நிச்சயமாக மேலும்பல நம்முடைய குழு அங்கத்தினர்கள் ஒவ்வொருவராய்த் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு
கிடைக்கும் என நினைக்கின்றேன்
Printable View
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்த காலப்பகுதியில்Quote:
** இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மனின் ஒலிச்சித்திரம்
ஒலிபரப்பப்படாத பட்டி தொட்டியே கிடையாது
Quote:
** தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.
பல விடயங்களுக்கு நம்மன்னன் முன்னோடிQuote:
** "திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.
திட்டமிடாமல் தானாக கிடைத்தவை
திட்டமிட்டிருந்தால்.......?
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை வெளியான முதல் நாள் அன்று நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
நாம் கடந்து வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றில் சிலவற்றில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருப்பதால் அவைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
1970 முதல் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவும் அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 2 மகாத்மாவின் பிறந்த நாளையும் சேர்த்து கலை அரசியல விழாவாக அகில இந்திய சிகர மன்றம் கொண்டாடிக் கொண்டிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். சென்னையை தாண்டியும் அதை நடத்த வேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க அந்த வருடம் (1972) அந்த விழாவை கோவையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த ஸ்தாபன காங்கிரஸில் ஒரு பிரிவினர் குறிப்பாக நெடுமாறனின் ஆதரவாளர்கள் மதுரையில் காங்கிரஸ் மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கு பலத்த அழுத்தமும் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த நேரம் என்று சொன்னால் செப்டம்பர் முதல் வாரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்டில் மதுரையில் நடந்த திமுக மாநாட்டிற்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று அந்த கோரிக்கைக்கு காரணம் சொன்னார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தேதிகள் அதே அக்டோபர் 1,2.
பொதுவாகவே அகில இந்திய சிகர மன்றமோ அல்லது நடிகர் திலகமோ சிகர மன்றத்தின் சார்பில் இது போல் ஒரு மாநாடு அல்லது விழா நடத்துகிறோம் என்று அழைத்தால் உடனே மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தலைவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார். 1970,71 பிறந்த நாள் மாநாடுகளும் சரி 1970 ஜூலையில் கயத்தாறில் நடைபெற்ற கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவும் சரி அதற்கு உதாரணங்கள். .அது போன்றே பெருந்தலைவர் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அழைத்தால் அந்த விழாக்களில் நடிகர் திலகமும் கலந்துக் கொள்வார். அன்னை ராஜாமணி அம்மையார் மறைந்தபோது நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்துக் கொண்டது பற்றி ஏற்கனவே பேசினோம்.
இதற்கு உதாரணமாய் மற்றொரு நிகழ்வையும் இங்கே சொல்ல வேண்டும். 1970 செப்டெம்பரில் மயிலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மயிலாப்பூர் சித்ரகுளம் அருகே மகாத்மாவின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதை திறந்து வைப்பதற்காக பெருந்தலைவரை அணுகியபோது அவர் நான் வருகிறேன், அதே நேரத்தில் நீ சிவாஜியை போய் பார்த்து இந்த விழாவிற்கு கூப்பிடு என்று அன்றைய தினம் மயிலை வட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மயிலை பெரியசாமியிடம் சொல்ல அவர் சென்று நடிகர் திலகத்தை அழைக்க பெருந்தலைவர் சொல்லி இவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் தனக்கு இருந்த படப்பிடிப்பை அட்ஜஸ்ட் செய்து அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார். இப்போது மறைந்து விட்ட திரு பெரியசாமி இரண்டு வருடங்களுக்கு முன்னால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடிகர் திலகத்தின் நினைவுநாள் அன்று நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்தபோது இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டார். .
எதற்கு இதையெல்லாம் சொல்கிறோம் என்றால் நடிகர் திலகம் விழா என்றால் பெருந்தலைவர் நிச்சயம் கலந்துக் கொள்வார். ஆகவே கோவையில் சிகர மன்றம் சார்பாக நடக்கவிருந்த விழாவிலும் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் அதே தேதிகளிலேயே ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு மதுரையில் என்றவுடன் ஒரு குழப்பம் ஏற்பட்டது. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் அது மேலும் குழப்பத்தை உருவாக்கலாம் என்பதனால் நடிகர் திலகம் தன்னாலோ அல்லது தனது பெயரால் இயங்கும் மன்றதினாலோ அப்படி ஒரு நிலைமை உருவாவதை விரும்பாத காரணத்தினால் மன்ற விழாவை ஒரு வாரம் தள்ளி வைக்க உத்தரவிட்டார்.
