-
ஹாய் குட்மார்னிங் ஆல்..
ராஜ் ராஜ் சார். நான் கேட்டிராத பாட்டு.. சலசல ராக்த்திலே.. பட்டுக்கோட்டையார் எனப்து ஒரு போனஸ் தகவல்..வாவ்..
சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா
.
ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
அன்பு முகத்தைப் பாக்கணும்
.
.
பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே
மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ
*
எளிமையான் இசை..எளிமையான வரிகள்.. எளிமையான அழகுள்ள நடிகை (?)
தாங்க்ஸ்ங்கோவ்..
*
வாஸ்ஸூ.. நடுவில் உள்ளது லிஸ்ஸி போலத்தெரிகிறது..இந்தக் கார்னர் யார் எனத் தெரியவில்லை - கலர்ப்படத்தில்..
ப்ளாக் அண்ட் ஒய்ட்.. படம் தெரியவே இல்லீங்கோவ்..(மதுண்ணாவின் க்ளூவும் தலை சுற்றுகிறது..)
நெய்வேலி டு கோவை ரொம்ப தூரமோன்னோ..
*
ராஜ்ராஜ் சார் உங்களுக்காக..
https://youtu.be/Cnc0cHgUR4g?list=RD2sCowEs_Yuk
-
வாசு சார்,
ஏற்றி வைத்த தீபம் ஒன்று-என்னிடத்து வந்து நின்று-பார்த்து மகிழ்ந்த
தென்னவோ-பின்னர் பாராமல் போனதென்னவோ.
நடிகர் திலகம் கூறும் இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரினைக் கூறுங்கள்.
அன்புடன் கோபு
-
//விழியோரம் சில நேரம் கனவுகள் வருமோ நாயகியைப் பாருங்கள். என்னமாய் காமெரா ஸ்டேன்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார்! // நக்கீரன் பப்ளிகெஷன்ஸின் “ நடிகையின் கதை” படித்திருக்கிறீர்களா வாசு..
படித்தால் துக்கம் தொண்டையை அடைக்கும்.என்னால் முழுக்கப் படிக்க இயலவில்லை...சில நடிகைகளின் கஷ்டங்கள் எப்படியெல்லாம் துன்பப் பட்டார்கள் என்பது.. மாதுரியைப் பற்றியும் அதில் போட்டிருந்தார்கள்..முக்கால் வாசி நடிகைகளுக்கு வெள்ளித்திரைக்குப் பின்னால் வாழ்க்கை முச்சூடும் சோகம் தானா.. பாவம்..:sad:
-
Hearty welcome Vasu Sir to Coimbatore the city of Colleges, Motors and Pumps!! Nowadays not much of Tex mills!!
senthil and on behalf of senthilvel and raghulram and Dr Ramesh Babu!
-
Have fun in CBE vasu! :) The Coimbatore i knew till 1965 is not there anymore. Like any other city it is crowded and polluted. Too many shopping centers and hotels! In 2006 we visited CBE on our way to Cochin and stayed in Residency on Avinasi road. Nice hotel. When I lived there I used to fequent BBH(Bangalore Briyani Hotel). It was not there.
I am sure you will enjoy the stay ! :) Visit Marudamalai for a change !
-
கலர் பாடல்கள்
1.சிவப்பு விளக்கு எரியுதம்மா
2.மஞ்சள் முகம் நிறம் மாறி
3.பச்சை நிறமே
4.நீலக்குயில்கள் ரெண்டு
5.ஊதா கலரு ரிப்பன்
6.ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே
7.வெள்ளைப்புறா ஒன்று
8.கறுப்புதான் எனக்குபுடிச்ச கலரு
வேறு கலர்கள்?
-
செந்தில்வேல்.. இதோ..கலர்ஸ் :)
**
இசையும் கதையும்..
*
சின்னக் கண்ணன்.
*
கலர்ஸ்..
*
முன் கதைச் சுருக்கம் (?!) நான் சுந்தரா..அவள் மைவிழி.. இரண்டு அத்தியாயங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
*
3. நாடக மேடை…..திரையில்லை… நாயகி வந்தாள் கவி பாடி!
****************.
காதலில் மைவிழிப் பார்வையும் என் பார்வையும் எக்ஸ்சேஞ்ச் ஆகி உயிரும் எக்ஸ்சேஞ்ச் ஆகியிருந்தது என போன தடவை சொல்லியிருந்தேன்..
