்..!
(முற்றிட்டேன்.. இனி நிம்மதிப் பெருமூச்சு நீங்க்ள் விடலாம் )