சிகர மன்ற மாநாடு தேதி மாற்றப்பட்டதால் நெடுமாறன் தலைமையேற்று நடத்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நடிகர் திலகத்திற்கு முறையான அழைப்பு இல்லை. எப்போதும் நடிகர் திலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய நெடுமாறன் தஞ்சை ராமமூர்த்தி அணி அன்றும் அதே போல் நடந்துக் கொண்டது.
ஆனால் நமது ரசிகர்கள் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் பெருந்திரளாக மாநாட்டில் கலந்துக் கொண்டனர். ஆட்சியையும் அதிகாரத்தையும் பண பலத்தையும் படோபத்தையும் பயன்படுத்தி திமுக மாநாடு நடைபெற்றது என்று சொன்னால் அந்த பின்புலங்கள் ஏதுமின்றி தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவோடு காங்கிரஸ் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. மிகுந்த பொருட்செலவில் அலங்கார வளைவுகள் திமுக மாநாட்டிற்கு அமைக்கப்பட்டபோது வெறும் மூவர்ண துணியில் இங்கே வளைவுகள் அமைக்கப்பட்டன.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன். மேலமாசி வீதியில் ராஜேந்திரா காப்பி கடைக்கு எதிராக பொன்.முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று இருந்தது. திமுக மாநாட்டிற்கு அந்த இடத்தில ஒரு பிரமாண்டமான ஆர்ச் அமைக்கப்பட்டு ஒரு பெரிய உலக உருண்டை தொங்கவிடப்பட்டிருந்தது. அப்படி எதுவும் செய்யாமல் அதே மேலமாசி வீதியில் நான் குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்றால் வரக்கூடிய ஐயப்பன் கோவில் அருகே நெடுமாறனின் அலுவலகம் அமைந்திருந்த இடத்தில அமைக்கப்பட்ட மூவர்ண துணியில் எழுதப்பட்ட "தென்பாண்டி மதுரை இது நெடுமாறன் கோட்டை இது" என்ற வளைவு பெரிதும் பாராட்டப்பட்டது.
மாநாட்டின் முதல் நாள் மாலை அக்டோபர் 1 ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தை தெற்கு மாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்ட மேடையிலிருந்து பெருந்தலைவர் பார்வையிட்டார். அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நானும் என் கசினும் அந்த இடத்திற்கு அருகில் போக முயற்சித்தோம். ஆனால் அந்த கூட்டத்தை தாண்டி எங்களால் போகவே முடியவில்லை. மேலமாசி வீதியில் அமைந்திருந்த உடுப்பி ஹோட்டல் வரைதான் [இப்போது அந்த இடத்தில போத்தீஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இருக்கிறது] போக முடிந்தது. கூட்டம் நெருக்கி தள்ள மூச்சு திணறி விட்டது. அதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து திரும்பி விட்டோம். நடிகர் திலகம் வரவில்லை என்ற ஒரு குறையை தவிர்த்தால் மற்றபடி மாநாடு சிறப்பாகவே நடைபெற்று முடிந்தது.
(தொடரும்)
அன்புடன்
கீழ்வானம் சிவக்கும்
கண் மருத்துவராக நடிகர்திலகம்.
மகனாக சரத்பாபு.
மருமகளாக சரிதா.
பார்வையற்றவராக ஜெய்சங்கர்.
தங்கவேலை செய்யும் தொழிலில் அதனுடன் சம்பந்தப்பட்ட சன்னக்கம்பி பட்டறைகள் என்றுஒரு பிரிவு உள்ளன.சன்னக்ககம்பி பட்டறை என்றால் தங்கத்தை மெல்லிய கம்பிகளாக மாற்றித்தருவதுதான்.சிறிய அளவுள்ள தங்கத்தை கூட கம்பியாக அடித்து அடித்து பல அடி தூரம் சன்னமான கம்பியாக இழுக்க முடியும்.வேறு எந்த உலோகத்தையும் இவ்வளவு சன்னமாக மெல்லியதாக நீட்டமுடியாது.அதுபோல மெல்லிய உணர்வுகளைகதைக்கு இடத்திற்கு தகுந்தவாறு முகத்தில் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அப்படி,மெல்லிய உணர்வுகள் படம் முழுவதும் வியாபித்திருக்கும்.இளமைக்கால நடிப்பு ஒரு வகை.அதுவே வயதாக ஆக ஆகமென்மையான நடிப்புகள்கூட விஸ்வரூபங்களாக வெளிப்படுத்தப்பட்டன.வேறு நடிகர்களால் என்றுமே தொட முடியாத நிலைப்பாட்டில் இருந்த காலகட்டங்கள்.அப்படிப்பட்டகாலகட்டத்தில்வந்த படங்களில் ஒன்றுதான் இது.