ஆனால் அப்படி உயிர் எக்ஸ்சேஞ்ச் ஆகியிருந்ததைப் புரிவதற்கே எனக்கு/engalukku ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியிருந்தது..
காதல் என்பது எந்தக் கணமும் பூக்கும் மலரும் என்பது உண்மை தான்..ஆனால் காதல்வயப்பட்டவர்கள் காதலனோ காதலியோ மற்றவர்களின் நினைவிலேயே உருகுவார்கள் என்பதெல்லாம் கதையில் நடக்குமே தவிர வாழ்க்கை என்பது வேறு..
எனக்கும் ஒரு சில கனவுகள் எல்லா வாலிபர்களைப் போல இருந்தது.. நிறையப் படிக்க வேண்டும்.. பெரிய பதவி, நிறையச் சம்பாதிக்க வேண்டும் என ஆசைகள் இருந்ததேயொழிய பெண்களின் நினைவுகள் அவ்வளவாக எழுந்ததில்லை எனலாம்..
பின்ன என்ன வர்ணிக்கவெல்லாம் செய்தாய் என்றால் என்னைப் பற்றி எழுதுபவர் செய்த செயல் அது..!
பின்னர் எங்கள் காதல் வளர்ந்த விதம் என்பதை விட எங்களுடைய சந்திப்புக்கள் ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்பது போல
அவள் என் வீடு வரும் பொழுதும், என் சகோதரி கல்யாணம் முடித்து ஒருவருடம் கழித்து வந்த போது அவளுடைய அக்கா பூவிழி வீட்டிற்குக் கூட்டிச் செல்லச் சொன்ன போதும் தொடர்ந்தது..
அப்போதும் கூட மையூவின் அழகெல்லாம் என் மனதில்புகுந்து இம்சிக்கவில்லை.. நெஜம்மா... நான் சொல்வதை நீங்கள் நம்பித் தானாக
வேண்டும்..
காதலனோ காதலியோ -தனிமையில் இருக்கும் போது மற்றவரை நினைத்துக் கனவு கண்டு எக்ஸ்ட்ரீம் எல்லைக்கெல்லாம் போவது என்பது ஒரு வகையில் ஹம்பக் தான்..மேக்ஸிமம் கொஞ்சம் ப்யாலஜிக்கல் நீட்ஸினால் கிளுகிளுப்பு தான் இருக்குமே யொழிய ரியல் லைஃபில்யாரும் கண்ணே மணியே கற்கண்டே கரும்புச் சாறே என்றெல்லாம் கனவு காண்பதில்லை..
தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவதை இல்லை நான் வந்தேன்
மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்…..
என்றெல்லாம் டூயட் பாடுவதில்லை..!
கொஞ்சமே கொஞ்சமாக ஈர்ப்பு இருக்கிறது எனத்தெரிந்து.. வழக்கம் போல ப்ரபோஸெல்லாம் பண்ணாம்லேயே ஒரு நாள் தனிமையில் – அவள் வீட்டில் தான் ஹேய் ஐ லவ்யூடி எனச் சொன்னபோது அவள ப்ளஸ்டூ முடித்துக் கல்லூரியில் சேர்ந்த்திருந்தாள்.. நான் கல்லூரி முடித்து ஐ.சி.டபிள்.யூ ஏ கரெஸ்பண்ண ஆரம்பித்திருந்தேன்..
யோசிக்கவெல்லாம் செய்ய்யாமல் மி..டூ சுந்தரா..பட் பேச்சு மட்டும் வச்சுக்கலாம் என்றாள் கைகளைப் பற்றியவாறு..
சின்னதாய்க் கண்ணிமைகள் படபடக்க பட் நான் காலேஜ் முடிக்கணும்.. நீ ஒரு குட் ஜாப்ல உட்கார்ந்து செட்டில் ஆகணும் தென் ஒன்லி வி கேன் கோ ஃபார் மேரேஜ்”என என் மனதில் உள்ளதையே சொல்ல நானும் கண் சிமிட்டி அங்கீகரித்தேன்..
இந்தக் கதையெல்லாம் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முந்தையவை எனச் சொல்ல அவசியமாகிறது..
