http://i64.tinypic.com/2nvxkp4.jpg
Printable View
திரு ரவிகிரன்சூரியா அவர்களுக்கு,
மக்கள் திலகம் திரியின் 18-ம் பாகத்திற்கு
வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு
மக்கள் திலகம் திரியின் அனைத்து பதிவாளர்கள் சார்பாக
நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s7.postimg.org/mj7owd797/20f3...678d506894.jpg
Courtesy : Thiru Major Dasan
என்றென்றும் மக்கள் கதாநாயகன் - மக்கள் திலகம் எம்ஜிஆர் .
இந்திய சினிமாவில் மாபெரும் புரட்சியும் எழுச்சியும் உருவாக்கிய காவியம் மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை ''.
தென்னிந்திய திரை உலகில் அதற்கு முன் பல சாதனைகள் புரிந்த படங்களின் அத்தனை சாதனைகளையும் முறியடித்து மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக விட்டு விலகும் வரை சாதனையை தக்க வைத்து கொண்டார் . 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும் இப்படம் இன்னமும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுகிறது .தொடர்ந்து அவருடைய பல படங்கள் 1977 வரை ஒவ்வொரு ஆண்டும் பல சாதனைகள்புரிந்தது . திரை உலக முடி சூடா மன்னனாக நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக வாழ்ந்தார் .
1965ல் ''நான் ஆணையிட்டால் '' என்று பாடினார்
1966ல் '' கருணை - கடமை பொறுமை மூன்றும் இருந்தால் .தலைவன் ஆகலாம்'' என்று பாடினார்
1967ல் ''நன்மை செய்வதே என் கடமையாகும்நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
என்று சொனார் .
1968ல் ''நான் உங்கள் வீட்டு பிள்ளை '' என்று கூறினார்
1970ல் ''வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் ''என்று நிகழ் காலத்தையும் , எதிர்காலத்தையும் கணித்தார் .
1969ல் ''நினைத்ததை நடத்தியே முடிப்பவன் '' என்று பாடினார் .
1971ல் ''நானொரு கை பார்க்கிறேன் '' என்று அறை கூவல் விடுத்தார் .
1972ல் ''எல்லோர்க்கும் வழி காட்ட நான் இருக்கிறேன் '' என்று வரவேற்றார் .
1973ல் ''நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்'' என்று பிரகடனம் செய்தார் .
1974ல் '' நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் '' - என்று முழங்கினார் .
1975ல் '' நான் சபை ஏறும் நாள் வந்தது '' என்று முன் கூட்டியே தெரிவித்தார் .
1976ல் ''நாளை உலகை ஆள வேண்டும் '' என்று மக்களை அழைத்தார் .
1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று தமிழகத்தின் நிரந்தர கதாநாயகனாக வாழ்ந்தார் . மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார் . வாழ்வார் .
courtesy- fb.