ஆக்ரோஷமான நடிப்பை எல்லாம் காலில் போட்டு மிதித்து மென்மையான நடிப்பில்
கொடி கட்டிப் பறந்த படம்.
இப்படி ஒரு டாக்டரை ஊரில் உலகத்தில் நாம் பார்க்க முடியுமா?என்று ஏங்க வைக்கும் பாத்திரபடைப்பு .
அந்த பாத்திர படைப்பு சாத்தியமானது அவர் முலம் வெளிப்படுத்தப்பட்ட நடிப்பு.
கதைசுருக்கம்:
part1
நடிகர்திலகத்தின் மகன் சரத்பாபு.
ஜெய்சங்கரின்
தங்கையைகாதலிப்பது போல் நடித்துஅந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டுஏமாற்றிவிட்டு ஊருக்கு வந்து விடுகிறார்.அந்தப்பெண் மானம் கருதி தற்கொலை செய்து விடுகிறார்.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப்பின்ஒரு கடிதம் மூலமாகதற்கொலைக்கு காரணம் ஜெய்சங்கரால் தெரிந்து கொள்ளப்படுகிறது.கடிதத்துடன் சரத்பாபுவின் போட்டோவும்ஜெய்யின் கைக்கு கிடைக்கிறதுதன் தங்கையின் மரணதுக்கு காரணமானவனை பழி தீர்க்க வேண்டி,அந்த போட்டோவையும் அரிவாளையும் எடுத்துக்கொண்டு கண் மருத்துவர் நடிகர்திலகத்தை பார்க்க வருகிறார்.பையில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு தனக்கு கண்பார்வை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.நடிகர்திலகமும் சமாதானப்படுத்தும் வகையில் கண்பார்வை தர ஒப்புக்கொள்கிறார்.
part2
நடிகர்திலத்தின் மருமகளாக சரிதா.மாமனாரின் அன்புடனும் கணவரின் பாசத்துடனும் சந்தோசமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சமயத்தில்
சரிதாவுக்கு ஏற்படும் ஒரு நோய் அவரது உயிருக்கே பாதுகாப்பில்லை,6மாதத்திற்குள்எந்த நேரமும் இறக்க நேரிடலாம்என்கிற நிலை.சின்ன அதிர்ச்சி ஏற்பட்டாலும் உயிர் இழக்க நேரிடலாம் என்ற காரணத்தால் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார் நடிகர்திலகம்.
part1 Part2 ஆகிய இரண்டின் முடிவுகளும் ஒன்றாக கலந்த நிலையில் இப்பொழுது,.,
ஜெய் க்கு நடிகர்திலகத்தின் மேல் நம்பிக்கை பிறக்கிறது.கண் ஆபரேசனுக்கு பிறகு போட்டோவை வாங்கிகொள்வதாகவும் அதுவரை பத்திரமாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறார.ஆபரேசனுக்கு பின் போட்டோவில் உள்ள நபரை தானே கொண்டு வந்துகண் முன் நிறுத்துவதாகவும் வாக்கு கொடுக்கிறார்.அதன் பின்னர் நடிகர்திலகம் போட்டோவை பார்க்கும்படி நேரிடுகிறது.
அதிர்ச்சி
அதிர்ச்சி
அதிர்ச்சி
போட்டோவில் மகன் சரத்பாபு.
யாருக்கும் தெரியாத வண்ணம் போட்டோவைகிழித்து குப்பைக்கூடையில் எறிந்து விடுறார்.
இதை சரிதா பார்த்துவிடுகிறார்.இதற்கு பின்னர் நடக்கும் சம்பவங்கள்சரிதாவுக்கு நடிகர்திலத்தின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது.ஜெய் கொடுத்த போட்டோவைஅவர் ஏன் கிழித்து எறிய வேண்டும்?மேலும் அவருடைய நடவடிக்கைகள் ஜெய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவது போல் தெரியவில்லையே?என்றுசரிதாவின் மனம் குழப்பமும்,சந்தேகமும் கொண்ட நிலையில் தவிக்கிறது.சின்ன அதிர்ச்சி கூட தன் மருமகளுக்கு தெரியக்கூடாது என்னும் நிலையில்நடிகர்திலகம் அந்த விஷயத்தை மறைக்க எடுத்துக் கொளளும் முயற்சிகளே சரிதாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.இந்த சூழ்நிலையில் தான் தன் எண்ணக் குமுறல்களைசரிதா கேட்பதாகவும் நடிகர்திலகம்மறைமுகமாகவும்
சொல்வதாகவும் இந்தப்பாடல் படத்தில் வருகிறது.