மதுரையில் நிறைய இடங்கள் கிடையாது காதலர்கள் சுற்றுவதற்கு.ராஜாஜி பார்க், மீனாட்சி கோவில் ரொம்ப தூர அழகர் கோவில் என வெகுசிலவே அந்தக்காலத்தில்..எனில் எனக்குத் தெரிந்த அவளுக்கும் தெரிந்த ஒரு சீக்ரெட் இடத்தில் சம்டைம்ஸ் வீ யூஸ்ட் டு மீட்..
செய்ண்ட் மேரீஸ் பள்ளியிலிருந்து செய்ண்ட் ஜோசப் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சற்றே போய் உடனே வலது கைப்பக்கம் திரும்பும் சாலையில் கொஞ்சம் சென்று வளைந்தால் ஒரு இடுகாடு வரும்..அதையும் தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் பே எனப் பரந்து விரியும் மைதானம்..புல்தரைகள் மரங்கள் எல்லாம் இருக்கும்..அது நான் படித்த செ.மே. பள்ளிக்குச் சொந்தமானது என நினைக்கிறேன்..அங்கு தான் ஸ்போர்ட்ஸ் நாட்கள் எல்லாம் நடக்கும்..மற்ற் நாளில் ஈ காக்காய் இருக்காது..
(இப்போதும் அப்படியே இருக்கிறதா என்றும் தெரியாது)
என் வாழ்க்கையில் நடந்த்தைச் சொல்ல அந்த இடம் ஒரு அவசியமாகிறது..
என் வாழ்க்கையில் இருந்த அந்த நாளுக்கு உங்களை அழைத்துச் சென்றால்..:
என்ன நடக்கிறது..
https://youtu.be/yvbDJYvl1r0?list=PL...5QsJ3M37XN7STO
-
இசையும் கதையும்..
*
சின்னக் கண்ணன்.
*
கலர்ஸ்..
*
*
3. நாடக மேடை…..திரையில்லை… நாயகி வந்தாள் கவி பாடி!
**** தொடர்ச்சி..
***
“தன்முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்ப ப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின் முகம் கண்ணுள ஆகில், நீ இங்கே நோக்கிப் போ……
அதாவது மையூ, என் சன் கோவிந்த் இருக்கானே அவன் முகத்தில இருக்கற நெற்றிச் சுட்டியானது டபக் டபக்குனு பலதடவை அசையுது.அதில் உள்ள மணிகள் எல்லாம் கலகலன்னு ஒலியெழுப்புது அப்படியே தவழ்ந்து போய் டஸ்ட் டெல்லாம் அளைஞ்சுண்டிருக்கான்..ஓ..மூனே.. உனக்கு ஐஸ்னு ரெண்டு இருந்துச்சுன்னா இந்தப் புள்ளையோட கூத்தைப் பார்னு அர்த்தம்” என சீரியஸாக நான் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே “யே” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள் மைவிழி..
“யோவ்.. உன் பேர் என்ன”
“சுந்தரா” விழித்தேன்..
“என்ன பண்ற இப்போ..”
“ஐசிடபிள்யூ ஏ பண்றேன்.. இண்ட்ட்ர் ஓவர் ஃபைனல் ல ஒரு பேப்பர் பாக்கி”
“ஃப்யூச்சர்ல”
“கொஞ்ச நாள்ள துபாய் போய்டுவேன்..பாங்க் ஃபோன் இண்டர்வியூல தேறிட்டேனாம்.. அத்திம்பேர் சொன்னார்..விசா வந்துடும்.. அப்புறம் ஒரு வருஷத்துல வந்து உன்னைக் கட்டிக்கினு இஸ்துக்குவேன்.. சரி தெரிஞ்ச விஷயத்தை ஏன் கேக்கற”
“பேசாதே.. நான் யாரு”
“என்னோட ஐடெக்ஸ் கண்ணு..” முறைத்தாள்..
இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கேன்..
மீனாட்சி காலேஜ்ல பி.எஸ்ஸி பிஸிக்ஸ்.. செகண்ட் இயர் ..எத்தனை வருஷம் படிக்கப் போறயோ..
யோவ்.. இது என்ன இடம்..