சுசீலா:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா?
tms:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
சுசீலா:சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில் காவலில் வைத்தாய் அன்றோ!
Tms: மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு வரைமுறை கிடையாது அன்றோ! அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு சகலமும் நன்றே அன்றோ! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? (கண் கண்ட தெய்வமே)
பாடலில் சற்று கடினமான வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கும்.தமிழும் அதன் அர்த்தம் விளங்கும்படியான உச்சரிப்பும் கொண்ட பாடகர்களால் மட்டுமே இந்தப்பாடலை பாட முடியும்.சுசீலாவேதுண்டுகள் இரண்டாக சூரனை என்பதில் உச்சரிப்பில் பலம் குறைந்திருப்பது தெரிகிறது.(10பேரை வைத்து சோதனை செய்ததில் அறிந்த முடிவுஇது) TMS இந்த விசயங்களில் சூறாவளி.
சுசீலா: காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன் மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!
tmsபிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய) விருந்து வைத்தான் கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான் இறைவன் அருள்ஜோதியே!
சுசீலா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!
tmsமேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!
சுசீலா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!
tms:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!
இருவரும்:கண் கண்ட தெய்வமே! கை வந்தகள் செல்வமே! முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா!
பிரமாண்ட காட்சிகள் அரங்கங்கள் வண்ண வண்ண ஆடைகள்வெளிநாட்டு படப்பிடிப்பு இல்லாமலேயே ஒரு பாடலை அதற்கு மேலாக ரசிக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம்
கதையின் முடிவைTV OR DVD யில் காண்க
Sadagoban srinivasagobalan
என்பவரின் பக்கத்திலிருந்து.,
அவருக்கு மிக்க நன்றி
http://i1065.photobucket.com/albums/...ps0yhl95ve.jpg
http://i1065.photobucket.com/albums/...psrwovhc2a.jpg
http://i1065.photobucket.com/albums/...ps0wlvdp9b.jpg
http://i1065.photobucket.com/albums/...ps2dfowon9.jpg
http://i1065.photobucket.com/albums/...psgwfdsknl.jpg
http://i1065.photobucket.com/albums/...psijogcinq.jpg
http://i1065.photobucket.com/albums/...psatg0cidz.jpg
Fb
S S G
http://i1065.photobucket.com/albums/...psv5nkikoo.jpg
http://i1065.photobucket.com/albums/...psbztpvst6.jpg
http://i1065.photobucket.com/albums/...ps1etsmp98.jpg
http://i1065.photobucket.com/albums/...psbvjv42b8.jpg
http://i1065.photobucket.com/albums/...ps8psmjpxs.jpg
http://i1065.photobucket.com/albums/...ps6dxfhmhj.jpg
http://i1065.photobucket.com/albums/...psxrskhajn.jpg
http://i1065.photobucket.com/albums/...pshsbeqipl.jpg
http://i1065.photobucket.com/albums/...psfowus9hc.jpg
http://i1065.photobucket.com/albums/...ps0wxcwjwz.jpg
http://i1065.photobucket.com/albums/...pslacxcdco.jpg
[IMG]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_143867
1208383_zpskykxhmyz.jpg[/IMG]
http://i1065.photobucket.com/albums/...psthw7prpa.jpg
நான் ரசித்த திலகத்தின் 'திருப்ப'க் காட்சி.
http://www.filmibeat.com/img/popcorn...uppam-6893.jpg
ராஜசேகரும், ராதாவும் காதலர்கள். ஆனால் விதி ராதாவின் மாமா ரூபத்தில் கொடுமையாக சதி செய்ய, ராதா தன்னை மோசம் செய்து விட்டாள் என்று தவறாக நம்பி ('குலமகள் ராதை' போல) ராஜசேகருக்கு ராதாவின் மேல் இருந்த காதல் கோபமாக மாறி, மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது .
15 வருட காலங்கள் உருண்டோட, ராஜசேகர் இப்போது ஒரு உயர் போலீஸ் அதிகாரி. போலீஸ் சிங்கம்.
ராஜசேகர் என்றாலே அது நம் தலைவருக்கே மட்டுமே பொருந்தக் கூடிய, நம் அனைவரையும் கவர்ந்த, நமக்கே சொந்தமான ரம்மியப் பெயர் அல்லவா!
நடிகர் திலகம் ராஜசேகராக. அவர் காதலி ராதாவாக சுஜாதா.
சுஜாதாவை அவர் மாமன் கே. கண்ணன் குடிகார சுதர்சனுக்குக் கட்டிக் கொடுத்து விட, ராதா வாழ்வைத் தொலைத்து, மேடைகளில் பாடி, கண்டவர்களுடன் கை கோர்த்து ஆடி, விதியே என்று வாழ்க்கையை ஓட்டுகிறாள். அவள் இப்போது நடுத்தர வயது மங்கை. மானத்தோடு வாழ்ந்தால் கூட, சமுதாய வீதியில் அவள் கேவலமான ஒரு பெண். சிவப்பு விளக்கு.
நடிகர் திலகத்தை தனது 25-ஆவது திருமண நாள் விழாவிற்கு அழைக்க வருகிறார் அவரின் கல்லூரி கால நண்பர் வில்லன் ஜெய்சங்கர்.
நடிகர் திலகமும் சம்மதித்து பார்ட்டிக்குப் போக, அங்கே அவர் எதிர்பாராவிதமாக அதிர்ச்சியடையும் அளவிற்கு பழைய காதலி சுஜாதா மேடையில் பாடுகிறார் கையில் மைக்குடன். சுஜாதாவும் நடிகர் திலகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைய, இருவர் நெஞ்சிலும் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். பழைய நினைவுகள் இருவர் நெஞ்சங்களையும் கிளற, பாடலின் அர்த்த பரிமாற்றத்தில் உள்ளுக்குள்ளே இருவரும் சொல்லொணா வேதனை அடைகிறார்கள்.
இன்னும் நடிகர் திலகத்தின் மேல் தான் கொண்ட காதலையும், தான் தன் மாமனால் வஞ்சிக்கப்பட்டதையும், பிணமாய் தான் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தான் பாடும் பாடலில் ஜாடையாய் உணர்த்துகிறார் சுஜாதா.
'ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய்ச் சேர்ந்தன
காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன?
வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின
பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல?
கதை அல்ல'
(சரியான வரிகள். சுசீலா அம்மாவின் குரலில் அருமையான பாடல்.)
சுஜாதா பாடப் பாட, நடிகர் திலகம் அதிர்ச்சியில் உறைந்திருப்பார்.
'நீ பார்த்தது பெண்மையின் பாதியை
நேரிலே சொல்கிறேன் உண்மையின் நீதியை
காதலன் கண்களில் இன்று
என்னையே நான் கண்டேன்
சுகம் கொண்டேன்'
http://i59.tinypic.com/dvorrl.jpghttp://i61.tinypic.com/4r236f.jpg
என்று சுஜாதா பாடியதும் சுரத்தே இல்லாமல் வெறுப்பின் உச்ச நிலையில் 'தம்' அடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் 'காதலன் கண்களில் இன்று என்னையே நான் கண்டேன்' வரிகளில் தன்னைத்தான் அவள் குறிப்பிடுகிறாள் என்று ஒரு வினாடி சுயநினைவுக்கு வந்து, 'டக்'கென்று தம்மை வாயிலிருந்து எடுத்து, தலை சாய்த்து, கண்கள் கலங்க தவிப்பது அவருக்கே உரித்தானது. மேலே உள்ள திலகத்தின் இமேஜ்கள் அதை உணர்த்தும்.
அடுத்த நாள் ஒரு போன் வரும். அட்டெண்ட் பண்ணினால் எதிர் முனையில் சுஜாதா.
'நேத்து பங்க்ஷனுக்கு வந்தீங்களே...நானும் பார்த்தேனே!'
என்று சுஜாதா போனில் கூற, அதற்கு இவர் படுநக்கலாய்...
'நானும் உன்னைப் பார்த்தேனே' என்று சாடுவது இன்னும் அட்டகாசம். ('உன் அலங்கோலத்தைப் பார்த்தேனே' என்று அர்த்தம்)
சுஜாதா சொல்வதையெல்லாம் 'ம்...ம்'.. என்று கேட்டுக் கொண்டிருப்பார்.