என்னடி..கேள்வியா கேக்கற அவுட்க்ரெளண்ட்.. அதாவது செய்ண்ட்மேரிஸ் ஸ்கூலோட அவுட்க்ரவுண்ட்னு சொல்வாங்க..ஸ்போர்ட்ஸ்லாம் இங்க தான் நடக்கும்.. நாம இருக்கற இடம் அழகான நிழல் தரக்கூடிய மரத்தடி.. கொஞ்சம் வெய்யிலா இருந்தாலும் அதோட எஃபெக்ட் இங்க இல்லை.. பசும்புல் வெளில்லாம் இருக்கு..இன்னிக்கு வீக்டே ஆனதினால யாரும் விளையாட வரலை..
இந்த இடத்தைச் சொன்னது யாரு..
நீதான்
கூட்டிக்கிட்டு வந்தது
நான் தான்..
டேய்.. ஒரு சிறுவயசுப் பொண்ணு ஒரு வீக்டேல்ல ஷையெல்லாம் விட்டுட்டு ஸோ கால்ட் லவ்வரோட தனியாவந்தா என்ன அர்த்தம்..
ஸத்தியமா புரியலை எனச் சொல்லிச் சிரித்தேன்.. முறைத்தாள்
என்ன திடீர்னு பாசுரம்லாம் படிக்கற..
நீ தான் மூஞ்சை மூஞ்சைப்பார்த்துக்கிட்டிருந்த..ஒன் முத் கொடுக்கவும் விடமாட்டேங்கற.. தள்ளி பஃப்னு டாலாட்டமா உட்கார்ந்துண்டிருக்க ஏதாவது பேசேன்ன..இன்னிக்குக் காலைல கேட்ட எம்.எஸ் பாட் நினைவுக்கு வந்தது..அதான் சொன்னேன்..
யோவ்.. நீ எல்லாம் ஒரு ஆளு..ஒனக்கு நானொரு ஆளு.. ஒனக்குன்னு ஒரு வண்டி..
கொஞ்சம் தள்ளிப் பார்க் பண்ணியிருந்த என் லேம்ப்ரெட்டாவை முறைத்தாள்..
ஏன் இதுக்கென்ன குறைச்சல்.. என்ன பிக்கப்.. அண்ணா வச்சுருந்தான்..அவன் ராஜ் தூத் வாங்கிட்டதால் எனக்குக் கொடுத்துட்டான் .. நல்லாத்தானே இருக்கு.. சினிப்ரியா வரைக்கும் வந்தயே..ஒடம்பு வலிச்சதா என்ன..
நீ எங்கே என்னை ப் படம் பார்க்கவிட்டே..ச்சும்மா ச்சும்மா கை நீட்டிக்கிட்டிருந்த.. தட்டிவிடறதுக்கே டயம் சரியா இருந்துச்சு..ஆமா ராஜ்தூத்னா சொன்னே
ஆமாம்…
நான் மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருக்க அவள் சற்றே தள்ளி அமர்ந்திருந்தாள்..ரொம்ப தூரமும் இல்லை..ரொம்ப கிட்டவும் இல்லை..
இல்லை..இங்கருந்து பாக்கறச்சே ஒரு வண்டி இரண்டு மரத்துக்குப் பின்னால தெரியறது.. ராஜ் தூத்னு தான் நினைக்கறேன்.. உங்க அண்ணன் வண்டி என்ன கல.ர்..
சிகப்புக் கலர்..
ஹை..இதுவும் சிகப்புத் தான்.. குழந்தைத் தனமாகச் சொன்னாள்..
ஊர்ல ஆயிரத்தெட்டு சிவப்பு வண்டி இருக்கு
..கொஞ்சம் அனிச்சைச் செயலாய் எழுந்து எட்டிப்பார்த்தேன்.. வெளிறினேன்..
ஏனெனில் பக்கத்து மரத்தடியில் ராஜ்தூத் பக்கத்தில் இருந்தது…..என் அண்ணனே தான்..கூடவே இருந்தது…..பூவிழி!
https://youtu.be/ff2Xtqty4p4
தொடரும்.
-
//வாஸ்ஸூ.. நடுவில் உள்ளது லிஸ்ஸி போலத்தெரிகிறது..இந்தக் கார்னர் யார் எனத் தெரியவில்லை - கலர்ப்படத்தில்..//
இடது மாதுரி வலது அஸ்வினி.
-
மிக்க நன்றி ராஜ்ராஜ் சார். கோவை பற்றி பழைய மலரும் நினைவுகளா?
//Visit Marudamalai for a change ! //
முயற்சி செய்கிறேன் சார்.