'கேக்கிறீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,
'இது என்ன வாக்குமூலமா'? என்று வெறுப்பை உமிழ்வார். காதலி ஏமாற்றியதாய் நினைத்திருக்கும் கோபம் மாறாமல் இருக்கும். சுஜாதா பேசப் பேச ஒன்றும் பேசாமல் தலையைத் தடவியபடி கேட்டுக் கொண்டிருப்பார். காதலி எதிர்முனையில் அழும்போது மனசும் கேட்காது. கண்கள் தானாகக் கலங்கி, கைகள் தானாக அதைத் துடைக்கும். சுஜாதா இவரை வீட்டுக்கு வரச் சொல்லி கேட்பார்.
http://i60.tinypic.com/2d6s1ls.jpghttp://i57.tinypic.com/qwx376.jpg
நடிகர் திலகம் போலீஸ் அதிகாரி உடுப்பிலேயே சுஜாதா வீட்டுக்குச் செல்வார். இருவர் மட்டும் தனியே நேருக்கு நேர் சந்திப்பார்கள். இரவு நேரப் பின்னணி. பின்னால் 'எனை மறந்து பாடுவேன்' பாடலின் பின்னணி இசை ஒலித்துக் கொண்டிருக்கும். சுஜாதாவின் பார்வையில் பழைய காதலும், பாசமும், அன்பும், சந்தோஷமும் தெரிய, நடிகர் திலகம் கோபப் பார்வையிலேயே இருப்பார். சுஜாதா உள்ளே அழைப்பார். பூட்ஸ் போட்டிருப்பதாக நடிகர் திலகம் சொல்ல, சுஜாதா 'வாங்க..இப்போ இது கோவில் இல்ல' எனும் போது டச்சிங்காகவே இருக்கும்.
பிரமாதமாக கம்பீரத்துடன் நடந்து வந்து, பாக்கெட்டில் கை நுழைத்து, வீட்டை ஒரு தடவை நன்றாக சுற்றி நோட்டமிடுவார். அங்கு பல ஆண்களுடன் சுஜாதா இருப்பது போன்ற புகைப்படங்கள் இருக்கும். வெறுப்பாக அதைப் பார்ப்பவர்,
"என்ன இதெல்லாம்? உன்னுடைய தொழிலுக்குக் கிடைத்த சர்டிபிகேட்ஸா?'
என்று குத்திக் காட்டுவார்.
'கோபமா இருக்கீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,
அப்படியே எரிமலையாய் மாற ஆரம்பிப்பார். வார்த்தைகள் நெருப்பாய் வந்து விழும்.
'கோபமா? உன் மேலயா? எனக்கா? ஓ... ஓ..டேமிட்' என்று இடுப்பில் கைவைத்து சிங்கம் போல கர்ஜனை செய்வார். (தலைவர்னா தலைவர்தான். எந்தக் காலத்திலேயும் கொஞ்சம் கூட நம்மை ஏமாற்றவே மாட்டார். மாறாக இன்னும் வாரி வழங்குவார்.)
'15 வருஷத்துக்கு முன்னால உனக்கும் எனக்கும் ஏதோ உறவு ஒட்டிகிட்டு இருக்கும்னு நெனச்சனே... அப்ப வந்திருக்கணும் கோபம்'...
'எல்லோரையும் போல நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியோட, குழந்தை குட்டியோட, ஏகபோகமா, சொர்க்க வாழ்வு வாழணும்னு நெனச்சுகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் கோபம்'...
'ஒரு உறவு... ஒரு உரிமை... ஒரு குடும்பம்... ஒரு பெருமை... இதெல்லாம் உண்டாகும்னு மனசுக்குள்ளேயே கோட்டை கட்டி, கோட்டை கட்டி சிம்மாசன மகராஜா மாதிரி ஒரு டம்மி ராஜாவா உட்கார்ந்துகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் இந்தக் கோபம்'...
http://i58.tinypic.com/2evrack.jpghttp://i59.tinypic.com/14cuxoj.jpg
('டம்மி ராஜா' சொல்லும் போது வலது கையை மார்புக்குக் குறுக்கே விசிறி வீசிக் காட்டுவார் பாருங்கள். பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும்.)
'என்னவோ கங்கை... பாவத்தை தீர்த்துக்கப் போறேன்னு சொன்னியே... அந்த அழுகைகாகத்தான் இங்க வந்திருக்கேன்'
என்று ரொம்ப ஆத்திரப்பட்டு விடுவார்.
சுஜாதா எதுவும் பேசாமல் தலை கவிழ்ந்து நிற்க, 'கொஞ்சம் அதிகமாகத்தான் பேசி விட்டோமோ' என்று அப்படியே ஆத்திரத்தைக் கொஞ்சம் தணித்து, சுஜாதாவை சுட்டிக் காட்டி,
'ஏய்! லுக் ஹியர்! எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் பதினஞ்சே நிமிஷத்திலே உன்னுடைய பாவ மன்னிப்பு சடங்கை முடிச்சிடு' (இந்த மாதிரி கோப கேலி, கிண்டல்கள் நம்ம தலைவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி)
என்று சொல்லும் போது அமர்க்களப்படுத்தி விடுவார். கோபம் குறைந்தபாடில்லாமல், பரிதாபப்படாமலும் இருக்க முடியாமல் தடுமாற்றத்தை கம்பீரத்துடன் நிலை நிறுத்துவார். ஆத்திரம் தொண்டை அடைக்கும். கண்களும் கலங்கிய நிலையில் இருக்கும் காதலியின் பரிதாப நிலை பார்த்து.
"15 வருஷ கதையை 15 நிமிஷத்துல எப்படிங்க முடிக்கிறது?' என்று சுஜாதா அழ,
கேட்பார் ஒரு கேள்வி நறுக்காக.
'எப்படியா?... 15 வருஷ சிநேகிதத்தை பத்தே நிமிஷத்துல முறிக்கல?!... அதே மாதிரி'...
பழி தீர்ப்பார். இத்தனை வருடம் தனிமரமாய் கஷ்டப்பட்டதற்கு காரணமானவள் எதிரேதானே இருக்கிறாள் என்று வாங்கு வாங்கு என்று வாங்குவார்.
பின் சுஜாதா இவர் தன்னைப் பெண் கேட்க வந்த போது மாமா தன்னைக் கட்டிப் போட்டு விட்டு சந்திக்க முடியாமல் போன கதையைச் சொல்லி, தான் நிரபராதி என்று நிரூபித்து, தான் வலுக்கட்டாயமாக சுதர்சனுக்குக் கட்டி வைக்கப்பட்ட கதையைச் சொல்லி, தினம் அவனிடம் அடி, உதை படுவதாக சொல்லி அழுது, ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் நிலையையும் சொல்லி கலங்க,
அத்தனையும் பொறுமையாய்க் கேட்டு,
'இட்ஸ் ஆல் ரைட்! ஃபர்கெட் இட்' என்று மன்னித்து மனம் நொந்தவராய் நிற்பது பரிதாபம்.
இப்போது வரும் வினை. குடித்துவிட்டு சுஜாதாவின் கணவர் சுதர்சன் என்ட்டர். காலிங்பெல் அடித்தவுடன் சுஜாதா பதறி,
'அவர் ஒரு மாதிரி! குடித்து விட்டு வந்திருக்கார்... ஏதாவது தப்பாக நினைப்பார்... நீங்க பின் பக்கம் போயிடுங்க' என்று நடிகர் திலகத்திடம் சொல்ல,
பேண்டின் இரு பாக்கெட்டுகளிலும் கம்பீரமாக கைகளை நுழைத்தபடி நிற்கும் நடிகர் திலகம்,
'நான்சென்ஸ்! அவன் குடிகாரனா இருக்கலாம்... ஆனா நான் திருடன் இல்ல பின் வழியா போறதுக்கு' என்பார்.
'நான் என்ன தப்பு செய்தேன்?' என்ற கள்ளமற்ற நேர்மை முகத்தில் தெரியும்.
'லெட் ஹிம் கம்... கதவைத் திறந்துவிடு' என்று அங்கேயே நின்றபடி ஆணையிட்டு கர்ஜிப்பார்.
உள்ளே சுதர்சன் நுழைந்து சுஜாதாவை 'அடி அடி'யென்று அடித்து தன்னையும், சுஜாதாவையும் இணைத்துப் பேச, புழுவாய்த் துடிப்பார் நடிகர் திலகம். 'அவள் கணவன் அவளை அடிக்கிறான்... நாம் என்ன செய்ய முடியும்?' என்று அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாதவராய் தவிப்பார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமாகிப் போய்விட, சுதர்சனைத் தட்டிக் கேட்பார். அது கைகலப்பில் முடிந்து எதிர்பாராவிதமாக மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுவார் சுதர்சன்.
அதைப் பார்த்து 'ஒ..மை காட்!' என்று அதிர்ச்சியடைந்து, 'ஹீ இஸ் டெட்...நோ...நோ...நோ.. என்று கைகளை மூடி நெற்றியில் வைத்துக் கொள்வார்.
15 வருடங்களுக்குப் பின் பிரிந்த காதலியை சந்தித்து அவள் மீதுள்ள கோபம் தணியாமல், காதலும் குறையாமல், பின் அவள் கதை கேட்டு, அவள் மீது பரிதாபப்பட்டு, பின் கண்கூடாகவும் அவள் கணவனிடம் படும் சித்ரவதைகளையும் பார்த்து நொந்து போய், அவள் கணவனைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகி, உயர் போலீஸ் அதிகாரி என்ற கம்பீரத்தையும் குறைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் அற்புதமாகக் காட்டி தனது உன்னத நடிப்பால் இந்த 'திருப்பம்' படத்திற்கே இந்தக் காட்சியின் மூலம் 'திருப்பம்' தருகிறார் நம் நடிகர் திலகம்.
நான் மிக மிக ரசித்த காட்சி இது. 'திருப்பம்' படத்தின் ஆர்ப்பாட்டமான காட்சிகளுக்கு நடுவே கவிதையாய் ஒரு காட்சி இது.
'வெள்ளை ரோஜா' வெற்றியின் தொடர்ச்சி இந்தப் படம். 100 நாட்கள் வெற்றி கண்ட படம். 14.01.1984 பொங்கலுக்கு படம் ரிலீஸ். ஆனால் நாங்கள் கடலூரில் முந்தின நாள் 13-ம் தேதி இரவே 10 மணிக்கெல்லாம் படம் பார்த்து விட்ட பெருமையைப் பெற்று விட்டோம். கடலூர் கமலம் தியேட்டரில் ரிலீஸ். மிக நன்றாக ஓடியது. அந்த இரவுக் காட்சி மறக்க முடியாத ஒன்று. 'வெள்ளை ரோஜா'வின் வெற்றி வாசனையை அனுபவித்த நம் ரசிகர்கள் 74 நாட்கள் கேப்பில் மீண்டும் 'திருப்ப'த்தின் மூலம் திரும்ப வெற்றிக் கனியைச் சுவைத்தார்கள். நன் குறிப்பிட்ட அந்த ரசிகர் காட்சியில் ஆட்டோ ஆட்டோவாக லாட்டரி சீட்டு கவுண்ட்டர் பைல்கள், பூக்கூடைகள் வந்து இறங்கி தலைவர் சவப் பெட்டி இழுத்து அறிமுகமாகும் அந்த முரட்டுக் காட்சியில் அத்தனை கவுண்ட்டர் பைல்கள், உதிரிப் பூக்கள் என்று தலைவர் முகமே தெரியாத அளவிற்கு வாரி இறைக்கப்பட்டன. அவ்வளவு அமர்க்களம். பிரபு ரசிகர்கள் வேறு. கேக்கணுமா? எத்தனை பூக்கூடைகள்! எவ்வளவு சரவெடிகள்!
https://upload.wikimedia.org/wikiped...-Rehamfilm.png
1980-ல் வெளிவந்த 'பே-ரஹம்' என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தியில் சஞ்சீவ்குமார் செய்த ரோலை தலைவரும், சத்ருகன் சின்ஹா செய்த ரோலை பிரபுவும், சுஜாதா பாத்திரத்தை மாலா சின்ஹாவும், அம்பிகா பாத்திரத்தை ரீனாராயும் செய்திருந்தனர். நடிகர் திலகத்துக்கு போலீஸ் அதிகாரி பாத்திரம் அவர் செய்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டது. செம வித்தியாசம் காட்டியிருப்பார். இதற்கே முந்தின படத்தில் கூட ஃபாதர் ஜேம்ஸின் அண்ணன் போலீஸ் அதிகாரி ஜே.ஜே.அருள் என்னும் ஜான் ஜேகப் அருள்தான். அது வேறு, இது வேறு என்று வித்தியாசம் காட்ட இந்த தெய்வத்தை விட்டால் வேறு யார்?
சுசீலா பாடும் 'ராகங்கள்... என் ஜீவிதங்கள்' பாடல் கேட்க கேட்க அவ்வளவு இனிமை. பிரபு அம்பிகா ஆட்டம் போட்ட 'தங்க மகள்... துள்ளி வந்தாள்... புத்தாண்டு வாழ்த்துக்கள்' பாடல் சூப்பர் ஹிட். ஆடலும்தான். 'பாடகர் திலகம்' பாடும் 'எனை மறந்து பாடுவேன்' பாடலும் நல்ல பாடலே.
'எத்தனை ஸ்டார்கள் வந்தாலென்ன? என்றுமே நான் தான் தமிழ் சினிமாவின் திருப்பமே! அன்றிலிருந்து இன்றுவரை... அது நடிப்பிலும் சரி! வசூலிலும் சரி!' என்று வழக்கம் போல் தலைவர் மார் தட்டி நம்மை மார் நிமிர்ந்து நடக்க வைத்த இன்னொரு வசூல் படம். ஆரவாரப் படமும் கூட.